வெள்ளி, மே 02, 2014

காரைக்குடி வலைதள செய்திகள்


காரைக்குடி  வலைதள செய்திகள் 


போனஸ்.. வழங்கு..
நட்டம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல்  கடந்த 2011,2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் மறுக்கப்பட்ட போனசை உடனடியாக வழங்கக்கோரி நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
===========================================================

TTA 10 சத காலியிடங்களை நிரப்புதல்..
TTA புதிய ஆளெடுப்பு விதிகள் அறிவிக்கப்படும் நிலையில் உள்ளது. இதனை அறிவிப்பதற்கு முன் டிப்ளமா முடித்த தோழர்களை நேரடியாக 
10 சத TTA காலியிடங்களில் நிரப்பக்கோரி, மாநிலச்சங்கம் விடுத்த  கோரிக்கையின் அடிப்படையில் மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. 
===========================================================
BSNL மறு சீரமைப்பு மற்றும் புதிய பதவி உருவாக்கம் 
தற்போதுள்ள போட்டி சூழலை சமாளிக்கும்  விதத்தில்  BSNLலில் புதிய பதவிகளை உருவாக்கவும், ஊழியர் அளவைக்குறைக்கவும் ஆலோசனை வழங்கக்கோரி BSNL தனியார் ஆலோசனை நிறுவனமான DELOITTEஐக்  கேட்டுக்கொண்டுள்ளது. இந்த செயல் ஒளிவு மறைவற்று இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை நிறுவனத்திற்கும் நமக்கும் உள்ள ஒப்பந்தம் பற்றியும் சங்கங்களுக்கு தெரிவிக்கவும் மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்தைக்  கேட்டுக்கொண்டுள்ளது.
=========================================================
செல்கோபுரம் பராமரிப்பு நிறுவனம்..
தற்போது BSNLலில் உள்ள செல் கோபுரங்களை பராமரிக்க 
தனி துணை நிறுவனம் உருவாக்கிட DOTயிடம்  BSNL நிறுவனம்  அனுமதி கேட்டுள்ளது. இது சம்பந்தமாக வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளின் நகல்களை சங்கங்களுக்கு வழங்கிட 
மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 
========================================================
2015ல் 4G சேவை..
மார்ச் 2015ல் 4G சேவையை நாடெங்கும் அளிப்பதற்கு 
BSNL நிறுவனம் தயாராகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 
இதற்காக RELIANCE நிறுவனத்தின் உதவி நாடப்படும்.

தோழர் எஸ்.பாஸ்கரன் அவர்களின் பணி

30-4-14 அன்று பணி ஓய்வு பெற்ற   கும்பகோணம்  மாவட்டச்  

சங்கத்தின்  முன்னாள் செயலர்      தோழர் எஸ்.பாஸ்கரன்

 அவர்களின் பணி ஓய்வுக்காலம் சிறக்க நமது தோழமை 

வாழ்த்துக்கள்.     நடுநாயகமாய் தோழர் பாஸ்கரன்