செவ்வாய், டிசம்பர் 31, 2013

COM QUPTA 1 ST DEATH ANNIVERSARY


NEW YEAR GREETINGSIDA 5% RISE FROM 01/01/2014

IDA 5% RISE FROM 01/01/2014

கிராக்கிப்படி 01/01/2014 முதல்  5% 

 உயர்ந்து  90.5 % ஆக மாறிஉள்ளது 

மறைந்தார்.... வேளாண் விஞ்ஞாணி

மறைந்தார்.... வேளாண்  விஞ்ஞாணி  நமது  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

Sr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு..

நீதி கிடைத்தது ...வென்றது தமிழ் மாநில சங்கம்...
 Sr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு...  

  

நமது துறை BSNL ஆன 2000 இறுதியிலிருந்து 
TOA வின் பல (TOA(G),TOA(P),TOA(TG), TOA(TL) பிரிவுகளுக்கு,  
பரிவு அடிப்படையில்  பணியமர்த்தப்பட்ட    நூற்றுக்கணக்கான  ஊழியர்கள் Sr.TOA ஆக முடியாத நிலை நீடித்துவந்தது.

நமது தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்
விடுபட்டுப்போன TOA தோழர்களுக்கு Sr.TOA தேர்வு,
 2011 ஆகஸ்ட் 28  அன்று நடைபெறும் 
என மாநில நிர்வாகம் அறிவித்தது.

18 மாவட்டங்களுக்கான Sr.TOA காலியிடங்கள் 
மாநில நிர்வாகத்தால் 26-04-2011 அன்று வெளியிடப்பட்டது.  
அதில் TOA (G) பிரிவுக்குமட்டும் 155 காலியிடங்கள்
 ( Walk in Group: 91, Screening Test : 64)
என காட்டபட்டு தேர்வும் நடைபெற்றது.

3 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 64 தோழர்கள் தேர்வு 

எழுதினர். தேர்வில் 25 தோழர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றனர். 
தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 தோழர்களும், Walk in Group இல் உள்ள 91 தோழர்களும் Sr.TOA பயிற்சிக்கு அனுப்பப்பட்டு பதவிஉயர்வும்  பெற்றனர்.

 TOA வின்  மற்ற பிரிவு மூத்த தோழர்களும், 
தேர்ச்சி பெறாத தோழர்களும் ஏறத்தாழ 12 ஆண்டுகளாக... 
Sr.TOA ஆக முடியாத நிலை நீடித்து வந்தது.

   நமது தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியாலும்,
மாநில கூட்டு ஆலோசனை குழுவின் (RJCM) 
விவாத பொருளில் இந்த கோரிக்கையை 
வைத்த காரணத்தினாலும்...

 TOA வின்  எல்லா பிரிவு தோழர்களும்
   Sr.TOA(G) பதவி உயர்வுக்கான தகுதி தேர்வு எழுதிடவும், 
அதற்கான தேர்வு 30-03-2014 அன்று நடைபெறும்.
என மாநில நிர்வாகம் 27-12-2013 அன்று உத்திரவு வெளியிட்டுள்ளது.

12 ஆண்டுகளாக எதிர் பார்த்திருந்த தோழர்களுக்கு நீதி கிடைத்தது...  வென்றது தமிழ் மாநில சங்கம்...  
      பதவி உயர்வு பெறும் இந்த உத்தரவை பெற்று தந்த...
தமிழ் மாநில சங்கத்திற்கும்...
தமிழ் மாநில கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கும்...
    நமது நன்றி...பாராட்டுக்கள்...         
ஒற்றுமையும்...நல்ல துவக்கமும்...தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

OLIKATHIR PON VIZHA 06/01/2014
மாநில குழு கூட்டம் 28/12/2013

மாநில  குழு  கூட்டம்  28/12/2013 ல்  சென்னை  புதிய அலுவலகத்தில்  நடைபெற்றது .இரு சங்கம்  ,ஒருமித்த  குரலில்  ஒலிக்க ,நிர்வாகம்  90 சத  ஊழியர்களை  பிரதிநித படுத்தும்  ஊழியர் தரப்பு  குரலை ஏற்று  பிரச்சனை  தீர்வை  முழு மனதுடன்  ஏற்றது. இரு  சங்க  மாநிலசெயலர்கள்  அறிக்கை  தயார் செய்திட  ஏற்கப்பட்டது.
1) பரிவு அடிப்படை பணி
2) பணி  ஓய்வு  பலன்கள்  பட்டுவாடா  தாமதம்
3) மருத்துவ பில்  பட்டுவாடா  தாமதம்  மற்றும் புதிய மருத்துவமனைகள்
4)GPF பட்டுவாடா  தாமதம்
5) வங்கி கடன்  அபராத வட்டி  தவிர்த்தல்

6) நல்ல  சேவைக்கு  தேவையான பொருள்கள்
7)ஊழியர்களுக்கு  BSNL BAG வழங்கல்
8)CTTC யில் ஊழியர்களுக்கு HOLIDAY HOME
9) SERVICE BOOK முக்கிய பக்கங்கள்  வழங்க ஏற் பாடு .
10)  CSC ஊழியர்களுக்கு பயிற்சி
11) EPF குறை  தீர்வு
12)  HBA  கடன் - வீட்டு மனை பத்திரம்  வழங்கல் - தாமதம்
13)Sr.TOA  தேர்வு
14) ஊதிய  குறைபாடு  பிரச்சனை
15) IQ பராமரிப்பு
16) TTA,TM.RM அனைவருக்கும் RENT FREE SIM- மற்றவர்களுக்கு  கட்டம்,கட்டமாக வழங்கல்
விரிவான  மாநிலசெயலர்கள்  அறிக்கை  பின்னர் 

வெள்ளி, டிசம்பர் 27, 2013

செவ்வாய், டிசம்பர் 24, 2013

தோழர்.வெங்கடேசன் முதலாமாண்டு நினைவஞ்சலி தினம்

டிசம்பர் - 23
தோழர்.வெங்கடேசன் 
முதலாமாண்டு 
நினைவஞ்சலி தினம் 

தாயாய் தந்தையாய் 
தோழனாய் தலைவனாய் 
நண்பனாய் நற்குருவாய் 
எங்களை வழிநடத்தி 
அற்பங்களை சிற்பங்களாக்கிய 
அற்புதத்தலைவர் ..
இயக்கத்தை 
வளமாக்கிய  வலுவாக்கிய 
அன்புத்தோழர்.
அய்யரின் நினைவில் 
கண்களை குளமாக்குகின்றோம்.

NCM-23/12/2013

Brief of discussions in National Council Meeting Held On 23.12.2013
The 1st National Council meeting, after the New Recognition rules has been held on Dec 23, 2013. TheGM., SR Welcomed the members of both Official and staff sides.
Director HR, Chairman National Council, presented the position of BSNL and appreciated the responsibleand mature role played by both the recognized unions. He welcomed all the members by giving bouquets.
After reciprocating Director (HR), the leader staff side Com Islam emphasized the need for healthytransparent way of dealing employees issues and assured fullest cooperation on the growth anddevelopment of BSNL. He pleaded for the timely conducting of NC meetings as well as Works Committeemeeting. He also drew the attention for settlement of wage loss issue of pre 2007 appointees and JTO LICEresults of four circles.
Then, Secretary, Staff Side while thanking the management for evolving New Rules with the cooperationof unions, expressed displeasure over arbitrarily curtailing the items of Staff Side. After that, theagenda items were taken for deliberations.
On the issue of Removal of stagnation, management side felt that there are set rules for giving 3 stagnationincrements. After the issue was pleaded by the staff side strongly, management agreed to discuss the issuefurther.
On PLI, committee was informed and the issue was being deliberated. Further deliberations in the
committee would take place.
On Revision of Pension for Retirees on 78.2 and arrears agreement issue, a DO letter from CMD
was already sent to DOT. It will be processed further. Query demanded from DOPT was also replied.
On NEPP all other issues like post based promotion, Sr.TOA 7100 issue, Average entries, Drivers issue allwere in the committee. Committee is processing the issues. On SC/ ST concession separate discussionswould be there.
SC ST Qualifying Marks, following DOPT orders. Deliberations to implement the orders were held.
Management side said that they would study all those orders and would come with the reply
Restoration of LTC/MRS.. Review is possible only when financial position improves
DR Retirement Benefit. Management comes with the proposal of 2% contribution.. not agreeing to it StaffSide demanded the source of calculation for 2 %. Staff Side and Official committee would be set up tostudy the issue further.
Promotion to Telecom Mechanic for the left out cases, official side requested staff side to give some moreinput.
Staff side also demanded TA for P/H personnel as per the orders of DPE/DOE.
On Official side items, SSAs where District Union body of one union is only available, with that union thecouncil may be formed.
Staff side not agreed for curtailing right of formation of councils in the small circle.
For CGA, instead of appointment, other alternate ways like cash compensation was mooted by
administrative side. Staff side d i d not agree to the proposal and advocated the present CGA
system to continue with full fairness and transparency.
Enforcement of Discipline.CDA rules are available and on performance culture all are agreeing to
cooperate to improve.
With vote of thanks of GM SR, the meeting concluded with the assurance of taking the left out items in the
next meeting, probably by April 2014

வெள்ளி, டிசம்பர் 20, 2013

WELFARE MEETING MINUTES

தமிழ் மாநில 
சேமநலநிதிக்கூட்ட முடிவுகள்

தோழர்களே...
நமது தமிழ் மாநில சேமநலநிதிக் கூட்டம் 29/11/2013 அன்று சென்னையில் புதிய மாநில அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்டச்செயலர் தோழர். ஸ்ரீதர் கலந்து கொண்டார். 

கூட்ட  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 • ஓய்வு பெறும் தோழர்களுக்கு வழங்கப்படும் பரிசுக்காசோலை ரூ.1200ல் இருந்து ரூ.2000/= ஆக உயர்த்தப்படும்.
 • மூக்கு கண்ணாடிக்கு வழங்கப்படும் தொகை ரூ.400ல் இருந்து 800 ஆக உயர்த்தப்படும்.
 • சேமநலநிதி பகுதியில் பணி புரியும் தோழர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தப்படும். பொருளருக்கும், எழுத்தருக்கும்  250ல் இருந்து 500 ஆகவும், காசாளருக்கும், GR'D ஊழியருக்கும் 125ல் இருந்து 250 ஆகவும் மதிப்பூதியம் வழங்கப்படும்.
 • ஊழியர் சந்தா மாதம் ரூ. 50/= அனைத்து மாவட்டங்களிலும் பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்படும்.
 • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் பேசி அந்தந்த மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
 • திருமணக்கடன் சில மாவட்டங்களில் 50 ஆயிரம் வழங்கப்படுகின்றது. இது அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட  அறிவுறுத்தப்படுகின்றது.
 • அனைத்துக்கடன் தொகையும் நேரடிப்பட்டுவாடா RTGS/NEFT முறை  மூலம் வழங்கப்படும்.
 • வங்கிக்கடன் பெறுவோருக்கு காப்பீடு செய்வது பற்றி CORPORATE அலுவலகத்திற்கு எழுதப்படும்.

 • கல்வி உதவித்தொகை, புத்தக விருது ஆகிய உயர்வு பற்றியும், மகளிருக்கு இரண்டாவது முறை மருத்துவ சோதனை செய்து கொள்ளும் வசதி பற்றியும்  அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். 

புதன், டிசம்பர் 18, 2013

அஞ்சலி தோழியர் K விஜயலட்சுமி

கேவி (COM .K .V ) என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட 
தோழியர் K விஜயலட்சுமி 
இன்று நம்மிடையே இல்லை .
                 

         
          தொழிற்சங்கப் போராளியான தோழியர் K V   இறுதியில் நோயிடனும் கடுமையாகப் போராடி, இன்று (18-12-2013) மாலை தனது போராட்டத்தை முடித்து கொண்டு கால வெளியில் கலந்து விட்டார் .
                  
       சிரித்த முகம், அனைவரையும் அரவணைக்கும் பாங்கு, கொள்கையில் உறுதி, விவாதங்களில் விவேகம், அலுவலக பணிகளில் நேர்த்தி என பன்முக பரிமாணம் கொண்ட அன்புத்  தோழி அவர்.
       
      தொழிற் சங்க இயக்கத்தில் பெண்களைத் திரட்டுவதில் களம் காண்பதில் தனி முத்திரை பதித்த தோழியர், GM அலுவலக கிளை சங்கத்தில் பல பொறுப்புகளையும் , மாவட்ட சங்க நிர்வாகியாகவும் , மாநில சங்க அமைப்புச் செயலராகவும் சிறப்புற பணியாற்றியவர் .

       தோழியரின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம் .
                                                                                                        - NFTE 

NCM 23/12/2013

JCM 
தேசியகுழுக்கூட்டம் 
விவாதப்பொருள்

அகில இந்திய JCM 23/12/2013 அன்று டெல்லியில் கூடுகின்றது. மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் பங்கேற்கின்றார். 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.

ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் 

 • RM, GRD பதவிகளில் STAGNATION  தேக்க நிலை தீர்த்தல் 
 • அனைவருக்கும்  போனஸ் வழங்குதல் 
 • 78.2 சத IDA இணைப்பு நிலுவை வழங்குதல்.
 • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்.
 • 78.2 சத IDA இணைப்புக்கேற்ப அனைத்துப்படிகளும் வழங்குதல்.
 • நாலுகட்டப்பதவி உயர்வை முறைப்படுத்துதல்.
 • SC/ST தோழர்களுக்கு இலாக்காத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை தளர்த்துதல்.
 • LTC,மருத்துவப்படி மற்றும் LTCயில் விடுப்பை காசாக்கும் வசதிகளை அமுல்படுத்துதல்.
 • BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வகுத்தல்.
 • TM பயிற்சி முடித்து பதவி இல்லாததால் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்குதல்.

நிர்வாகத்தரப்பில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் 

 • மாநில,மாவட்ட மட்ட JCM குழு உருவாக்கத்தில்  உள்ள பிரச்சினைகள் தீர்த்தல்.
 • JCM  மாநில, மாவட்டக்குழு எண்ணிக்கையை முறைப்படுத்துதல்.
 • கருணை அடிப்படை வேலைக்குப்பதிலாக புதிய இழப்பீட்டு முறை உருவாக்குதல். 
 • BSNL நிறுவனத்தின் பணிக்கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.

UNION OFFICE OPENING


வெள்ளி, டிசம்பர் 06, 2013

AMBEDKAR

அம்பேத்கர்  நினைவு நாள் 

NELSON MANDELA DIED AT 95

கருப்புச்சூரியன் 
மறைந்தது..

இனவெறி இருளைக் கிழித்த கதிரவன் 
அடிமை விலங்கை உடைத்த ஆதவன் 

தென்னாப்பிரிக்க மக்களின்  பகலவன் 
எந்நாட்டு மக்களுக்கும் இனியவன் 

வெள்ளைக்கு  விடை கொடுத்தவன் 
கருப்புக்கு கௌரவம் தந்தவன் 

நெல்சன்  மண்டேலா 
மறைவிற்கு 
நமது செங்கொடி 
தாழ்த்திய அஞ்சலி..

EXCELLENT BSNL

EXCELLENT BSNL

2012-13ம் ஆண்டிற்கு 
செயல் திறன் அடிப்படையில் 
BSNL நிறுவனத்திற்கு 
27/11/2013 தேதியிட்ட DPE கடிதத்தின் படி  
EXCELLENT  GRADE 
அளிக்கப்பட்டுள்ளது. 

EXCELLENT கிட்டியது சாதனை .. 
EXCELLENTஐ எட்டியும் 
போனஸ் கிட்டாதது வேதனை..

செவ்வாய், டிசம்பர் 03, 2013

விழிப்புணர்வுக்கூட்டம்

நவம்பர் 30
விழிப்புணர்வுக்கூட்டம் 

நவம்பர் 30 அன்று டெல்லியில் 
BSNL நிறுவனத்தை  மேம்படுத்துவதற்காக 
அனைத்து சங்கங்களும் BSNL உயர்மட்ட அதிகாரிகளும் 
கலந்து கொண்ட விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

 • BSNLன் வருவாய் பெருக்கப்படவேண்டும்.
 • சில இடங்களில் உபகரணங்கள் இருந்தும் சேவை தரப்படாத நிலை மாற்றப்பட வேண்டும்.
 • செல் கோபுரங்களின் செயல்பாடு செம்மைப்படுத்தப்படவேண்டும்.
 • தொலைபேசி துண்டிப்பு DISCONNECTION நிறுத்தப்பட வேண்டும்.
 • 2.5 லட்சம் ஊழியர்களும் நமது BSNL பொருட்களை விற்பனை செய்ய தயாராக வேண்டும்.
 • வருவாய் பெருக்கத்தில் பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட்,சென்னை , கொல்கத்தா போன்ற மாநிலங்கள்  முன்னேறிட  தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்க  வேண்டும்.
 • அடையாளம் காட்டும் தொலைபேசிக்கருவிகளும் ,  கேபிள்களும் தேவைக்கேற்ற அளவு அந்தந்த மாநிலக்கிடங்குகளில் உள்ளன. அவற்றை பயன்படுத்துதல் வேண்டும்.
 • மேற்கு பகுதிகளில் WESTERN ZONE வேண்டிய உபகரணங்கள் வாங்கும் பணி துரிதப்படுத்த படவேண்டும்.
 • BSNL செல் கோபுரங்களை தனியாருக்கு வாடகைக்கு விட வேண்டும்.
 • அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட வேண்டும்.
 • மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.
 • ENTERPRISE BUSINESS எனப்படும் நிறுவன சேவை வணிகம் மேம்படுத்தப்பட வேண்டும்.
 • LEASED CIRCUITS வாடகைச்சுற்றுக்கள் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
 • கிராமப்பஞ்சாயத்துகளை NOFN - NATIONAL OPTICAL FIBER NETWORK மூலம் இணைத்து இணையதள சேவை அளிக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
 • முன்னேறியுள்ள 44 தொலைத்தொடர்பு மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் உபரியாக உள்ள கருவிகளை தேவையான இடங்களுக்கு பயன்படுத்திட வேண்டும்.
 • BROAD BAND அகன்ற அலைவரிசை சேவையில் பழுதுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாய் குறைவு ஏற்பட்டு வருகின்றது. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
 • வருவாயின் அடிப்படையில்  SSA எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும்.

news


மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு
நாள்:-05/12/2013-வியாழன்- காலை10 மணி-சங்க அலுவலகம்
தலைமை: தோழர்:அ.மகேஸ்வரன்,மாவட்டத்தலைவர்,
ஆய்படு பொருள்
Ø சங்க அலுவலகம் திறப்புவிழா
Ø ஒலிக்கதிர் 50 வது ஆண்டு பொன்விழா
Ø பிரச்சனைகள்
Ø நிதிநிலை
Ø  இதரதலைவர் அனுமதியுடன்
Ø  அனைவரும் வருக!
தோழமையடன்,
ப.காமராஜ்,
மாவட்டசெயலர்

28/11/2013,புதுச்சேரி.

திங்கள், டிசம்பர் 02, 2013

BSNL REVIEWSCHQ NEWSதர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா

தர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா 

மற்றும் மாவட்ட மாநாடு 28-11-2013 

அன்று சிறப்பாக நடைபெற்றது.

நமது தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட முதன்மை பொது மேலாளர் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மாநில செயலர் பட்டாபி,முன்னாள் சம்மேளன செயலர் R K , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் ஜெயபால் சேது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் சங்க அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார் 

திரளான தோழர்கள் கலந்து கொண்ட மாவட்ட மாநாட்டில் தோழர் மணி மீண்டும் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .  வாழ்த்துக்கள் .

மாநில சேம நல நிதி கூட்டம் 29-11-2013

மாநில சேம நல நிதி கூட்டத்திற்கு முன் தயாரிப்புக்காக 29-11-2013 அன்று முற்பகலில் மாநில சேம நலக்குழு NFTE உறுப்பினர் இரா ஸ்ரீதர் , மாநில செயலர் R பட்டாபிராமன் மற்றும் RGMTTC கிளை செயலர் சீனிவாசன் ஆகியோருடன் மாநில சங்க அலுவலகத்தில் விவாதித்தார்  மாலையில் மாநில சேம நல நிதிக்குழு கூட்டம் புதிதாக கிரீம்ஸ் சாலையில் மாற்றப்பட்ட CGM அலுவலக CONFERENCE HALL-ல்  -அலுவலகத்திலேயே முதல் கூட்டமாக  நடைபெற்றது .CGM திரு.அஷ்ரப் கான்  அவர்கள் தலைமை தாங்கினார். GM (HR ) திருமதி R இராதா அவர்கள் வரவேற்றார் . புதிய கட்டிடத்தில் நடக்கும் முதல் கூட்டமாக ஊழியர் சேம நலக்கூட்டம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் .DGM (A ) திரு R .ரகுநாதன் செயல்பாட்டறிக்கையை தாக்கல் செய்தார் 
          
       பின்னர் நாம் அளித்த விவாதப்பொருள் 8 உட்பட விவாதிக்கப்பட்டது .

1. ஓய்வு பெறும்போது GIFT CHEQUE ரூ 1200/- லிருந்து ரூ 2000/- ஆக உயர்த்தல்-  ஏற்கப்பட்டது 

2. மூக்குக்கண்ணாடிக்காக ரூ 400/- லிருந்து ரூ 800/- உயர்த்தல்- ஏற்கப்பட்டது 

3. சேம நலப்பிரிவு ஊழியருக்காக மதிப்பூதியம் இரண்டு மடங்காக உயர்த்தல் - ஒப்புக்கொள்ளப்பட்டது 

4.புத்தக உதவித்தொகை , தொழிற்நுட்ப மற்றும் தொழிற்நுட்பமல்லாத படிப்பு உதவித்தொகையை உயர்த்திட கேரளா மற்றும் கர்நாடகா நடைமுறையை பரிசீலனை செய்து முடிவு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது 

5. திருமண கடன் தமிழகம் முழுவதும் ரூ 50000/-ஆக ஒரே மாதிரி அமுல்படுத்தப்படும்  திருமண கடன் ரூ 1 லட்சம் வரை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் சாதகமாக பரிசீலிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது 

6. பெண்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மீண்டும் ஒருமுறை அனுமதிக்க வேண்டப்பட்டது . முதன்மை பொது மேலாளர் இரு பாலருக்கும் அனுமதிக்கவும் தொகையை உயர்த்தவும் இசைந்துள்ளார் 

7.மருத்துவ முகாம்கள் -நல்ல யோசனை என்று வரவேற்கப்பட்டு முகாம் ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் குறிப்பு அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது 

8. கடன் தவணை பிடித்தத்தை  HRMS PACKAGE -ல் இணைக்க CGM அலுவலக கணக்குப்பிரிவு முன்முயற்சி எடுக்கும். பூனா ITPC பிரிவுக்கு எழுதி உடனடியாக அமல்படுத்த ஏற்கப்பட்டது 

9. ஊழியர் வங்கி கணக்கு மூலம்( NEFT /RTGS ) மாவட்டங்களில் சேம நல கடன்களை வழங்கிட ஏற்கப்பட்டது 

10. வங்கிக்கடன் பெறும்போது இன்ஷூர் செய்வதன் முக்கியத்துவம் விவாதத்தில் வெளிப்பட்டது உரிய முறையில் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU ) செய்யும்போது காப்பீடு செய்வதையும் இணைக்க கார்பரேட் அலுவலகம் டெல்லிக்கு பிரச்சினையை பரிசீலிக்க அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது 

11.சேம நல மாதாந்திர சந்தா ரூ 50/- ஆக முந்தைய 09-01-2013 கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவை தமிழகம் முழுவதும் அமல் செய்து சேமநல நடவடிக்கைகளை மேலெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது 

சனி, நவம்பர் 30, 2013

செய்திகள்

செய்திகள் 

செய்திகளை முந்தித்தரும் இணையற்ற வேலூர் இணையதளம் 
ஜனவரி 2014 முதல்  மொத்த  IDA உயர்வு 90 சதத்தை தொட்டுவிடும்... 
குறைந்தபட்சம் 4.5 சத IDA விலைவாசிப்படி 
உயர்விருக்கும் என்று கூறியுள்ளது. 
வெங்காயவிலை  குறையாமல் விலைவாசிப்படி கூடுவதால் ஏது பயன்?

TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் கோரி நமது மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது.

ஓய்வூதிய இலாக்கா சில விளக்கங்களை கேட்டதின் அடிப்படையில் , ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கான 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமான கோப்புகள் பல்வேறு பயணங்களுக்குப்பின் 
மீண்டும் BSNL அலுவலகம் திரும்பியுள்ளது. 

பல்வேறு பிரச்சினைகளுக்காக ஓய்வூதியப்பலன்கள் நிறுத்தப்பட்ட தோழர்களுக்கு உடனடியாக தற்காலிக ஓய்வூதியம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட  BSNL நிர்வாகத்தை DOT  கேட்டுக்கொண்டுள்ளது.

புதன், நவம்பர் 27, 2013

TTA RR Modifications by CS ,TN

NFTE BSNL TAMILNADU CIRCLE

To
Com C Singh
GS NFTE BSNL
NewDelhi

Dear Comrade,
I have enclosed herewith some of our views regarding the Draft RR of TTA, comparing 2001 with 2013 draft. Kindly do the needful.

Para wise comments
6. Disqualification
A  Para of exemptive nature is added in the draft rules respecting Personal Law and other grounds. But the rule is silent by not interpreting ‘the other grounds’.. It is left to the discretion of the Appointing Authority
7. Bond
For DR candidates Bond for 5 years is now reduced to 2 years. But one mandatory clause is introduced equating departmental candidates with fresher. The officials who fail to complete the training successfully will not be promoted is found in the clause. That point may be deleted regarding Departmental officials. It need not be in RR, they may issue some administrative orders insisting the same with some provision of enabling power to some authorities for resending them to training to give one more opportunity
8. This clause of 2001 speaks about Territorial Army Service. The new 8 speaks about power of BSNL board to relax any provision of these rules with respect to any class or category of persons. To avoid ambiguity, it is better to delete the line ‘with respect to any class or category.
11. Liability to serve anywhere in India/ Interest of service
  This is a new clause added. This may be  restricted within the limit of Circle in order to avoid any possible prejudice or victimization in the name of interest of service
Schedule
 • Age limit for DR Candidates enhanced from 27 to 30. Taking into account of unemployment struggle and Gender Perspectives of women candidates, the age limit may be increased to 35 years.
 • In the method of recruitment, 10 % Absorption is now withdrawn.. It may be continued. All those Group C and D Employees having Diploma/ Degree/ Equivalent qualification may be absorbed in 10 % vacancies. Minimum service may be prescribed like 3 years or 5 years
 • Column 12 of RR 2001 is now in 11 of 2013. In the column 11, a provision may be added for non +2 candidates. Eligibility criteria for non + 2 to appear for TTA LICE 40 % may be thro pre qualifying Test.
 • In the 11 i   some Correction is needed. Non Executives in the 9020 scale and above having 5 years residency period of either in the 9020 scale or above scale or on combined service of different scales of 9020 and above are eligible
 • Note in column 12 of RR 2001 may also be placed in RR 2013

    25-11-13                                                                                 Yours Comradely,

                                                                                                      R.Pattabiraman