திங்கள், ஆகஸ்ட் 31, 2015

இலட்சம் வாழ்க... வாழ்க.. வாழ்க..
31/08/2015
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

தங்கம் நிகர் தலைவன் அவன்
தரத்தில் உயர் மனிதன் அவன் 

தோழமை போற்றிய உடன்பிறப்பு அவன் 
உடன்பிறவாத் தோழன் அவன்...

கைகளுக்குள் கட்டுண்ட கதிரவன் அவன் 
கரை வேட்டி கம்யூனிஸ்ட் அவன் 

கையில் கதிர் அரிவாள் ஏந்தும் உழவன்  அவன்..
 நித்தமும் சூரியனை வணங்கும் பக்தன்   அவன்.. 

பூவின் இடத்தில் பொன்னானவன் அவன்.. 
நூறின் இடத்தில் லட்சமானவன் அவன்..

சப்பைக்கட்டு அறியாத சண்டமாருதம் அவன் 
சபைக்கட்டு அறிந்த சபாநாயகன் அவன்..

கம்பத்தின் கதாநாயகன் அவன் 
தமிழகத்தின் தலைநாயகன் அவன் 

இராமனிடம் நேசம் கொண்ட லட்சுமணன் அவன்.
ஈரேழு  மாநிலத்திலும்  ஈடாகா லட்சம் அவன்...

காலங்களில்   நூறு கண்டு 
கலைகளில் ஆயிரம் கண்டு 
கடமைகளில்  லட்சம் கண்டு 
இலட்சம் 
வாழ்க... வாழ்க.. வாழ்க..

அன்புடன் வாழ்த்தும் 
NFTE   BSNL 
காரைக்குடி மாவட்டச்சங்கம்.