செவ்வாய், டிசம்பர் 03, 2013

விழிப்புணர்வுக்கூட்டம்

நவம்பர் 30
விழிப்புணர்வுக்கூட்டம் 

நவம்பர் 30 அன்று டெல்லியில் 
BSNL நிறுவனத்தை  மேம்படுத்துவதற்காக 
அனைத்து சங்கங்களும் BSNL உயர்மட்ட அதிகாரிகளும் 
கலந்து கொண்ட விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

 • BSNLன் வருவாய் பெருக்கப்படவேண்டும்.
 • சில இடங்களில் உபகரணங்கள் இருந்தும் சேவை தரப்படாத நிலை மாற்றப்பட வேண்டும்.
 • செல் கோபுரங்களின் செயல்பாடு செம்மைப்படுத்தப்படவேண்டும்.
 • தொலைபேசி துண்டிப்பு DISCONNECTION நிறுத்தப்பட வேண்டும்.
 • 2.5 லட்சம் ஊழியர்களும் நமது BSNL பொருட்களை விற்பனை செய்ய தயாராக வேண்டும்.
 • வருவாய் பெருக்கத்தில் பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட்,சென்னை , கொல்கத்தா போன்ற மாநிலங்கள்  முன்னேறிட  தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்க  வேண்டும்.
 • அடையாளம் காட்டும் தொலைபேசிக்கருவிகளும் ,  கேபிள்களும் தேவைக்கேற்ற அளவு அந்தந்த மாநிலக்கிடங்குகளில் உள்ளன. அவற்றை பயன்படுத்துதல் வேண்டும்.
 • மேற்கு பகுதிகளில் WESTERN ZONE வேண்டிய உபகரணங்கள் வாங்கும் பணி துரிதப்படுத்த படவேண்டும்.
 • BSNL செல் கோபுரங்களை தனியாருக்கு வாடகைக்கு விட வேண்டும்.
 • அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட வேண்டும்.
 • மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.
 • ENTERPRISE BUSINESS எனப்படும் நிறுவன சேவை வணிகம் மேம்படுத்தப்பட வேண்டும்.
 • LEASED CIRCUITS வாடகைச்சுற்றுக்கள் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
 • கிராமப்பஞ்சாயத்துகளை NOFN - NATIONAL OPTICAL FIBER NETWORK மூலம் இணைத்து இணையதள சேவை அளிக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
 • முன்னேறியுள்ள 44 தொலைத்தொடர்பு மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் உபரியாக உள்ள கருவிகளை தேவையான இடங்களுக்கு பயன்படுத்திட வேண்டும்.
 • BROAD BAND அகன்ற அலைவரிசை சேவையில் பழுதுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாய் குறைவு ஏற்பட்டு வருகின்றது. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
 • வருவாயின் அடிப்படையில்  SSA எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும்.

news


மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு
நாள்:-05/12/2013-வியாழன்- காலை10 மணி-சங்க அலுவலகம்
தலைமை: தோழர்:அ.மகேஸ்வரன்,மாவட்டத்தலைவர்,
ஆய்படு பொருள்
Ø சங்க அலுவலகம் திறப்புவிழா
Ø ஒலிக்கதிர் 50 வது ஆண்டு பொன்விழா
Ø பிரச்சனைகள்
Ø நிதிநிலை
Ø  இதரதலைவர் அனுமதியுடன்
Ø  அனைவரும் வருக!
தோழமையடன்,
ப.காமராஜ்,
மாவட்டசெயலர்

28/11/2013,புதுச்சேரி.