வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

AUGAUST 15 GREETINGS
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ்1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம்இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம்,அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.
சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துறப்பதை குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துறந்து, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருமத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.
பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால்தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 171968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.

DELHI MEET PHOTOS

COURTESY MEET WITH  COM A.B. BHARADHAN,S.SUDHAKAR REDDY, AND COM G.L.DHAAR AT DELHI
வாழ்த்துகிறோம்


வாழ்த்துகிறோம் 

புதுவை  மாவட்டத்தில்  5 கீழ்கண்ட  தோழர்கள்  JTO ஆக  தேர்ச்சி  பெற்றுள்ளனர் .
1)   குமரகுரு 
2)   முகுந்தன் 
3)   புகழேந்தி 
4)  பிர்லின்  இசாக் 
5)  கண்ணன் 
நமது  வாழ்த்துக்கள் 

மாநிலசெயலர் கூட்டத்தில்

மாவட்ட செயலர்  காமராஜ்  அ .சிறப்பு பிரதி நிதி அடிப்படையில்  டில்லி  
மாநிலசெயலர் கூட்டத்தில்  கலந்து  கொண்டார் .
டவர்  துணை  நிறுவனம்  அமைப்ப்ததை  தடுப்பது, பிராட் பேண்டு  சேவை ,பழுது  நீக்கம்  தனியார்மயம்,டிலாஇடெடி கமிட்டி பாதகபரிந்துரை  எதிர்ப்பு ,போனஸ் ,கேடர் பெயர் மாற்றம், செப் 2 அ  இ வேலைநிறுத்தம்  ஆகிய பிரச்சனைகளின் மீது விவாதம், தீர்மானம்  கொண்டுவரப்பட்டது .
நவ 01-03  மத்திய  செயற்குழு  அவுரங்கபாத்  நகரில்  நடைபெற உள்ளது .
உறுப்பினர்  சரி பார்ப்பு தேர்தல்  குறித்து  விவாதிக்கப் படும்.

மாநிலங்கள்  கிளை  செயலர்  கருத்தரங்குகளை  நடத்திட திட்டமிடவேண்டும் 

அதை  தொடர்ந்து பிராட் பேண்டு  சேவை ,பழுது  நீக்கம்  தனியார்மயம், குறித்த  நிர்வாக கூட்டம் ,டவர் துணை  நிறுவனம்குறித்த  நிர்வாக கூட்டம் நடை பெற்றது .

கார்ப்பரேட் அலுவலகம்  தோழர் இஸ்லாம்  அவர்களுடன்  சென்று  புதுவை  விளையாட் டு  வீரர்  பதவி உயர்வு, JAO தேர்வு பெற்றவர்களின் கோரிக்கை  குறித்து  விவாதிதுள்ளோம் .
திருச்சி மாவட்ட' மாநாடு


திருச்சி மாவட்ட' மாநாடு  வெற்றியாக  முடிவுற்றது 
மிக  பெரிய  மாவட்டம்  வரும் உறுப்பினர் தேர்தலில் அதிக  வாக்குகளை  பெற  திட்டமிட்ட  வேண்டும் 
திருப்பங்களின் இடம் திருச்சியாகும்...
திருச்சி NFTE மாவட்ட மாநாடு..
ஒற்றுமையை நோக்கி.. 
நம்மைத் திருப்பியுள்ளது...இணைந்த கரங்களாய்... இனிய நெஞ்சினாய்..
ஒன்றுபட்ட நிர்வாகிகள் தேர்வு... என 
புதுக்கோட்டையில் நடைபெற்ற 
திருச்சி மாவட்ட மாநாடு 
புதுமை படைத்துள்ளது... 
இனிமை நிறைத்துள்ளது..

மாவட்டச்செயலராக 
தொடர்ந்து... பணி  தொடரும்.. 
தோழர்.பழனியப்பன்..
பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்டத் தலைவர் தோழர் P.சுந்தரம், 
மாவட்டச் செயலர் தோழர் S.பழனியப்பன், 
பொருளர் தோழர் G. ஆண்டிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.