சனி, ஜூலை 02, 2016

நலம்தானா திட்டம்

தமிழ்  மாநில செயலர் எழுதிய  நலம்தானா திட்டம் குறித்த  சுற்றறிக்கையை படித்து ,
புதுவை-கடலூர்  மாவட்ட மேலாளார் தனது கருத்தை எழுதி நிர்வாக த்தின் அனைத்து  தகவல் பலகைக்கு  பிரதி எடுத்து ஒட்டிட  கூறியுள்ளார்.
அவருக்கு நமது நன்றிகள் 

நலம்தானா” இயக்கம்

NFTE-BSNL,PUDUCHERRY-SSA
நலம்தானா” இயக்கம் துவக்கவிழா,
புதுச்சேரி.
தமிழ் மாநில நிர்வாகம் ”நலம்தானா” இயக்கம் 

என்ற பெயரில்  தொலைபேசி 

வாடிக்கையாளார்களை சந்திப்பு இயக்கம் 

நடத்திட திட்டமிட்டு புதுவையில்  01/07/2016 ல் 

துவக்கப்பட்டுள்ளது..100 நாட்களுக்களுக்குள் 

தமிழ்நாடு முழுவதும் 2000க்கு மேற்பட்ட 

தொலைபேசி இணைப்பகங்களில்”நலம்தானா” 

இயக்கம் கொண்டுசெல்லப்படவேண்டும். புதிய 

தரைவழி இணைப்பு தமிழக இலக்கை 

விஞ்சவேண்டும்.

தலைமை பொதுமேலாளர், மாநில நிர்வாக 

அதிகாரிகள் மற்றும் சீனியர் பொது மேலாளர்,

 புதுவை கவர்னர்,முதல்வர் ஆகியாரை சந்தித்து 

”நலம்தானா” இயக்கம் பற்றி எடுத்துக் கூறி, 

ஆதரவு கோரினர்.


இதே போல ”நலம்தானா” இயக்கம் புதுவை 

முழுவதும் சென்று அடைந்திட ஊழியர் 

அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு 

நமது மாவட்டத்தில்வெற்றிகரமாக்குவோம். 

 நம்மை வாழவைக்கும் ,காக்கும் நமது 

நிறுவனத்தின் நிதி ஆதாரம் மேலும் பெருக்கிட,

வாடிக்கையாளார் ஆதரவு தேவை.. தல மட்ட 

காழ்புணர்ச்சி, குறை பற்றி பெரிது

 படுத்தாமல்,அனைவரும் இணைவோம்.

. நிர்வாகத்தின் இம்முயற்சி வரும் ஆண்டு 

தமிழகத்தை லாபமீட்டும் மாநிலமாக

 ஆக்கவேண்டும். நமது  அனைவரது பங்களிப்பு 

சிறப்பாக இருக்க முனைப்புடன் 

செயல்படுவோம்.!! வெற்றிகரமாக்குவோம். !!!

02/07/2016                                   தோழமையுடன்,
மா.செல்வரங்கம்,மாவட்டசெயலர்.