வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

TTA COURT CASE-COURTESY-TNJ SSA


தமிழ்நாட்டில் TTA  நீதிமன்ற வழக்கு

     நமது தோழர்கள் 96 பேருக்கான TTA பாஸ் செய்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.   அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.

     1. கடந்த காலத்தில் சென்னை உயர்நீதி மன்றம்தான் இந்த தேர்வை ILLEGAL  என்று சொன்னதே தவிர, மாநில நிர்வாகம் நமது தோழர்களுக்கு எதிராக இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

     2. இந்த வழக்கை CAT க்கு மாற்றாமல் மதுரை உயர்நீதி மன்றத்திலேயே நடத்திட வேண்டுமென நமது தோழர்கள் வேண்டிக் கொண்டதை அடுத்து நிர்வாகம் மதுரை உயர்நீதி மன்றத்திலேயே நடத்த ஒத்துக் கொண்டுள்ளது.

     3. வக்காலத்து பைல் தாக்கல் செய்வதில் இருந்த காலதாமதம் தவிர்க்கப்பட்டுள்ளது.   மீண்டும் வழக்கு 01-08-2012 ல் வர இருக்கிறது.

     அப்போதைக்கப்போது  நமது மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நடராஜன் அவர்கள் இந்த வழக்கு சம்பந்தமான உதவியை மாநிலச் சங்கத்திடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.     சளைக்காமல் நமது மாநிலச் செயலரும் தலையிட்டு அதை சரி செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். 

     அனைத்து  தோழர்களுக்கும் TTA  POSTING கிடைத்திட தஞ்சை மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக