திங்கள், ஆகஸ்ட் 31, 2015

இலட்சம் வாழ்க... வாழ்க.. வாழ்க..
31/08/2015
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

தங்கம் நிகர் தலைவன் அவன்
தரத்தில் உயர் மனிதன் அவன் 

தோழமை போற்றிய உடன்பிறப்பு அவன் 
உடன்பிறவாத் தோழன் அவன்...

கைகளுக்குள் கட்டுண்ட கதிரவன் அவன் 
கரை வேட்டி கம்யூனிஸ்ட் அவன் 

கையில் கதிர் அரிவாள் ஏந்தும் உழவன்  அவன்..
 நித்தமும் சூரியனை வணங்கும் பக்தன்   அவன்.. 

பூவின் இடத்தில் பொன்னானவன் அவன்.. 
நூறின் இடத்தில் லட்சமானவன் அவன்..

சப்பைக்கட்டு அறியாத சண்டமாருதம் அவன் 
சபைக்கட்டு அறிந்த சபாநாயகன் அவன்..

கம்பத்தின் கதாநாயகன் அவன் 
தமிழகத்தின் தலைநாயகன் அவன் 

இராமனிடம் நேசம் கொண்ட லட்சுமணன் அவன்.
ஈரேழு  மாநிலத்திலும்  ஈடாகா லட்சம் அவன்...

காலங்களில்   நூறு கண்டு 
கலைகளில் ஆயிரம் கண்டு 
கடமைகளில்  லட்சம் கண்டு 
இலட்சம் 
வாழ்க... வாழ்க.. வாழ்க..

அன்புடன் வாழ்த்தும் 
NFTE   BSNL 
காரைக்குடி மாவட்டச்சங்கம்.

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

வாழ்த்துகிறோம்.


வாழ்த்துகிறோம்.

 அ.இ.சங்கத்தின் மாநாடு 30/09/2014 தேதிகளில் சோலாப்பூர் மஹா ராஸ்டிரா  என்ற இடத்தில் நடை பெற்றது.
அமைப்பு பிரச்சனை என சிலர் முட்டுகட்டை போட்டாலும், சிலர் பக்(கா)க பலமாக நின்றாலும் நிர்வாகம் 6 மாதகாலத்திற்க்கு தோழர்கள் P.N பெருமாள் தலைவராகவும், ND  ராம் செயலராகவும் கொண்ட பட்டியலை அங்கீகரித்துள்ளது. 30/03/2016 க்குள் மாநாடு நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தடுக்க நிர்வாகம் கூறியுள்ளது.
தோழர்கள் P.Nபெருமாள் , மற்றும் ND ராம் அவர்களை வாழ்த்துகிறோம்.

STRIKE MEETING 26/08/2015

சிறப்பு  கூ ட்டம்  26/08/2015 

வேலை நிறுத்த ஆயத்த சிறப்பு  கூ ட்டம்  26/08/2015 அன்று நடை பெற்றது.

போரம்  தலைவர்  காமராஜ்  தலைமை ஏற்க  சுப்பிரமணியன் 

 வரவேற்புரை  நல்கினார் .

தோழர்கள்  பிர்லின் இசக் 

 தஞ்சை  நடராஜன் மாநில  உதவிசெயலர் ,NFTE,

பாபு ராத கிருஷ்ணன்  BSNLEU  மாநிலசெயல்ர்  ஆகியோர்  உரை 

ஆற்றினார்கள்.

100 தோழர்கள்  பங்கேற்று  சிறப்பித்தனர் .

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்  மாவட்ட மாநாட்டை வரும் செப் 28 (அ) 29 தேதிகளில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சார்பாளர் கட்டணம் ரூ100/- அனைவரும் சார்பாளர்கள் என தீர்மானிக்கப்பட்டது.  வெளிப்புறக்கிளைக்கு தோழர்கள் தனுசுராமன்,கிருஸ்ணன், குமணன், உட்புறக்கிளைக்கு தோழர்கள் ஸ்ரீதர்,ஹரிஹரன், சுவாமிநாதன், க்ருப்ஸ் கிளைக்கு தோழர்கள் நாகலிஙம், பெரியண்ணசாமி, காசிநாதன் ஆகியோர் சார்பாளர்கள் கட்டணம் வசூலிக்க,சார்பாளர்கள் பெயர் பதிவுசெய்து ,கிளைசெயலர் மூலமாக அனுப்ப பொறுப்பாக செயல்படவேண்டும்..  மாநாட்டுக்கு / மாவட்ட சங்கத்திற்க்கு நன்கொடை ரூ500/ வசூலிக்கலாம் என்ற தோழர் ராஜாமணி ஆலோசனை ஏற்க்கப்பட்டு உறுப்பினர்களிடம் நன்கொடை கோர திட்டமிடப்பட்டது.  மாநாட்டு வழிகாட்டும் குழுவாக தோழர்கள் மகேஸ்வரன், ஹரிஹரன்,தண்டபாணி, செல்வரஙம் புஸ்பராஜ், தங்கமணி,ராஜாமணி,கிளைசெயளர்கள் கிருஸ்ணன்,நாகலிஙம், ஸ்ரீதர், மாவட்டசெயலர் காமராஜ் மற்றும் அசோகராஜன் செயல்படுவாரகள்.  தோழர்கள் மகேஸ்வரன் ,ஹரிஹரன் பதவி விலகல் கடிதம் ஏற்க்கப்படவில்லை, தோழர் காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் குழு சென்று மீண்டும் அவர்களை சென்று சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது.  தோழர் டி.குணசேகரன் மாவட்ட மாநாட்டுக்கு சாப்பாட்டு செலவு ரூ10,000/=பொறுப்பை ஏற்றுகொண்டார், வழங்கியுள்ளார்.அவரை செயற்குழு பாராட்டுகிறது.  செப் 2 அ இ வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்திட தொலைபேசியக கூட்டங்கள், சிறப்புக்கூட்டம், உள்ளிட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட திட்டமிடப்பட்டது.  தோழர்கள் எஸ்.சந்திரபாலன், டி.குணசேகரன் பணிஓய்வு பாராட்டு நடத்தப்பட்டது.  அஞ்சல் அட்டை இயக்கம் வெற்றிகரமாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. செய்திகள் 1) தோழர்கள் G.மனோகரன், K.முரளி, K.சரவணன் ஆகியோர் TTA போட்டிதேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. 2) டெல்லி மாநிலசெயலர்கள் கூட்டமுடிவு அடிப்படையில் உறுப்பினர் சரிபார்ப்புக்கு தயாராகவேண்டும். 3) மாநில செயற்குழுகூட்டம் செப்23 தேதியில் மயிலாடுதுறையில் நடைபெறும்.

மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்

v  மாவட்ட மாநாட்டை வரும் செப் 28 (அ) 29 தேதிகளில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சார்பாளர் கட்டணம் ரூ100/- அனைவரும் சார்பாளர்கள் என தீர்மானிக்கப்பட்டது.

v  வெளிப்புறக்கிளைக்கு தோழர்கள் தனுசுராமன்,கிருஸ்ணன், குமணன், உட்புறக்கிளைக்கு தோழர்கள் ஸ்ரீதர்,ஹரிஹரன், சுவாமிநாதன், க்ருப்ஸ் கிளைக்கு தோழர்கள் நாகலிஙம், பெரியண்ணசாமி, காசிநாதன் ஆகியோர் சார்பாளர்கள் கட்டணம் வசூலிக்க,சார்பாளர்கள் பெயர் பதிவுசெய்து ,கிளைசெயலர் மூலமாக அனுப்ப பொறுப்பாக செயல்படவேண்டும்..

v  மாநாட்டுக்கு / மாவட்ட சங்கத்திற்க்கு நன்கொடை ரூ500/ வசூலிக்கலாம் என்ற தோழர் ராஜாமணி ஆலோசனை ஏற்க்கப்பட்டு உறுப்பினர்களிடம் நன்கொடை கோர திட்டமிடப்பட்டது.

v  மாநாட்டு வழிகாட்டும் குழுவாக தோழர்கள் மகேஸ்வரன், ஹரிஹரன்,தண்டபாணி, செல்வரஙம் புஸ்பராஜ், தங்கமணி,ராஜாமணி,கிளைசெயளர்கள் கிருஸ்ணன்,நாகலிஙம், ஸ்ரீதர், மாவட்டசெயலர் காமராஜ் மற்றும் அசோகராஜன்  செயல்படுவாரகள்.

v  தோழர்கள் மகேஸ்வரன் ,ஹரிஹரன் பதவி விலகல் கடிதம் ஏற்க்கப்படவில்லை, தோழர் காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் குழு சென்று மீண்டும்  அவர்களை சென்று சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது.

v  தோழர் டி.குணசேகரன் மாவட்ட மாநாட்டுக்கு சாப்பாட்டு செலவு ரூ10,000/=பொறுப்பை ஏற்றுகொண்டார், வழங்கியுள்ளார்.அவரை செயற்குழு பாராட்டுகிறது.

v  செப் 2 அ இ வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்திட தொலைபேசியக கூட்டங்கள், சிறப்புக்கூட்டம், உள்ளிட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட திட்டமிடப்பட்டது.
v  தோழர்கள் எஸ்.சந்திரபாலன், டி.குணசேகரன் பணிஓய்வு பாராட்டு நடத்தப்பட்டது.

v  அஞ்சல் அட்டை இயக்கம் வெற்றிகரமாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

செய்திகள்

1)       தோழர்கள் G.மனோகரன், K.முரளி, K.சரவணன் ஆகியோர் TTA போட்டிதேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது.
2)       டெல்லி மாநிலசெயலர்கள் கூட்டமுடிவு அடிப்படையில் உறுப்பினர் சரிபார்ப்புக்கு தயாராகவேண்டும்.
3)       மாநில செயற்குழுகூட்டம் செப்23 தேதியில் மயிலாடுதுறையில் நடைபெறும்.TTA exam results

TTA இலாக்காத்தேர்வு முடிவுகள் 

07/06/2015 அன்று நடைபெற்ற 
TTA இலாக்காத்தேர்வு 
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் உள்ள  439 காலியிடங்களுக்கு 
74 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். 
இரண்டு தோழர்களின் முடிவுகள் 
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுவை மாவட்டத்தில்  3 தோழர்கள்  வெற்றி பெற்றுள்ளனர் )       தோழர்கள்  G.மனோகரன், K.முரளி, 

K. சரவணன் ஆகியோர் TTA போட்டிதேர்வில்

வெற்றிபெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட 

சங்கம் பாராட்டுகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

அஞ்சலி

 அஞ்சலி 
நமது சம்மேளனத்தின்  தலைவராகவும் , தந்தி பிரிவு தலைவராகவும், செயல்பட்டு  மே வங்க , கல்கத்தா மாநில முன்னணி தலைவராகவும் திகழ்ந்த  தோழர்  பாவல்   இன்று  21/08/2015 மறைந்தார் . அவருக்கு நமது  ஆழ்ந்த  அஞ்சலி

கூட்டுறவு சங்க போலிகள் போராட்டம்

சென்னை ஊழியர் சங்க கூட்டுறவு சங்க செயல்பாட்டில் தலையிடுவது, BSNLEU  சங்க கட்டுபாடில் சென்ற காலம் போல வைத்திருப்பது என்பது நமது சங்க கருத்துக்கு ஏற்புடையதல்ல. அதன் தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதன் முழு செயல்பாட்டுக்கு பொறுப்பு ஆவார்கள். பல சங்க ஊழியர்கள் பங்கேற்று  நடத்தும்  அமைப்பில் ஓரு சங்க தலையீடு ,அச்சுறுத்தல் என்பது நோக்கமுடையது.

  • 16% மட்டுமே வட்டி என்பதை மறைத்து 16.5% என் பொய் பிரச்ச்சாரம் செய்வது காலம் காலமாக இவர்களது வாடிக்கை. 5 லட்சம் கடன் உயர்வு காரணமாக ICICI வங்கியில் கடன் பெற்ற பொழுது 16.5% வட்டியை உயர்த்திய பொழுது அமைதி காத்து, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி ஏற்று கொண்ட்து ஏன் ? கடன் செலுத்தியபின் வட்டியை 2  % குறைத்த பொழுது நிர்வாகம் நலிந்துவிடும் என பேசி வட்டியை குறைக்க கூடாது என பேசியவர்கள்(நடவடிக்கை குறிப்பு) இன்று அவரே வட்டி குறைக்க மனு கொடுத்து, புகைப்படம் எடுத்து, சாகவாசமாக  நாடகம் நடத்தியுள்ளனர்.
  • THRIFT FUND  வட்டி 8% மிருந்து 9 % ஆக உயர்த்தியதை, முடிவை அனைத்து பகுதியிலும் அனைவரும் சுற்ற்றிக்கை அனுப்பியதை மறைத்து, புதிய கண்டுபிடிப்பாக கூறுவது நோக்கமுடையது.
  • பொதுவான RGB கையழுத்து பெறுவதாக , சங்கமற்று கையழுத்து பெறுவதாக கூறி,  கையழுத்து பெற்றவர்கள் அதை ஒரு சங்க  போராட்டமாக ஏமாற்றுவது ஏன்? அதில் கூட பல நூறு கையழுத்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அல்ல.  சென்னையில் இதை சங்க  போராட்டமாக ஏன் நடத்துவதில்லை?  சென்னயில் மாற்று கருத்தா?
  • தேர்தலுக்கு முன் 6 ஆண்டுகாலம் இருந்தபொழுது ஏதும் செய்யமுடியாதவர்கள், இன்று மனை பற்றிபேசுவது வெறும் பொழுது போக்கு மட்டுமே.
  • இவை எல்லாம் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமே. உறுப்பினர் சங்க தேர்தலுக்கு தயார் செய்யும் பொய் பிரச்சாரம் துவக்கமே இது ஆகும். சங்கதேர்தலுக்கு வேறும் ஏதும் இல்லை என்பதால் இது கையில் எடுக்கப்பட்டுள்ளது.
  • சங்க கூட்டுறவு சங்க செயல்பாட்டை தேர்ந்தடுக்கப்ப்ட்ட RGB, இயக்குநர்கள் இயக்கட்டும்.ரிமோட் கண்ட்ரோல் முறை மற்றும் அச்சுறுத்தல் தேவையற்றது. BSNLEU சங்க தலையீடு திட்டமிட்ட நோக்கத்துடன் செய்யப்படுவதை தவிர்ப்போம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2015

பிரச்சனைகள்

பொது மேலாளர்/துணைப்பொது மேலாளர்/கோட்டபொறியாளர் ஆகியோரிடம் விவாதித்த பிரச்சனைகள்
1)       வில்லியனுர் ஊழியர்கள் ஓய்வறை-வசதி
2)       கேபிள் பழுது நீக்கம்.சிறியஅளவிலான கொட்டேசன் அடிப்ப்டையில் பழது நீக்கப்படும்
3)       ட்ராப் வயர், பழுதுகள் நீக்க தேவையான அடிப்படையில் வழங்கப்படும்.
4)       காலத்தில் ஊழியர்களுக்கு உபகரணங்கள் வழங்குவது.
5)       கோட்டபொறியாளர் மட்ட ஊழியர் ,நிர்வாகம் கூட்டம் நட்த்தி சேவைகுறைபாடுகளை கேட்டறித்ல்
6)       அனைத்து தொலைபேசி நிலையத்திலும் கழிவறை பராமரிப்பு
7)       டவுன் பகுதி அலுவலகத்தை பழைய A/O அலுவலகத்திற்க்கு மாற்றுதல்.
8)       மிகுதி நேரப்படி பட்டுவாடா
9)       CSC  பணி கலாச்சாரம், ஊழியர்பற்றாக்குறை
10)    SALES,UDHAAN,BTS பகுதி விருப்ப மாற்றல், மறுசீரமைப்பு.
11)    தொலைபேசி பில் வசூல் கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடு.
12)    AC பழுது காரணமாக D-SLAM,BB  பழுதுகள் நீக்கம்.
13)    OFC/MTCE ,  VIN CSC க்கு T M நியமனம்.
14)    ஊழியர் விருப்பமாற்றல்கள்.
15)    தற்காலிக மாற்றல் நீட்டிப்பு
16)    தோழர்  ADS  விதி 8 மாற்ற்ல்

தலமட்டக்குழு  பழைய பிரச்சனைகள்

1)       சங்க அலுவலகத்திற்க்கு கணிப்பொறி
2)       ஊழியர் சீருடை வழங்குவது
3)       மூலக்குளம்   MDF   
4)       ஊழியர்களுக்கு ESS பயிற்சி

தலமட்டக்குழு புதிய பிரச்சனைகள்
1)       VIN/MTP-CSC க்கு கூடுதல் ஊழியர்கள்,சேவைமேம்படுத்துவது,புதிய CSC திறப்பது.
2)       4 வருடம் முடித்த ஊழியர்களுக்கு BTS/ உதான்/சேல்ஸ் பகுதி விருப்ப மாற்றல்,
3)       மருத்துவ வசதி –குடும்ப பெயர்கள் சரி செய்வது, தகுதியற்றவர்கள் பெயர் நீக்கம்.
4)       ஊழியர்களுக்கு உபகரணங்கள் வழங்குவது
5)       அனைத்து தொலைபேசி நிலையத்திலும் கழிவறை பராமரிப்பு
6)       RLU/RSU தொலைபேசி நிலையங்களுக்கு பிரிண்டர் வசதி
7)       CORPORATE அலுவலக உத்திரவுப்படி சம்பளபட்டியல் வழங்குவது
8)       பழைய கணக்கதிகாரி அலுவலகத்திற்க்கு மாற்றுவது.
9)       கட்டிடங்கள் வாடகைக்கு விடுதல்.
10)    கம்பியூட்டர்/ஸ்கூட்டர் முன்பணம் வழங்குதல்
11)    ஊழியர்களுக்கு ACR குறிப்பு வழங்குதல்,
12)    ஊனமற்றவர்களின் உயர்த்தப்பட்டபோக்குவரத்துப்படி வழங்குதல்
13)    ஊழியர்களுக்கு மாநிலக்குழு முடிவுபடி பேக் வழங்குதல்.
14)    கள்ள நோட்டு கண்டுப்டிக்கும் கருவி கேசியருக்கு வழங்குதல்
15)    செல் எண்கள் பெயர் மாற்றம் எளிதாக்குதல்.
16)     சங்க அலுவலகம் புதுபித்தல்.
17) தொலைபேசி நிலைய  MDF எண்களுக்கு CUG சேவை வழங்குதல்

சனி, ஆகஸ்ட் 15, 2015

STRIKE NOTICE SEP 02-2015தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL, பணிஓய்வு 31/08/2015தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL,
பணிஓய்வு 31/08/2015
மதுராந்தகத்தில் இலாக்கா பணி துவக்கி, கிளைசெயலர்,மாவட்ட சங்க நிர்வாகி என காஞ்சி, செங்கை, மாவட்டங்களில் இயக்க பணி ஆற்றி
மதுரை மாவட்ட சங்கத்தில், மாநில சங்கத்தில் பணி ஆற்றி இந்த மாதம் பணி ஓய்வு பெறும்  தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL, அவர்களை வாழ்த்துகிறது புதுவை மாவட்ட சங்கம் .

மாவட்ட செயற்குழு

NFTE- BSNL, PUDUCHERRY-SSA
மாவட்ட செயற்குழு
19/08/2015 - சங்க அலுவலகம் – காலை 0900 மணி

வரவேற்புரை:-  தோழர். ப.காமராஜ், மாவட்டசெயலர்,

அஞ்சலி உரை:- தோழர் . மா. செல்வரஙகம் மாவட்டஉதவிச் செயலர்,

ஆய்படு பொருள்

Ø அஞசல் அட்டை இயக்கம்

Ø செப்-2 வேலைநிறுத்தம்
Ø மாவட்ட மாநாடு தேதி-இடம்-
Ø சார்பாளர்கள் தேர்வு
Ø சார்பாளர் கட்டணம்
Ø பிரச்சனைகள்
Ø பணி ஓயவு பாராட்டு
தோழர்கள் சந்திரபாலன், D.குணசேகரன்
Ø இதர தலைவர் அனுமதியுடன்,
அனைவரும் வருக,
நன்றியுரை


 தோழமையுடன் ,ப.காமராஜ், மாவட்டசெயலர்

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

AUGAUST 15 GREETINGS
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ்1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம்இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம்,அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.
சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துறப்பதை குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துறந்து, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருமத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.
பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால்தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 171968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.

DELHI MEET PHOTOS

COURTESY MEET WITH  COM A.B. BHARADHAN,S.SUDHAKAR REDDY, AND COM G.L.DHAAR AT DELHI
வாழ்த்துகிறோம்


வாழ்த்துகிறோம் 

புதுவை  மாவட்டத்தில்  5 கீழ்கண்ட  தோழர்கள்  JTO ஆக  தேர்ச்சி  பெற்றுள்ளனர் .
1)   குமரகுரு 
2)   முகுந்தன் 
3)   புகழேந்தி 
4)  பிர்லின்  இசாக் 
5)  கண்ணன் 
நமது  வாழ்த்துக்கள் 

மாநிலசெயலர் கூட்டத்தில்

மாவட்ட செயலர்  காமராஜ்  அ .சிறப்பு பிரதி நிதி அடிப்படையில்  டில்லி  
மாநிலசெயலர் கூட்டத்தில்  கலந்து  கொண்டார் .
டவர்  துணை  நிறுவனம்  அமைப்ப்ததை  தடுப்பது, பிராட் பேண்டு  சேவை ,பழுது  நீக்கம்  தனியார்மயம்,டிலாஇடெடி கமிட்டி பாதகபரிந்துரை  எதிர்ப்பு ,போனஸ் ,கேடர் பெயர் மாற்றம், செப் 2 அ  இ வேலைநிறுத்தம்  ஆகிய பிரச்சனைகளின் மீது விவாதம், தீர்மானம்  கொண்டுவரப்பட்டது .
நவ 01-03  மத்திய  செயற்குழு  அவுரங்கபாத்  நகரில்  நடைபெற உள்ளது .
உறுப்பினர்  சரி பார்ப்பு தேர்தல்  குறித்து  விவாதிக்கப் படும்.

மாநிலங்கள்  கிளை  செயலர்  கருத்தரங்குகளை  நடத்திட திட்டமிடவேண்டும் 

அதை  தொடர்ந்து பிராட் பேண்டு  சேவை ,பழுது  நீக்கம்  தனியார்மயம், குறித்த  நிர்வாக கூட்டம் ,டவர் துணை  நிறுவனம்குறித்த  நிர்வாக கூட்டம் நடை பெற்றது .

கார்ப்பரேட் அலுவலகம்  தோழர் இஸ்லாம்  அவர்களுடன்  சென்று  புதுவை  விளையாட் டு  வீரர்  பதவி உயர்வு, JAO தேர்வு பெற்றவர்களின் கோரிக்கை  குறித்து  விவாதிதுள்ளோம் .
திருச்சி மாவட்ட' மாநாடு


திருச்சி மாவட்ட' மாநாடு  வெற்றியாக  முடிவுற்றது 
மிக  பெரிய  மாவட்டம்  வரும் உறுப்பினர் தேர்தலில் அதிக  வாக்குகளை  பெற  திட்டமிட்ட  வேண்டும் 
திருப்பங்களின் இடம் திருச்சியாகும்...
திருச்சி NFTE மாவட்ட மாநாடு..
ஒற்றுமையை நோக்கி.. 
நம்மைத் திருப்பியுள்ளது...இணைந்த கரங்களாய்... இனிய நெஞ்சினாய்..
ஒன்றுபட்ட நிர்வாகிகள் தேர்வு... என 
புதுக்கோட்டையில் நடைபெற்ற 
திருச்சி மாவட்ட மாநாடு 
புதுமை படைத்துள்ளது... 
இனிமை நிறைத்துள்ளது..

மாவட்டச்செயலராக 
தொடர்ந்து... பணி  தொடரும்.. 
தோழர்.பழனியப்பன்..
பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்டத் தலைவர் தோழர் P.சுந்தரம், 
மாவட்டச் செயலர் தோழர் S.பழனியப்பன், 
பொருளர் தோழர் G. ஆண்டிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.