வியாழன், ஆகஸ்ட் 28, 2014

பணிக்குழு கூட்டம்

பணிக்குழு  கூட்டம்

02/09/2014 அன்று  ஈரோட்டில்  பணிக்குழு  கூட்டம்  நடை பெற உள்ளது.
சிறப்பு விடுப்பு  வழங்கப்பட்டுள்ளது .


புதன், ஆகஸ்ட் 27, 2014

TTA தேர்வு விதிகள் வெளியீடு

TTA  தேர்வு  விதிகள் வெளியீடு 

எதிர்பார்த்து  இருந்த  TTA  தேர்வு  விதிகள் வெளியீடு  செய்யப்பட்டுள்ளது
கல்வி  தகுதி குறைக்கப்படவில்லை . தகுதி  தேர்வு அனுமதி  இல்லை 10% WALKING  மறுப்பு .

http://nftevellore.org/BSNL%20Recruitment%20Rules%20of%20TTA%20of%202014.pdf

புதன், ஆகஸ்ட் 20, 2014

மாநிலச்செயலர் அறப்போர்

மதுரை அநீதி களைய 
மாநிலச்செயலர் அறப்போர் 


கால் சிலம்பு கழற்றி...
கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...
காலில்  விதிகளை போட்டு மிதிக்கும் 
கடமை மறந்த மதுரை நிர்வாகத்தினைக் 
கண்டித்து  மாநிலச்செயலர்
தோழர்.பட்டாபி 
28/08/2014 முதல் 

காலவரையற்ற  
உண்ணாவிரதம் 

தோழர்களே... 
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..
=============================================

புதன், ஆகஸ்ட் 06, 2014

demonstration 30/08/2014

J A C 
அனைத்து ஊழியர்கள் சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு 
30 அம்ச கோரிக்கைகள் 
கூடித்தொழில் செய்வோம்.. 

 • ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.
 • 01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.
 • புதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.
 • நாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
 • கருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.
 • LTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.
 • பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் பெறுதல்.
 • பதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.
 • JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.
 • BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
 • இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.
 • JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.
 • புதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.
 • விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.
 • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
 • MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.
 • TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
 • மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.
 • SC/ST  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.
 • SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.
 • DOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருதுதல்.
 • 01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.
 • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.
 • முதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.
 • TELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.
 • JTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.
 • 01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.
 • அனைத்து விதமான படிகளையும்  உயர்த்தி வழங்குதல்.
 • அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.
 • அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM  வழங்குதல்.
தோழர்களே..
கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகத்திடம்  மேற்கண்ட பிரச்சினைகள் மீது விவாதம் நடத்தியுள்ளது. 30 கோரிக்கைகளில் கடைசி கோரிக்கையான இலவச SIM மட்டும் நிர்வாகத்தால் தீர்க்கப்பட்டுள்ளது. 
30க்கு ஓன்று பழுதில்லை... 
ஆனாலும் மிக முக்கிய நீண்ட நாள் கோரிக்கைகள் 
இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. எனவேதான் 
07/08/20014 அன்று 
நாடு தழுவிய கோரிக்கை நாள் 
கூட்டு நடவடிக்கைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
"கூடித்தொழில் செய்வோம்"
 என பாரதி சொன்னான். நாமும்
கூடித்தொழில் செய்வோம்.. 
கூடித்துயர் தீர்ப்போம்.

சனி, ஆகஸ்ட் 02, 2014

அஞ்சலி

அஞ்சலி
நமது  முன்னாள் மாநில பொருளர் தோழர் கிருஸ்ணகுமார் மறைவுசெய்தி அறிந்து  கண்ணீர் மல்க இதயம்  கனத்த  அஞ்சலி யை  உரித்தாக்குகிறோம்

எளிமை, பணிவு, சோர்விலா  சங்க பணி ,சிரித்த முகத்துடன் தோழமை , அவருடன்  பணியாற்றிய அந்த  தருணங்கள் நினைத்து  கண்ணீருடன் 
கனத்த  அஞ்சலி யை  உரித்தாக்குகிறோம்.

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

ஊழியர் நல வாரியம்

ஊழியர் நல வாரியம் 
STAFF WELFARE BOARD 

BSNL ஊழியர் நலவாரியக்கூட்டம் 22/08/2014 அன்று டெல்லியில் 
CMD தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பில் சங்கத்திற்கொரு பொறுப்பாளர் கலந்து கொள்ள நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள்  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.


 • கல்வி உதவித்தொகை SCHOLARSHIP விண்ணப்பிப்பதற்கான அடிப்படைச்சம்பள நிர்ணயத்தை   உயர்த்துதல். REMOVAL OF BASIC PAY LIMIT.
 • பல கல்வி நிலையங்களில் மதிப்பெண்களுக்குப்  பதிலாக GRADE முறை அமுலில் இருப்பதால் புதிய வழிகாட்டுதல் அறிவிக்கப்பட வேண்டும்.
 • தற்போதுள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்துதல்.
 • குறைந்த வட்டியுடனோ, வட்டி இல்லாமலோ கல்விக்கடன் வழங்குதல்.
 • FASHION TECHNOLOGY படிப்பை கல்வி உதவித்தொகை பெற அங்கீகரித்தல்.
 • இறப்பு அன்று வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.25000/= என  உயர்த்துதல்.
 • இறப்பு அடையும் ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்குதல். இதற்காக மாதந்தோறும் காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்தல்.
 • நலவாரிய நிதி ஒதுக்கீட்டை  FUND உயர்த்துதல்.
 • ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான அன்பளிப்பை உயர்த்துதல்.
 •  நலவாரிய நிதி ஒதுக்கீட்டை விரைந்து முடித்தல்.
 • இயற்கை பேரழிவில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.10000/= உதவி அளித்தல்.
 • மனமகிழ் மன்றங்களுக்கான நிதி உதவியை ரூ.10000/= முதல் 30000/= வரை வழங்குதல்.
 •  சுற்றுலா செல்ல வழங்கப்படும் உதவித்தொகை 2002ல் நிர்ணயம் செய்யப்பட்டது. இது உடனடியாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். 90 சத செலவு ஈடுகட்டப்பட வேண்டும். 2000 KM வரை சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
 • ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தை உயர்த்துதல்.
 • கிர் காடுகள்,டாமன் டையு மற்றும் போர்பந்தரில் HOLIDAY HOME விடுமுறை வீடுகளை கட்டுதல்.
 • ஓய்வு பெற்ற ஊழியர்களை நலவாரிய உறுப்பினர்களாக அனுமதித்தல்.
 • நலவாரிய உறுப்பினர் காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்துதல்.

வாழ்த்து கிறோம்

மத்திய  அரசின் கூட்டு றவு  துறை நமது டெலிகாம் கூட்டு றவு

 சங்கத்தை  சிறந்த  நிர்வாகத்திற்கும்  இந்திய  நேபாள்  நட்புறவு

அவார்ட் வழங்கிட  தேர்ந்தடுத்து ள்ளது .ஆகஸ்ட்2 ம் தேதிஅவார்ட்

வழங்கப்படள்ளது சங்கத்தலைவர்  தோழர் வீரராகவன்  அதை பெற உள்ளார்

.அவரை \வாழ்த்து கிறோம் மேலும் அவார்ட் வழங்கிட உருதுனையாக இருந்த

இயக்குனர்கள் ,உறுப்பினர்கள் ,ஊழியர்கள்  அனைவரையும்  பாராட்டுகிறோம் .