புதன், அக்டோபர் 28, 2015

தலமட்டக்குழு கூட்டம்-27/10/2015

தலமட்டக்குழு கூட்டம்-27/10/2015
தலமட்டக்குழு கூட்டம் 27/10/2015 ல் நடைபெற்றது.
சீனியர் பொதுமேலாளர் தனது உரையில் கருத்தாய்வு கூட்ட்த்திற்க்கு பின்னர் பாசிடிவ் முன்னேற்றம் ஏற்படுள்ளது.சிம் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது.மேளா நடைபெற்றுள்ளது. லேண்ட் லைன் பெரிய முன்னேற்றமில்லை.வருவாய் கூடியுள்ளது.துண்டிக்கபட்ட பிராட்பேண்ட் இணைப்புகளை திரும்ப பெறுவதில் சுணக்கம் உள்ளது. மாநில அதிகாரிகளின் கூட்டத்தில் பிராட்பேண்ட் பழுதுகள் 60%-70% நீக்கம், வாடிக்கையாளர்களை தக்க வைப்பது, இணைப்புகளை3 நாட்களுக்குள் கொடுப்பது என்பது தேவை.ஊழல் கண்காணிப்பு குறித்து
எந்த நிறுவனம் மிக திறமையற்று இருக்கிறதோ அந்த நிறுவனத்தில் மிக கூடுத்லாக ஊழல் இருக்கும். நமது  நிறுவனம் மேலும் திறமைமிக்கதாக்க,வருமுன் காப்போம் என ஊழல், பழுதுகள் வருமுன் செயல்படுவோம்.
ஊழியர்தரப்பு விவாதித்து முடிவு செய்த பிரச்சனைகளைஊழியர்தரப்பு முன்வைத்தது.நமது மாவட்டம் நல்ல துவக்கத்தை சந்தித்துள்ளது என்ற செய்தி,மேலும் முன்னேற்றத்திற்க்கு உக்கமளித்துள்ளது.பழுது நீக்கம் அதே நாளில் 70% இலக்கு அடைய ஊழியர்தரப்பு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.முன்னேற்றம் உள்ளது. மழைகால நடவடிக்கை எடுக்க, கார்பொரேட் அலுவலகம் முதல் மாவட்டம் வரை அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் அனைத்து தொலைபேசி நிலையங்களில் உள்ள பேட்டரிகள், இன்ஜின்,/Alternator தயார் நிலையில் வைத்திருப்பது, MDF -4 type - crone tools , test cards, NGN service –க்கு ஜம்பர் முறைபடுத்துதல், கேசியர்/கௌண்டெர் உப்ச் உட்பட சேவை முன்னேற்றம் குறித்து ஆலோசனைகளை ஊழியர்தரப்பு முன்வைத்தது.கூடுதலாக புதிய இணைப்புகளை சாத்தியமான இடங்களில் பெறுவதன் மூலம் மட்டுமே வருவாய் பெருக்க முடியும்.அனைத்துபகுதிகளிலும் ஊழியர்/அதிகார்கள் கூட்டம் நடத்துவது,மேளா மாதம் தோறும் நடத்துவது.,கருத்துகேட்பு கூட்டத்திற்க்கு அவுட்டோர் அதிகாரிகளும் பங்கேற்பு, கூடுதலாக ஊழியர்தரப்பு முன்முயற்சி செய்யும் என உத்திரவாதம் என ஊழியர்தரப்பு கூறியது. தலமட்டக்குழு கூட்டம் முறையான கால அவகாசத்தில் நடத்தவேண்டும்.
1)      புதிய CSC திறப்பு,தற்பொழுது சாத்தியமில்லை,ஊழியர் பயன்பாடு/தேவை குறித்து ஊழியர்தரப்பு விரிவாக விவாதிக்கும்.
2)      சேல்ஸ்/உதான்/ BTS பகுதி விருப்பம்/தேவை அடிப்படையில் மீண்டும் விருப்பம் கோரப்படும்.
3)      மருத்துவகுடும்பம்/HR தனிநபர் குறிப்புகள் மாற்றம் செய்யபடும்.சுற்றறிக்கை வெளியிடப்படும்.
4)      அனைத்து பிரிண்டெர்  பழுதுகள் சரிசெய்யப்படும்.4 புதிய பிரிண்டெர்கள் வழங்கப்படும்.
5)      டூல்ச் விடுபட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும்,30 ஹேண்ட் செட் 5 வருடமாக வழங்கப்படாத ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
6)      கிளீனிங் பொருட்கள் முறையாக வழங்கப்படும்.
7)      சம்பளபட்டியலை தலமட்ட அதிகாரிகள் வழங்கவேண்டும்.
8)      பழைய AO அலுவலகம் பழுது பார்க்க ஆய்வு செய்யப்படும்.டவுன் பகுதி விரைவில் மாற்றப்படும்
9)      காலி இடங்கள், கட்டிடம் வாடகை பெருக்கம் செய்திட ஊழியர்தரப்பு ஆலொசனைகள் ஏற்பு.
10)   கம்பியூட்டர்/ஸ்கூட்டர் கடன் நிர்வாகம் வழங்க நிதி கோரப்படும்.
11)   ஊழியர்களின் ரகசிய குறிப்பு 2013-14,14-15 காட்டி ஒப்பம் பெறப்படும்.
12)   மாற்று திறனாளி போக்குவரத்து படி பட்டுவாடா செய்யப்பட்டது.
13)   மாநில முடிவுப்படி 50%ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மீதி வழங்க மாநில நிர்வாக ஒப்புதல் பெறப்படும்.
14)   விதிகளின் படி மருத்துவ வசதி பெறும் குடும்ப உறுப்பினர்கள் சரிபார்ப்பு/நீக்கம்.
15)   கேசியருக்கு புதிய கள்ளநோட்டு அறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
16)   செல் பெயர் மாற்றம் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும்.
17)   சங்க அலுவலகம் தரை , டைல்ஸ் தரையாக மாற்றிட பரிசீலனை.
18)   அனைத்து MDF க்கு  FWP வழங்கபட்டு CUG -ன் இணைக்கப்பட்டுள்ளது.
19)   சங்க அலுவலக கணிப்பொறி, பாராமரிப்பு, ப்ரிண்டெர் குறித்து கடும் விவாதம் நடை பெற்றது நிர்வாகத்தின் பாராபட்ச அணுகுமுறை கண்டித்து ஊழியர்தரப்பு கருத்தை பதிவு செய்திட வலியுறுத்தி செய்யப்பட்ட்து.
20)   சீருடை நிதிகுறித்து விவாதிக்கப்பட்டு,பெற வலியுறுத்தப்பட்டது.
21)   ESS பயிற்சி மீண்டும் 14/11/2015 வழங்கப்படும்,ஊழியர்கள் தவறாது பயிற்சிபெறவேண்டும்.
22)   ஊழியர் தொலைபேசி எண் கையேடு நவ்=2015ல் வழங்கப்படும்.
23)   OKP-  UPS  இணைப்பு கவுண்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.
24)     TCM  தண்ணீர் பிரச்சனை ஒரு வாரத்திற்க்குள் தீர்க்கப்படும்.
25)   CERTH / CLUNY மருதுவ மனைகள் விரைவில் மருத்துவ வசதிபட்டியலில் இணைப்பு.


P.KAMARAJ ,  LEADER,LJCM                               A.SURAMANIYAN ,SECRETARY , LJCM

செவ்வாய், அக்டோபர் 27, 2015

”ஆர்ப்பாட்டம்” -பிரச்சனை தீர்வு

சுற்றறிக்கை=3/2015 /28/10/2015
ஆர்ப்பாட்டம் -பிரச்சனை தீர்வு- போராட்டம் ஒத்திவைப்பு
மாவட்ட துனை பொது மேலாளர் தலைமையில் போராட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. தீர்வு ஏற்பட்டு  ஆர்ப்பாட்டம்போரட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சங்க அலுவலகத்திற்க்கு புதிய கணிப்பொறி வழங்கிட மறுக்கப்பட்டது,பயன்பாடில் உள்ள கணிப்பொறி வழங்கிட ஏற்க்கப்பட்டது.பழுது பராமரிப்பு நிர்வாக பொறுப்பு மறுக்கப்பட்டது. மாநில சங்கம் மாநில நிர்வாகத்துடன் பிரச்சனை எடுத்து விவாத்திதது.27/10/2015 தல மட்டக்குழு கூட்டத்தில்  மாவட்ட நிர்வாகம் உத்திரவாதம் இல்லாத கணிப்பொறி மட்டுமே என நிலை எடுத்தது. உத்திரவாதம் இல்லாத கணிப்பொறி ஏற்கமாட்டோம். நமது கருத்தை பதிவு செய்ய மறுத்தது. கடும் நிலைக்குபின் பதிவு செய்யப்பட்ட்து. பிரிண்டர் தர மறுப்பது மாநிலக்குழுவிற்க்கு பரிசீலனைக்கு அனுப்பட்டது.பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்  குறித்த பேச்சுவார்த்தையில் SDE (G)  பொறுப்பு என நிர்வாகம் ஏற்றுள்ளது.
செப்பல் வழங்கிட ஆகஸ்ட் 8ல் உத்திரவு வெளியிட்டும் DE/SDE மட்டங்களில் கண்ணாமூச்சி ஆட்டம் நடத்தியதை கடும் கண்டனம் தெரிவித்தபின்னர் நவம்பரில் அனைவருக்கும் பட்டுவாடா செய்திட ஏற்க்கப்பட்டது. தோழர்கள் பட்டுவாடா குறித்துசெய்தியை தெரிவிக்கவேண்டும்.
மிகுதிநேரப்படி பட்டுவாடா செய்ய வேண்டும் என நிர்வாகத்திற்க்கு கடிதம் அக்8 ல் கடிதம் கொடுத்தோம்.பிரச்சனையை தீர்வு செய்வதற்க்கு பதிலாக தன்னிச்சையான குறுந்தகவல் மூலம்  மட்டுமேC.OFF என மாவட்ட நிர்வாகம் செய்தி அனுப்பி, மிகுதிநேரப்படி உரிமையை பறித்திட நிலை எடுத்தது. தல மட்ட அதிகாரிகள் அலட்சியம், பொய்தகவல்கள், காரணமாக மிகுதிநேரப்படி உரிமையை பறித்திட ஏற்க்கமாட்டோம் என மாவட்ட சங்கம் நிலை எடுத்து போராட்ட அறிவிப்பு கொடுத்து மிகுதிநேரப்படி பணி மறுப்பு செய்வோம் என எச்சரித்து ஆர்ப்பாட்டம் போரட்டம் அறிவித்தோம்.நிர்வாகம் மிகுதிநேரப்படி வழங்கிட ஆவன செய்யப்படும். எதிர்காலத்திலும் மிகுதிநேரப்படி பட்டுவாடா தொடரும் என ஏற்றுக்கொண்டது. தொழிற்சங்கத்தை மறுத்து, தன்னிச்சையான ஊழியர் விரோத நடவடிக்கை அனுமதியோம் என  கூறி உள்ளோம்.எதிர்காலத்தில் தன்னிச்சையான ஊழியர் விரோத போக்கு தொடராத நிலை வேண்டும் .வாழ்த்துக்களுடன்,தோழமையுள்ள,மா.செல்வரஙம்,மாவட்டசெயலர்.


ஞாயிறு, அக்டோபர் 25, 2015

LOCAL COUNICL MEETING

LOCAL COUNICL  MEETING ON 27/10/2015 ,PUDUCHERRY
To
The Secretary (official side), LJCM, Puducherry
Madam,
Sub:- Explanatory Notes on LCM-reg
1)      It is notified  by  the Circle admn on target  that  30 New CSC to be opened for the year of 2015-2016. We suggest that the existing CSC also to be strengthened .One TM for VIN CSC and One Clerical to Mettupalayam. One more CSC at old bus stand or Elango nagar or OKP.
2)      The BTS/Udhaan/Sales section officials completed 4 years  .The udhaan strength to be reviewed. New  option for all above sections and willing officials may be transferred.
3)      The medical family at ERP is truncated and the recent Rjcm decided to update at earliest. The same also in up gradation of personal information. The correction requests were pending at admn section.
4)      The printers at RLU/RSU needs repair /replacement and staff find difficult to get printout of faults.
5)      Ensure supply of tools  to out door staff in time. Some officers show indifference towards the issue.
6)      Non supply of Cleaning materials for up keeping  of  toilet. The  field officers says the materials  to be supplied by the contractor without knowing the contract conditions.
7)      The issue of pay slip to the Staff by the SDE should be mandated as per the Corporate orders.
8)      Repair of old Ao cash building and the Town section DE north office may be shifted . So that TD available put optimum use and the public also benefitted.
9)      We have our target on Rent / lease our buildings. Kindly ensure liberal allotment  Qrs to  Retired community without more conditions and create condusive atmosphere.
10)   The Computer Loan/Scooter loan are not distributed for the past 2 years. Kindly  grant the loan to eligible and needy officials.
11)   The entries in ACR of officials to be communicated as per the orders in time after  april of every year.
12)   Enhanced  travelling allowances to PH employees as directed by the  corporate office.
13)   The supply of Bag to all staff/officers as decided by the circle JCM not issued to the PY SSA . The  only SSA  not initiated the same till last RJCM. The  same may be supplied at earliest.
14)   Removal of Married daughters and Age barred son as  dependents from medical family. The marriage loan granted  to the officials also be verified for this purpose.
15)   The latest Fake deducting cum counting machine to be supplied to the  cashier as counter fit notes available more in number . To avoid such complaint the machine is necessary.
16)   The  procedure for genuine Name change of numbers in Cell section to be  made as user friendly and without time loss.
17)   The Bsnleu union office floorings changed with Tiles .
18)   Provision of FWP to all RLU/RSU  with >3000 lines and all MDF service numbers connected to the CUG as per the Circle Council decisions.


P.KAMARAJ ,LEADER,       A.SUBRAMANIYAN,SECRETARY-     STAFF SIDE, LOCALCOUNCIL,PUDUCHERRY.

ஆர்ப்பாட்டம்

NFTE-BSNL, PUDUHERRY
சுற்றறிக்கை:- எண்2/-தேதி 25/10/2015
ஆர்ப்பாட்டம்
நாள்:-28/10/2015 *   அலவலகம் முன் *புதன் கிழமை* மாலை:0530 மணி

மாவட்டநிர்வாகமே !

1)   விடுமுறை நாட்களின் மிகுதி நேரப்படி புதிய ERP காரணமாக பில் தயார் செய்யப்படவில்லை. திருச்சிற்றபலம் பகுதிக்கு அதிகாரி இல்லாத காரணத்தால் ஒரு வருடமாக தேக்கநிலை எல்லா விதத்திலும், மிகுதிநேரம் உட்பட நிலவுகிறது. மிகுதி நேரப்படி தீர்வு காண நிர்வாகத்தை அணுகிணால் C.OFF எடுக்க ரகசிய செய்தி அதிகாரிகளுக்கு அனுப்படுகிறது. மிகுதி நேரப்படி உயர்த்தி வழங்க தேசியகுழுவில் பரிசீலிக்க ஏற்க்கப்ப்ட்டநிலையில் இந்த மிகுதி நேரப்படி மறுப்பு ஏற்க்கமுடியாது.இல்லையென்றால் அனைத்து விடுமுறை நாட்களிலும் விடுப்பு எடுத்து பணி மறுப்பு செய்ய நேரிடும்.
2)   செப்பல் வழங்க ஆகஸ்ட் 8 /2015 ல் உத்தரவு வெளியிட்டும் அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகின்றனர்,
3)   சங்க அலுவலகத்திற்க்கு கம்பியூட்டர் வழங்க அலைகழிக்கப்பட்டு வருகிறது.பழைய கம்பியூட்டர் என்றால் பழது பார்க்கும் நிர்வாக AMC கோரியதற்க்கு பதில் ஏதுமில்லை. கம்பியூட்டர் நிர்வாகசொத்து என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.ஓய்வுபெறும் பொழுது பணம் செலுத்தாமல் வீட்டுக்கு எடுத்து செல்ல LAPTAP கோரவில்லை.

ஊழியர்களின் கோரிக்கை மீது மட்டும் மெத்தனமாக இருந்து விட்டு பின்னர் ஒத்துழைப்பு மட்டும் கோருவது நல்லதல்ல எனபதை தெரிவித்து, நமது எதிர்ப்பை காட்டிட அனைவரும் திரண்டு வருவோம்.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள,

மா.செல்வரஙம்,மாவட்டசெயலர்.

GPF பணம் பட்டுவாடா நமது மத்திய,மாநிலசங்க பெரும் முயற்சிக்குபின்னர் 27/10/2015 ல் நடைபெறும். தீபாவளி விழாக்கால முன்பணம் வங்கிக்கு அனுப்ப்பட்டுள்ளது.

வியாழன், அக்டோபர் 22, 2015

NFPE - P 3 அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலச்செயலர்

NFPE - P 3 அஞ்சல் மூன்றின் 
முன்னாள் மாநிலச்செயலர் 
அருமைத்தோழர். 
N . பாலசுப்பிரமணியன் 
அவர்கள் உடல்நலக்குறைவால் 
20/10/2015 அன்று 
இயற்கை எய்தினார்.

19 ஆண்டுகள் மாநிலச்செயலராக 
திறம்பட செயல்பட்டவர். 
NFTE சங்கத்துடன் மிகுந்த 
தோழமை கொண்டவர்.
அவரது மறைவிற்கு 
நமது அஞ்சலி உரித்தாகுக....

புதன், அக்டோபர் 21, 2015

CHANGE OF HOLIDAY DATES

VELLORE CIRCLE CONFERENCE RECPTION COMMITEE

திண்டிவனம் கிளை செயலர்கள் கருத்தரங்கம்- மாவட்ட செயற்குழு

திண்டிவனம் கிளை செயலர்கள் கருத்தரங்கம்-
மாவட்ட செயற்குழு
   மயிலாடுதுறை மாநில செயற்குழு வழிகாட்டுதல்படி இன்று (19-10-2015) திண்டிவனம் ராஜ்மஹால் திருமணமண்டபத்தில் கடலூர், புதுவை மாவட்டங்களின் இணைந்த மாவட்ட செயற்குழு மற்றும் கிளைச்செயலர்கள் கருத்தரங்கம் தோழர்கள் R.செல்வம்,M.தண்டபாணி ஆகிய  இரு மாவட்ட தலைவர்களின் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது. திண்டிவனம் கிளைத்தலைவர் தோழர்.G.ஜெயச்சந்தர் கவிதை நயத்துடன் திண்டிவனத்தின் வரலாற்றைகூறி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கடலூர் மாவட்ட உதவித்தலைவர் தோழர் P.அழகிரி அஞ்சலியுரையாற்றினார்.  புதுவை மாவட்ட செயலர் தோழர் M.செல்வரங்கம் புதுவை மாவட்ட மாநாடு நிகழ்வுகள், வருகின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் மாவட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் அணுகி புதுவையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியவற்றை விளக்கி பேசினார். பிறகு கடலூர் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கடலூர் மாவட்டத்தில் சென்ற சரிபார்ப்பு தேர்தலைவிட நமது சங்கம் கூடுதலாக வாக்குகள் பெற அனைத்து மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் நமது பணியை துவக்க வேண்டும் என்றும், அதற்காக நாம் கடுமையாக உழைத்து நமது சங்கத்தை முதன்மை சங்கமாக்க பாடுபட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். பின்னர் இரு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணித் தோழர்கள் ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் அவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தார். பின்னர் மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ் இந்தியா முழுவதும் உள்ள சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, அதில் நாம் பெறவேண்டிய எண்ணிக்கையின் அவசியத்தை விளக்கி மத்திய சங்க செயல்பாடுகள், அண்மையில் நடைபெற்ற மத்திய கவுன்சில் கூட்ட முடிவுகள் பற்றி விளக்கி பேசினார். திண்டிவனம் தோழர்.V.குப்பன் (மாவட்ட உதவித்தலைவர்) நன்றி தெரிவித்தார்.

புதுவையில் இருந்து 15 தோழர்கள்  கலந்துகொண்டனர்./

சனி, அக்டோபர் 17, 2015

CM தேசியக்குழு கூட்ட முடிவுகள்

JCM தேசியக்குழு கூட்ட முடிவுகள் 

JCM தேசியக்குழு 16/10/2015 அன்று டெல்லியில்
 மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் 
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

1.  மின்விபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு கருணை அடிப்படை பணிகளில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.

2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA  தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.

3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட நகரங்களில் தனியாருக்குத்  தாரை வார்க்கப்படும்.

4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி மீண்டும் நினைவூட்டல் கடிதம் DOTக்கு  அனுப்பப்படும்.

5.CASUAL ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது  பற்றி 
BSNL வாரியக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

6. ஊழியர்களின்  வாடகை இல்லா குடியிருப்புத்தொலைபேசியில் 
இரவுநேர இலவசங்களை  அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

7. TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் பற்றி  ஊழியர் தரப்பு இரண்டு    வாரங்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

8. DELOITTE குழு அமுலாக்கத்தில்  மாவட்டங்கள் இணைக்கப்படும் போது BUSINESS AREA எனப்படும் வியாபார வட்டத்தில் சம்பளம் மற்றும்  நிர்வாகப் பொறுப்புக்களும்,  ஊழியர் மாற்றங்கள் SSA அளவிலும் இருக்கும்.

9. MDF மற்றும் பழுது பதியும் தொலைபேசிகளை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

10.இலாக்காத் தேர்வுகள்  அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் மீண்டும் வெளியிடப்படும்.

11.சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

12.CORPORATE  அலுவலகப் பணியாளர்களுக்கு தலைமையகப்படி  
HQ ALLOWANCE வழங்குவது ஏற்கப்படவில்லை.

13. தவறுதலாக  வழங்கப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச  நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

14. பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவது, TA மற்றும் மருத்துவ முன்பணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

15. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.

16. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும்  ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

17. JCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட  பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கூட்டம் நடைபெறும்.

18. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றுதல் பற்றி பரிசீலிக்கப்படும்.

தோழர்களே...
JCM கூட்டத்தில் போனஸ் வழங்குவது,
 JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள்
 மேற்கொள்வது ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
பல முடிவுகள் ஆகட்டும் பார்க்கலாம் 
என்ற பாணியிலேயே உள்ளன. 

குறிப்பாக போனஸ் வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து ஊழியரை ஏமாற்றுவது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
OFFICIATING JTO - நிரந்தரம் 

JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையொட்டி  JTO பதவியில் நெடுங்காலமாக OFFICIATING  செய்து வரும் TTA தோழர்களை நிரந்தரம் செய்வது பற்றி டெல்லி தலைமையகம் மாநில நிர்வாகங்களுக்கு சில  குறிப்பிட்ட  வழிகாட்டுதல்களை வழங்கியதோடு அவை 31/10/2015க்குள்  முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

  • 31/03/2016 அன்று JTO  காலியிடங்கள் கணக்கீடு செய்தல்.
  • தற்போது OFFICIATING  செய்து வரும் TTA தோழர்களின் எண்ணிக்கை கணக்கீடு.
  • தேவையான  JTO காலியிடங்களின்  கணக்கீடு.
  • மேற்கண்ட தோழர்கள் PHASE I பயிற்சிக்கும் களப்பயிற்சிக்கும்  FIELD TRAINING அனுப்புதல்.
  • PHASE I பயிற்சி மற்றும்  களப்பயிற்சி முடித்தவர்களை நிரந்தரப்படுத்துதல்.

JTO  OFFICIATING  தோழர்களின் நிரந்தரம் பற்றிய பிரச்சினை தற்போதுதான்  நிரந்தரமான தீர்வை நோக்கி நடைபோடுகிறது. 

செவ்வாய், அக்டோபர் 13, 2015

மாவட்ட செயற்குழு கூட்டம் 12/10/2015

NFTE-BSNL, PUDUHERRY
சுற்றறிக்கை:- எண்1/-தேதி 13/10/2015
மாவட்ட செயற்குழு கூட்டம் 12/10/2015 ல் மாவட்டத்தலைவர் தோழர் தண்டபாணி தலைமையில் நடை பெற்றது. கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
·         19/10/2015 திண்டிவனம் கிளைசெயலர் கருத்தரங்கில் பெருவாரியாக கல்ந்தகொள்ள வேண்டும்..
·         சேவை குறித்த கூட்டம் நிர்வாகம்,சங்கங்கள் கலந்து கொள்வது
·         போனஸ் தார்ணா போராட்டம் வெற்றிகரமாக்குவது,
·         வைப்பு நிதி பயன்பாடு குறித்து கமிட்டி அமைக்கப்பட்ட்து.
·         மாவட்ட சங்க செயல்பாடு சிறக்க  சிறப்பு அழைப்பாளர் பதவிகள் உருவாக்கிட ஏற்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்
1)    4 வருடம் முடித்த சேல்ஸ் பகுதி ஊழியர்களின் விருப்ப அடிப்படையில் மாற்றல்.
2)    டெலிகாம் மெக்கானிக் பணியாற்றும் இடங்கள் தேவை குறித்து முழுமையாக பரிசீலிக்கவேண்டும்.
3)    கிராமபுறத்தில் பில் கட்டும் வசதி.
4)   DE  அலுவலகத்திற்க்கு எழுத்தர் வசதி.
5)    சீருடை ஜன-2015 ல் ஏற்க்கப்பட்டும் காலதாமதம்.
6)   அனைத்து ஊழியர்களுக்கும் மாநில கூட்டுஆலோசனைக்குழு முடிவுப்படி பேக் வழங்குதல்.
7)    வில்லியனுர்/கண்டமங்கல்ம் பகுதிகளுக்கு TM/TTA நியமனம்.
8)    தோழர் மணி  TM விருப்ப மாற்றல் மற்றும் TM விருப்ப மாற்றல்கள்.
9)   சங்க அலுவலக கணிப்பொறி வழங்குதல்.
10)  விடுமுறை பணிக்கு மிகுதிநேர படி காலதாமதம்- பட்டுவாடா.
தோழமை , வாழ்த்துக்களுடன்,

மா.செல்வரங்கம்,மாவட்டசெயலர்.

சனி, அக்டோபர் 10, 2015

மாவட்ட செயற்குழு

NFTE-PUDUCHERRY SSA

மாவட்ட செயற்குழு
12/10/2015 மாலை 0500 மணி சங்க அலுவலகம்
தலைமை:-  தோழர் . M. தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை: தோழர் . M. செல்வரஙகம், மாவட்டசெயலர்
துவக்க உரை :- தோழர் . P.காமராஜ், அ. இ. சிறப்பு அழைப்பாளர்,
ஆய்படு பொருள்

வாழ்த்துரை:- தோழர் .K.அசோகராஜன், மாநில பொருளர்,

v  அக்-19-திண்டிவனம், -இணைந்த மாவட்ட செயற்குழு ,
v  கிளை செயலர் கருத்தரங்கம்.
v  நிரந்தர வைப்பு –சம்பந்தமாக
v  சேவை மேம்பாடு
v  உறுப்பினர் சரிபார்ப்பு-உறுப்பினர் சேர்ப்பு
v  இதர தலைவர் அனுமதியுடன்,
தோழமை வாழ்த்துகளுடன்
M. செல்வரஙகம், மாவட்டசெயலர்

அனைவரும் வருக!