புதன், டிசம்பர் 03, 2014

str con


STR-STP - இணைப்பு மாநாடு-29/11/2014

STR-STP - இணைப்பு மாநாடு-29/11/2014-மதுரை
STR/STP தமிழ்நாடு-சென்னை இணைந்த பராமரிப்பு பகுதி தோழர்களின் விருப்ப அடிப்படையில் இணைப்பு மாநாடு 29/11/2014 அன்று நடைபெற்றது.தோழர் P..ராஜகோபால்,மாவட்டசெயலர், பராமரிப்பு பகுதி,மதுரை ட்யூக் ஹோட்டலில் மிக சிறந்த ஏற்பாடு செய்து இருந்தார்.
மாநாடுக்கு தோழர்கள் S.M. கோவிந்தராஜ்/ V.P. காத்தபெருமாள் தலைமை ஏற்றனர்.
வரவேற்புரை தோழர்கள் C.B. சுந்தர்பாபு, S.ராமகிருஸ்ணன் நிகழ்த்த, அஞ்சலி உரை கோவை தோழர் B..அருணாசலம் நிகழ்த்தினார்.

துவக்க உரையில் தோழர் K..சேது 70 களில் சங்கதலைவர்களை தொடர்புகொள்ள பராமரிப்பு பகுதி மிகுந்த உதவி செய்த்தது. நவ 27 அனைவரும் ஒன்று பட்டு போராடிஉள்ளோம்..புதிய படித்த TTA ஊழியர்களை சங்கம் நன்கு பயன்படுத்திட வேண்டும்.2016 உறுப்பினர் சரிபார்ப்பை வெற்றிகரமாக செய்திட வேண்டும்.

வாழ்த்துரையில் தோழர் சிவகுருநாதன் தனது STR பகுதி மஸ்தூர் பணிகால நிகழ்வுகள்,அனுபவங்களை,தோழர் ஜெகன் மீது ஆகர்சிக்கப்பட்டதை கூறி வாழ்த்தினார். மாநில சங்க நிர்வாகி தோழியர் பரிமளம் சைவம்-வைணவம் இணைந்து நடத்தும் சித்திரை திருவிழா போல இந்த இணைப்பும் சிறக்கட்டும் என வாழ்த்தினார்.மாநில சங்க நிர்வாகிகள் மனோகரன், விஜயரங்கம், அல்லிராஜா,வேலூர்மாவட்ட செயலர், மாவட்டத்தலைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

AIBSNLEA மாநிலசெயலர் சிவக்குமார் வாழ்த்துரையில் STR பகுதியில் NFTE முதன்மைசங்கமாக உள்ளது. தோழர்களின் நியாயமான கோரிக்கை தீரும் என் நம்பிக்கை உள்ளது. BSNL பிரச்சனைகளை பட்டியலிட்டு அனைவரும் ஒன்றுபட்டு போராடிடுவோம். லெனின் கூறியது போல ஸ்தாபனத்திற்க்கு சரியான ஊழியரை சரியான இடத்திற்க்குதேர்ந்தடுக்கவேண்டும் அதுபோல தோழர் பட்டாபி தேர்ந்தடுக்கப்பட்டுள்ளார்..

அன்பழகன் மாவட்டசெயலர்,உரையில் யாரையும் குறை கூற விரும்பவில்லை. 37 தோழர்களின்  பதவிஉயர்வு மிக முக்கியம்.தேக்கநிலையில் உள்ள பணிஓய்வு பேற 3 ஆண்டுகளே உள்ள ற்ம்  தோழர்களுக்கு TM பதவிஉயர்வு மிக முக்கியம் என கூறினார்.

பணி ஓய்வு பெற்ற தோழர் S. ராமகிருஸ்ணன் பணிஓய்வு விழாவில், தோழர் என்,கே ஸ்டோர் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு,பின்னர் STR பகுதியிலும் சிறப்பாக பணியாற்றிபணி ஓய்வு பெற்றுள்ளதை வாழ்த்தினார்..ஆர்.கே வாழ்த்தும் பொழுது கிளைசெயலராக செயல்பட்ட்தை நினைவு கூர்ந்தார்.

தோழர் காமராஜ் STR பகுதியில் தோழர் ஜெகன்பணி, சென்னை பகுதி STR கிளைகள் செயல் பாடு, வேலைநிறுத்த காலத்தில் செயல்பாடு  என STR பகுதியின் கடந்த காலசிறப்புகளை கூறி வரும் காலத்தில் கூடுதல் உறுப்பினர்களை STR பகுதியில் சேர்க்கவேண்டும்.

மாநிலசெயலர் தோழர்பட்டாபி:- STR பகுதி திரளான தோழர்கள்பங்கேற்றுள்ளீர்கள். புதிய நிர்வாகிகளை வாழ்த்துகிறேன். STR பகுதி பணிகளை வெளியாருக்கு விடப்பட உள்ளது. STR பகுதியில் நமது பணம் விரயம் செய்யப்படுகிறது.பில்கள் நேரத்தில் செய்யப்படவில்லை,அதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளது. நவ27 கோரிக்கைகள்,ஊதிய மாற்றம் பின்ணனி, பல்வேறு கமிட்டிகளின் விரயம், 3 வித மனிதவள சீர்திருத்தங்கள்37 தோழர்களின் பிரச்சனை தீர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.

மாநில நிர்வாகம் சார்பாக வந்திருந்த வாழ்த்து செய்தி படித்துகாட்டப்பட்டது.

தோழர் ஆர்.கே.;- STR பகுதியில் பணிஆற்றியது ,அதன் காரணமாக பல்வேறு முடியாது என்றபிரச்சனைகளை தீர்த்துவைத்த நிகழ்வு ஆகியவற்றை நினைவு படுத்தினார். TM ஆக பணி நியமனம் இல்லை,செய்ய முடியாது என நிர்வாகம் நிலை எடுத்த பொழுது 65 TMகளை பணி அமர்த்தியதை நினைவு கூர்ந்தார்.மாறுபட்ட கருத்துகளுக்காக மாவட்டத்தை கலைப்பது, ஆட்களை ஒழிப்பது என நாம் செயல்படுவதில்லை, மாறாக அவர்களுக்காக போராடி அவர்களும் நம்முடன் வர செய்வதை கடந்த காலத்தில் செய்துள்ளோம். 37 ஊழியர்களின் பிரச்சனையை மாநிலசெயலர் பட்டாபி தீர்த்து வைத்திட உதவிகளை அனைவரும் செய்திடுவோம்.

தோழர் மோகன்குமார்-  கலந்து கொண்ட தலைவர்கள்,உறுப்பினர்கள்,ஏற்பாடு செய்த மதுரை தோழர்கள் மற்றும் தோழர் ராஜகோபால் ஆகியோருக்கு  நன்றிகூறினார்.

புதிய நிர்வாகிகள்
தலைவர்:                   தோழர்.P...ராஜகோபால், STS, மதுரை
துணைதலைவர்கள்: 1)       தோழர் P. செல்வராஜ், TM,  வேலூர்  
                   2)       தோழர் R. கஜேந்திரன், RM, சென்னை 
                   3)       தோழர் P.N. கிரி,RM, சென்னை
                   4)       தோழர்   சவரிராஜன், குடந்தை    
செயலர்                    தோழர் R.அன்பழகன்,TM, சென்னை
துணைசெயலர்கள்  1)       தோழர்V.P.மோஹன்குமர்,STS சென்னை
                        2)      தோழர் T. சண்முகராஜ்,TM, புதுவை
                   3)      தோழர் M.பச்சையப்பன்,M, நெல்லை
                   4)      தோழர் S.சுப்பிரமணியன்,SSS கோவை,
பொருளர்:                 தோழர்S.M. கோவிந்தராஜன்,JAO சென்னை
துணைபொருளர்;          தோழர் T.J. பாஸ்கர்,TM சென்னை
அமைப்பு செயலர்கள்; 1)   தோழர் C.B. சுந்தர்பாபு,STS,சென்னை
                     2)  தோழர் S.மைனா, TM,சென்னை
                     3)  தோழர் K.கிருஸ்ணன்,TMதிருச்சி.

சிறப்பு அழைப்பாளர்கள் ;   தோழர் V.P.காத்தபெருமாள், திருச்சி
                          தோழர் B.அருணச்சலம்,கோவை
                          தோழர் S.ராமகிருஸ்ணன்,சென்னை.
              
விழா சிறக்க வந்திருந்த தலைவர்கள், உறுப்பினர்கள்,நடத்திகொடுத்த, மதுரைதோழர் ராஜகோபால், மற்றும் மதுரை மாவட்டசெயலர்,நிர்வாகிகள் அனைவருக்கும் நமது நெஞ்சு நிறை நன்றிகள்.
 தோழமை வாழ்த்துக்களுடன்
 தோழர் R.அன்பழகன்,TM,  

மாவட்ட செயலர்,சென்னை