வியாழன், ஜூன் 06, 2013

நல்ல விமர்சனம் மட்டுமே தேவை.

நல்ல விமர்சனம் மட்டுமே தேவை.
                                   
தமிழ் மாநில செயலரை  தவறாக விமர்சிப்பது தொடர்கிறது.
யாரையோ திருப்திப்படுத்திட, விமர்சித்திட தேவை சிலருக்கு இருந்திடலாம் .
தமிழ் மாநில சங்கத்தை, அதன் மாண்பை காத்திடவேண்டும்.  தஞ்சை தரணியில்எண்ணற்ற போராட்டங்களை தோழர் ஆர்.கே, எஸ்.எஸ்.கே தலைமையில் நடத்தி,பங்கேற்று மஸ்தூர், காவிரி நீர், போஸ்டல் போராட்டம் என பலவற்றுக்குசிறை சென்றவர், குற்றப்பத்திரிக்கை, தண்டனை, சென்சுர் என பெற்றவர்.ஒரு மெமோவுக்கே ஒடி ஒளிந்தவர் அல்ல.
குற்ற பத்திரிக்கை பெறாமலேய சங்க பணி பார்த்த தலைவரல்ல.

போராட்ட குணம், உறுதிப்பாடு, மாண்பு, பிறரை தவறாக பேசாதகுணம்,
அடுத்தவர் சொத்தை கொள்ளை அடிக்கத் தெரியாதவர், பொய்,
புனைசுருட்டு செய்து அடுத்தவரை கெடுக்க நினைக்காதவர், சங்கத்தைஒரு வியாபாரமாக  செய்யாமல், தவமாக செய்பவர். இத்தனைகுணங்களையும் பரிசீலித்து தேர்வு  செய்யப்பட்டவர் மாநிலசெயலராகவந்தவர்.  அடுத்தவரின்  தயவில் மாநில செயலராக  வர விரும்பியவரல்ல.
இனிமேலும்  இது போல எழுதாமல், மாநில செயலரை
விமர்சனம் செய்யாமல்  இருப்பது நலம்.