ஞாயிறு, ஜனவரி 31, 2016

பராமரிப்பு பகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் 28/01/2016

28/01/2016 அன்று   பராமரிப்பு பகுதி  மாவட்ட செயற்குழு கூட்டம்  தோழர் கஜேந்திரன்  தலைமையில்  நடை  பெற்றது..தோழர்கள் ஆர்.கே ., பட்டாபி,மாநில  செயலர் ,சேது,காமராஜ்,தமிழ்மணி ,பாலு  பழனிவேல்,மாவட்ட உதவிசெயலர், பச்சையப்பன் மாவட்ட செயலர், அன்பழகன்  தோழர் சுந்தர்பாபு, உள்ளிட்ட தோழர்கள்  80 பேர் கலந்து  கொண்டனர்.நெல்லை மாவட்ட பொதுமேலாளர்திரு.முருகானந்தம் 
 பராமரிப்பு பகுதி  சேவையின்  காரணமாக  டவர் சேவை சிறப்பாக உள்ளது.தோழர் பச்சையப்பன் நேரம்  கருததாது  செயல் படுவது  சிறப்பாக உள்ளது.
பராமரிப்பு பகுதி பொதுமேலாளர் திரு.செந்தில் வாசன் தனது உரையில் கடலூர் அனுபவம் , எதையும் சந்திக்க சவால் ஆக எடுக்க வேண்டும் ,
தனி நபர் ஊ க்கம், செயல்பாடு ,வழிகாட்டும் நடவடிக்கை, ஆகிய வற்றை  சிறிய  வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி நல்ல உரை யை  நிகழ்த்தினார்.
தோழர்கள் பட்டாபி ,ஆர்.கே .உரை க்கு பின்னர்  கூட்டம் நன்றியுடன் முடிவுற்றது.

சனி, ஜனவரி 30, 2016

kutanthai kuuttam


Retirement

 வாழ்த்துகிறோம் 
நம்முடன்  பணி புரிந்த்  தோழர் ஹனிபா   TM, விருப்ப ஓய்வில்  சென்றார் .அவரது பணிக்காலம்  சிறக்க  வாழ்த்துகிறோம் 

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்!!!

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்!!!


இன்று பணிஓய்வு பெறும் 
மாநிலத்துணைத்தலைவர்
தோழர். தூத்துக்குடி பாலுகோவை  மாவட்ட சங்கத்தின் தூண்களில் 
ஒருவராகத் திகழும் தோழர்  D.R. மருதாசலம் 

பணி ஓய்வு 

சிறக்க  புதுச்சேரி  மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!   

வெள்ளி, ஜனவரி 29, 2016

NFTE-BSNL,PUDUCHERRY
கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் 03/02/2016
இடம்:- பொதுமேலாளர் அலுவலகம், மாலை :-0530 மணி
ன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
புதுவை மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் சேவைக்காக தொழிற்சங்கங்கள் முன் நிற்பது இன்றைய தேவையாகும். அதே நேரம் ஊழியர்களி நியாயமான கோரிக்கைகள் மீது நிர்வாகம் அலட்சியம் காட்டுவதும்,சங்கங்களை தேவை படும் பொழுது தொட்டுக்கொள்வது, மற்ற நேரங்களில் உபத்திரமாக பேசுவது என்பது நினைப்பதுதொடர்கிறது.
தரமற்ற அதிகாரி சிலரின் நடிப்பில், ஊழியர்கள் வதைப்பதை நியாப்படுத்துவதை நாம் ஏற்க முடியாது.நிர்வாகம் தன்னிச்சையாக எடுக்கும் முடிவை நாம் தண்டனித்து ஏற்க  முடியாது.அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். பிரச்சனை தீர்வு வேண்டும். சங்கம் உபத்திரமாக கருதுவது மாற்றப்படவேண்டும் என கோரி " ஆர்ப்பாட்டம்" நடத்திட மாவட்டசெயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.எனவே அனைவரும் கலந்துகொண்டு நமது உரிமைகுரலை உயர்த்திட வாரீர்.
1. கேபிள் பழுதுகள் நீக்கிட 6 மாதத்திற்க்கு முன் கருத்து கேட்பு கூட்டத்தில் ஏற்கபட்டபின்னரும் கான்டிராகட் விடவில்லை.ஊழியர்கள் 700-800 இணைப்புகளை பராமரிக்க தேவைஇருப்பதால் பழுது நீக்கிடப் படும் சிரமம் சொல்லண்ணாத வகையில் உள்ளது, 5 வருடங்களாக பாராமரிப்பு காண்டிராக்ட் இலலாத காரணத்தால் பிரச்சனை மோசமாகியுள்ளது.
2. சேவையை மேம்படுத்தும் ஒர்க்ஸ்கமிட்டி கூட்டம் சடங்காகி போனது.
3. வாடிக்கையாள்ர்களை அதிகாரிகள் பலரும் சந்திக்க மறுப்பது, இல்லாமல் செல்வது,ஊழியர்களை கை காட்டுவது தொடர்கதையாகி  போனதால் ஊழியர்-வாடிக்கையாளர் மோதலாகி வருவது வருத்தம் அளிக்கிறது.
4. ஊழியர்கள் டூல்ஸ்கேட்டால் கொலை குற்றம் போ பார்க்கப்படுகிறது.  சொந்த காசில் வாங்கி செய் என உத்திரவு போடப்படும் அவலம்.
5. சீருடை கேட்டு ஜன-15 ஏற்றும்  வழங்படாமல் இருப்பது வாடிக்கையாகி போனது.
6. ஊழியர்கள் விருப்ப மாற்றல் என்றால் பரிசீலிக்க கூட மறுப்பது தோடர்கிறது.அதிகாரிஎன்றால் வீட்டு வாடகைப்படிக்காக மட்டும் இடம் மாற்றுவது, ஊழியர் என்றால் கிள்ளுகீரை யாக நினைப்பது,
பாரபட்சம் காட்டுவது நிலையாகிபோனது
7. சம்பள பட்டியல் வழங்கு வதில்லை.
இப்படி தொடரும் ஊழியர் விரோத,சங்க விரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தால் சேவை காரணம் காட்டுவது தந்திரமாக மாறியுள்ளது.ஊழியர் நலன் புறக்கணித்து  சஙகம் செயல்பட முடியாது என நிர்வாகம் உணரட்டும் .நமது போராட்டகுரல்  ஓங்கி ஒலிக்கட்டும்
மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்

மாவட்ட பொதுக்குழு
நாள்-03/02/2016               --- சங்க அலுவலகம்               -மாலை 0630
தலைமை தோழர்.M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்
ஆய்படு பொருள்
v 7 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்-பணிகள் திட்டமிடல்
v மாவட்ட சங்க போராட்டம் -அடுத்த நிலை திட்டமிடல்
மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்
KARAIKUDI POST

மைசூரில் 2016 ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்ற
15வது அகில இந்திய  BSNL  தடகளப்போட்டியில்...

நமது NFTE மாநில இளைஞரணித்தோழியர்..

இல.கார்த்திகா   

TTA  அவர்கள்

 ஒரு தங்கம், இரு வெண்கலம், மூன்று வெள்ளி,
என ஆறு பதக்கங்களை வென்று 
அரும் சாதனை புரிந்துள்ளார்.

குழந்தைக்குத் தாயான போதும்..
தன் தந்தைக்கு உடல் நலம் குன்றியுள்ள சூழ்நிலையிலும்..
மனம் தளராமல் தடகளப் போட்டியில் பங்கேற்று 
ஆறு கார்த்திகைப்பெண்களைப் போல் 
ஆறு பதக்கங்களை வென்று..
காரைக்குடிக்குப் பெருமை சேர்த்த...
அன்புத்தோழியர். கார்த்திகா அவர்கள்
நலமும்... வளமும்... பெற வாழ்த்துகின்றோம்.