புதன், மே 08, 2013

cuddallore settlement


கடலூர்  மாவட்ட  மாநாடுக்கு பின்னர்  தோழர் ஸ்ரீதர்  மீது  நடத்திய  தாக்குதல்,காவல்துறை  புகார்,நிர்வாக  புகார்,
என  தாக்குதல்  அனைத்தும்  முறியடிக்கப்பட்டு நிர்வாகத்தின் சுமுக அணுகுமுறை ,மாநில சங்கம்  முயற்சியால் பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  தோழர் ஸ்ரீதர் ,மாவ்ட்டசெயலர்  அவர்களுக்கு  நமது வாழ்த்துக்கள் 

கடலூர்  மாவட்ட சங்க  தீர்மானம் 

தீர்மானம் 1:

     திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையத்தில் நிகழ்ந்த பிரச்சனையை ஒட்டி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த மாவட்ட அவசர செயற்குழு ஆழ்ந்த கவலையுடன் பரிசீலித்தது.

   மாநில, மாவட்ட சங்கங்களின் உணர்வினைப் புரிந்து கொண்டு விரைவான தீர்விற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள உறுதி மொழி, நிர்வாகம் சங்கத்திற்கிடையே இருக்க வேண்டிய நல் உறவிற்கு காட்டியுள்ள ஆக்கபூர்வமான சமிக்ஞை என்பதாக மாவட்ட செயற்குழு கருதுகிறது.

   எனவே மாவட்ட நிர்வாகத்தின் உறுதி மொழியினை ஏற்று வரவேற்கிறது. உறுதி மொழியை விரைவில் செயல்படுத்த வேண்டுகிறது

தீர்மானம் 2:

       நமது மாநில சங்கம், மாவட்ட சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     கிளைத்தலைவர் தோழர். V. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     மாவட்ட செயலருக்கு வழங்கப்பட இருந்த பணி இடை நீக்கத்தை கைவிடவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

     மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக நமது மாவட்ட முதுநிலைப் பொதுமேலாளருக்கும் இம்மாவட்டச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.


தீர்மானம் 3:

     கடலூர் மாவட்ட பணி இடை நீக்கப் பிரச்சனையில் உரிய நேரத்தில் தலையிட்டு தீர்விற்கு வழிகோலிய மாநில சங்கதிற்கு நன்றியை உரித்தாக்குகிறது.
    





திறந்தமடலும்,திட்டமிட்ட.....?


தமிழ் மாநில செயலர்,செயல்பாட்டைதொடர்ந்து தொடர்ந்து விமர்சனம் 

என்ற பெயரில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது, சுயவிமர்சனபார்வையுடன் 


சுத்தசுயம்ஆக, பாரபட்சமின்றி இருந்தால் பரிசீலிக்கலாம். சன்னிதான

 குரலுக்கு வாயசைத்தால் எப்படி ஏற்ப்பது.


 CGM கூட்டத்திற்க்குமாநிலசெயலர்,அழைத்ததும்,அன்றே வங்கி 

கணக்குகளை பெயர் மாற்றம் செய்யலாம் என்பதை ஏற்ற 

மாநிலபொருளர்,வாராமலேயெ போனது ஏன்?

புதுவையில் சில மாதங்கக்ளுக்கு முன்னர் போட்டி செயல்பாடு 

சீர்குலைவு, நடவடிக்கை எடுக்க மாநிலசெயலரிடம் பேசியவர் இன்று 

போட்டி செயல்பாடு சீர்குலைவு, நியாயமே என மடல் எழுதுகிறார். இது  

மட்டும் மாமியார் மண்குடம்..........

கருர்,ஈரோடு,திருச்சி,என தனிகூட்டம் நீங்கள் போட்டு,முடிவுஎடுத்து 

போட்டி செயல்பாடு செய்தால் நியாயம்.உங்களிடமிருந்து, போட்டி

 செயல்பாடு சீர்குலைவுயிடமிருந்து சங்கத்தை காத்திட மற்றவர்

 பேசினால் குற்றமா?.

மாநிலசங்கத்திற்க்கு  மாநில நிர்வாகிகள் கடிதம் எழுதுவது நியாயம்

 மாநிலத்தலைவர் சேலம் வாருங்கள் பேசலாம், அல்லது நீங்கள் 

விரும்பும் நாளில் பேசலாம், என்று கூறியும் வர மறுத்துவிட்டு வலைதள

 பரபரப்புக்கு எழுதுவது தேவையா?


மாநிலசங்க நிர்வாகி இல்லாத ஒருவர் தானே ALL iN ALL என்னிடம் பேச

 வேண்டும் இல்லை என்றால்.... என மிரட்டல் விடுப்பதும்,அவரிடம் 

பேசினால் மட்டுமெ எல்லாம் அசையும் என்பதை அனவரும் ஏற்க 

இயலாது.

நிபந்தனைஇன்றி பேசினால் ஒற்றுமைவரும்.தனி மையம், தமிழக மையம் 

சென்னையில் இருந்தால் எப்படி ஒற்றுமைவரும்.?


சேலம் அறிக்கை எழுதிய அசோக்ராஜ் மிக சிறபான அறிக்கை என 

முழங்கியதும், பின்னர் பல்டி அடித்து மாறியதும் ஏன்? சன்னிதானம் 

கூறியாதாலா?

திறந்த மடல் தங்கள் தனி ஆவர்த்தனத்தை நியாயபடுத்த,மூடிமறைக்க 

மட்டுமெ,இது கடந்த கால போஸ் அணி நடவடிக்கை என்பதை

 அனைவரும் அறிவார்கள்.


காரைக்குடி முடிவை ஏற்க மறுத்தவர்கள் மீது  so called , inflated பெரும் 

பான்மை mutivaiமுடிவை மீறியவர்கள் மீது நடவடிக்கை என்றால், 

சங்கத்திற்க்கும் அது பொருந்தும்.


தமிழ்கத்தில் பெரும்பானமை குறித்து இன்னும் மயக்கம் 

உள்ளது.போட்டிசெயல்பாடு செய்து தமிழ்மாநில சங்கத்தை 

சன்னிதானத்திற்க்கு வாலாக மற்றிட தமிழக தோழர்கள் தயாரில்லை 

என்பதை உறுதியுடன் நிறைவேற்றுவோம்.