புதன், பிப்ரவரி 24, 2016

ஊதிய இழப்பு

ஊதிய இழப்பு 

01/01/2007க்குப்பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற 

TTA தோழர்களுக்கு அவர்களது ஊதிய இழப்பைச்

 சரிக்கட்ட ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை

 நமது சங்கத்தின் முயற்சியால் வழங்கப்பட்டது.
 
ஆனால் மற்ற பகுதி ஊழியர்களுக்கு இது 

மறுக்கப்பட்டது. மற்றவர்களுக்கும் ஆண்டு 

உயர்வுத்தொகை வழங்கக்கோரி   

நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்தி வந்தது. 

தற்போது BSNL நிர்வாகக்குழு  01/01/2007 முதல்

 07/05/2010 வரை பணி நியமனம் பெற்ற

மற்ற பகுதி ஊழியர்களுக்கும் ஒரு ஆண்டு

உயர்வுத்தொகை வழங்குவதற்கு பரிந்துரை

 செய்துள்ளது. 

BSNL வாரியத்தின் ஒப்புதலுக்குப்பின் இது 

அமுல்படுத்தப்படும். 

01/01/2007க்குப்பின் TTA தவிர  மற்ற பதவிகளில்
 
பணி நியமனம் இல்லாததால் 

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 

தோழர்கள் இச்சலுகையை அனுபவிப்பார்கள்.