செவ்வாய், அக்டோபர் 16, 2012

தமிழ் மாநில செயற்குழு-07/10/2012-மதுரை

தமிழ் மாநில செயற்குழு-07/10/2012-மதுரை
மதுரை தமிழ்மாநில செயற்க்குழு கூட்டம் தோழர்.தமிழ்மணி தலைமையில் துவங்கியது. தோழர்முருகேசன் துவக்க உரை நிகழ்த்த, தோழர் லட்சம் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
குடந்தை ஜெயபால் துவக்கவுரையில் மாநாடு நடத்திட உத்வேகத்தை ஊட்டும் உரை நிகழ்த்தினார். தோழர் சேது  மாநாடு தயாரிப்பு பணிகளை விவரித்து தோழர்களின் நிதி மற்றும் ஒத்துழைப்பை கோரி உரை நிகழ்த்தினார்.
மாநிலசெயலர் அறிமுக உரை மற்றும் மாவட்டசெயலர்களின் உரைக்கு பின்னர் நிகழ்த்திய உரை அம்சங்கள்.

Ø  78.2% இணைப்பு குறித்த DOT கோரிய விளக்கங்களுக்கு  BSNL  தகுந்த விளக்கங்களை விரைவில் வழங்கி 78.2% இணைப்பு பெற மத்திய சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Ø  புதிய அங்கீகார விதிகள் குறித்த 16/10/2012 கூட்ட முடிவுகள் இராண்டாவது சங்க அங்கீகாரம் இறுதிசெய்யும்.முடிவு வராவிட்டாலும் தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்.
Ø  NE-12-பதவி உயர்வு ஒரு சில ஊழியர்களுக்குமட்டுமெ பலனளிக்கும். பணி ஒய்வுக்கு முன்னர் நாம் பெற்று வந்த ஒரு ஆண்டு உயர்வுத் தொகை அனைத்து கேடருக்கும் கிடைக்கும் NE-12-புதுவையில் 5 ஊழியர்கள் மட்டுமே 2019 வரை பலன் பெறுவார்கள்.  கேடர் பலன் பெற முடியாது..
Ø  BSN L நிறுவனத்தில் ABSORB  செய்யப்படாத ஊழியர்கள் தமிழகத்தில் 18 பேர் மட்டுமே. விடுபட்டவர்கள் இருந்தால்  தெரிவிக்க வேண்டும்.
Ø  பரிவு அடிப்படை பணிக்கு 3 ஆண்டுகள் மேல் இருந்தால் மறுக்கும் நிலை மாற்றி DOPT உத்திரவு வெளியிட்டுள்ளது.மேலும் SC/ST வாரிசுக்களுக்கு 55 புள்ளிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் குறைக்க வேண்டும்..
Ø  கிராமபுற மாற்றல்கள் 3 ஆண்டுக்கு பின்னர் மட்டுமே TA/DA  பெறமுடியும். எனவே 2ஆண்டுக்கு பின்னர் கட்டாயம் ஊழியர்கள் திரும்ப மாற்றல்கள் வழங்கப்பட வேண்டும்.
Ø  MTNL ஊழியர்களுக்கு பென்சன் 2007 முதல் நிர்ணயம் என்றாலும்,அமுலாக்கம் 01/10/2012 முதல் என்ற உத்திரவு நம்மை பாதிக்கும்.
Ø  பென்சனுக்கு நாம் செலுத்தும் மிக அதிகமான கொடை  ஊழியர்கள் அடிப்படை ஊதியம் அளவில் மாற்றப்பட வேண்டும்
Ø  பணியில் இருந்து நீக்கப்படும் BSNL  ஊழியர்களுக்கு பென்சன் 01/10/2000 வரையிலான சேவைக்கு தர வேண்டும் என்ற தோழர் குப்தா தீர்க்கதரிசன உடன்பாட்டின் அடிப்படையில் தமிழ் மாநிலசஙக தொடர் முயற்சியால் உத்திரவு பெறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கூட இல்லாத பணி பாதுகாப்பு குப்தா தீர்க்கதரிசன உடன்பட்டின் அடிப்படையில் தொடர் முயற்ச்சியால் உத்திரவு பெறப்பட்டுள்ளது.
Ø  மேலும் 10 வருட சேவைக்கு முழு பென்சன் மத்தியஅரசு போல பெறவேண்டும்.
Ø  TSM ஊழியர்களுக்கு பென்சன் என்ற உத்திரவை முறைபடுத்தி IDA    வில் பெறவேண்டும்.
Ø  மாநில மாநாடு சார்பாளர்கள் கட்டுபடுத்தவேண்டும் என்ற கருத்து நிராகரிக்கப்பட்டு அனைவரும் கலந்து கொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
Ø  போன் மெக்கானிக் புதிய ஆளடுப்பு விதிகளில்,அளவீடுகள் மாற்றப்பட்டு,78,000 போன் மெக்கானிக் பதவிகள் உருவக்கப்பட்டுள்ளது.தற்பொழுது பணியாற்றி வரும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட TM ஊழியர்கள் adjust செய்யப்பட்டு மீத ஊழியர்கள் உபரியாக கருத படுவார்கள். புதிய ஆளடுப்பு ஏதும் சாத்தியம் இல்லை.
Ø  TM- தேர்வு ,புதிய ஆளடுப்பு விதிகளில் கல்விகுதி SSLC/MATRIC என உயர்த்த பட்டுள்ளது. நமது RM/Gr D ஊழியர்கள் கல்வித்குதி இல்லாமல் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
P.காமராஜ்--மாவட்டசெயலர்