வியாழன், மே 22, 2014

CGM உடன் சந்திப்பு

ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகள் 
CGM உடன் சந்திப்பு 

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி, TMTCLU மாநிலத்தலைவர் தோழர்.ஆர்.கே., TMTCLU மாநிலச்செயலர்  தோழர்.செல்வம்,  தோழர்கள்.தமிழ்மணி, முரளி,காமராஜ் ஆகியோர், 
 மே 17 தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தையொட்டி தமிழக முதன்மைப் பொதுமேலாளரை  
சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

 "ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தொழிற்சங்க வரையறைக்குள் வராது" என்ற வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், 
CGM பொறுமையுடன் நமது கோரிக்கைகளை செவிமடுத்துள்ளார். 
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் ஒப்பந்தக்காரர்கள் என்ற இடைத்தரகர்கள் இருந்தாலும், முதன்மை முதலாளி 
PRINCIPAL EMPLOYER என்ற முறையில் BSNLலில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டபூர்வ சலுகைகளை உரிமைகளை அளிக்க வேண்டியது 
BSNL நிர்வாகத்தின் கடமையாகும். 
BSNL நிர்வாகம் தனது கடமையைச்செய்யும் என நம்புவோம். 
நாமும் ஒப்பந்த ஊழியருக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்

தோழர். KTK.தங்கமணி

மே - 2014
தோழர். KTK.தங்கமணி
அவர்களின் நூற்றாண்டு

ஓயாது உழைத்த உத்தமர்

கல்வி இருந்தும் பணிவு கொண்டார் ... 
செல்வம் இருந்தும் எளிமை கொண்டார் 
வீரம் இருந்தும் விவேகம்  கொண்டார்...
குணத்தில் தங்கமானார்...
கொள்கையில் நிறைகுடமானார்..
கதராடை மட்டுமே அணிவார்...
காலுக்கு செருப்பின்றி நடப்பார்..
கருப்பட்டிக்காப்பி குடிப்பார்..
செல்வ செழிப்பில் பிறந்திருந்தாலும்..
செல்லம் சோப்பில் துணி துவைப்பார்..
உழைப்பாளி மக்களுக்காக 
ஓயாது உழைத்த உத்தமர் 
KTK புகழ் பாடுவோம்...
19/12/2014 அன்று AITUC அலுவலகத்தில் நடைபெற்ற  100 வது  ஆண்டு  துவக்க விழாவில்  பட்டாபி,கோபாலக்ரிஷ்ணணன் ,புதுவை காமராஜ் ,சேலம் பாலு,சின்னசாமி ,உட்பட பலர் கலந்து  கொண்டனர் .

தோழர். உமாநாத்

சுதந்திரப்போராட்ட வீரரும் 
சிறந்த பொதுவுடைமைவாதியும் 
நீண்ட கால தொழிற்சங்கவாதியும் 
முன்னாள் சட்டமன்ற 
நாடாளுமன்ற உறுப்பினரும் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
மூத்த தலைவருமான 
தோழர். உமாநாத் 
அவர்கள் 
மறைவிற்கு நமது அஞ்சலி.