வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

அஞ்சலி

 அஞ்சலி 
நமது சம்மேளனத்தின்  தலைவராகவும் , தந்தி பிரிவு தலைவராகவும், செயல்பட்டு  மே வங்க , கல்கத்தா மாநில முன்னணி தலைவராகவும் திகழ்ந்த  தோழர்  பாவல்   இன்று  21/08/2015 மறைந்தார் . அவருக்கு நமது  ஆழ்ந்த  அஞ்சலி

கூட்டுறவு சங்க போலிகள் போராட்டம்

சென்னை ஊழியர் சங்க கூட்டுறவு சங்க செயல்பாட்டில் தலையிடுவது, BSNLEU  சங்க கட்டுபாடில் சென்ற காலம் போல வைத்திருப்பது என்பது நமது சங்க கருத்துக்கு ஏற்புடையதல்ல. அதன் தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதன் முழு செயல்பாட்டுக்கு பொறுப்பு ஆவார்கள். பல சங்க ஊழியர்கள் பங்கேற்று  நடத்தும்  அமைப்பில் ஓரு சங்க தலையீடு ,அச்சுறுத்தல் என்பது நோக்கமுடையது.

  • 16% மட்டுமே வட்டி என்பதை மறைத்து 16.5% என் பொய் பிரச்ச்சாரம் செய்வது காலம் காலமாக இவர்களது வாடிக்கை. 5 லட்சம் கடன் உயர்வு காரணமாக ICICI வங்கியில் கடன் பெற்ற பொழுது 16.5% வட்டியை உயர்த்திய பொழுது அமைதி காத்து, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி ஏற்று கொண்ட்து ஏன் ? கடன் செலுத்தியபின் வட்டியை 2  % குறைத்த பொழுது நிர்வாகம் நலிந்துவிடும் என பேசி வட்டியை குறைக்க கூடாது என பேசியவர்கள்(நடவடிக்கை குறிப்பு) இன்று அவரே வட்டி குறைக்க மனு கொடுத்து, புகைப்படம் எடுத்து, சாகவாசமாக  நாடகம் நடத்தியுள்ளனர்.
  • THRIFT FUND  வட்டி 8% மிருந்து 9 % ஆக உயர்த்தியதை, முடிவை அனைத்து பகுதியிலும் அனைவரும் சுற்ற்றிக்கை அனுப்பியதை மறைத்து, புதிய கண்டுபிடிப்பாக கூறுவது நோக்கமுடையது.
  • பொதுவான RGB கையழுத்து பெறுவதாக , சங்கமற்று கையழுத்து பெறுவதாக கூறி,  கையழுத்து பெற்றவர்கள் அதை ஒரு சங்க  போராட்டமாக ஏமாற்றுவது ஏன்? அதில் கூட பல நூறு கையழுத்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அல்ல.  சென்னையில் இதை சங்க  போராட்டமாக ஏன் நடத்துவதில்லை?  சென்னயில் மாற்று கருத்தா?
  • தேர்தலுக்கு முன் 6 ஆண்டுகாலம் இருந்தபொழுது ஏதும் செய்யமுடியாதவர்கள், இன்று மனை பற்றிபேசுவது வெறும் பொழுது போக்கு மட்டுமே.
  • இவை எல்லாம் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமே. உறுப்பினர் சங்க தேர்தலுக்கு தயார் செய்யும் பொய் பிரச்சாரம் துவக்கமே இது ஆகும். சங்கதேர்தலுக்கு வேறும் ஏதும் இல்லை என்பதால் இது கையில் எடுக்கப்பட்டுள்ளது.
  • சங்க கூட்டுறவு சங்க செயல்பாட்டை தேர்ந்தடுக்கப்ப்ட்ட RGB, இயக்குநர்கள் இயக்கட்டும்.ரிமோட் கண்ட்ரோல் முறை மற்றும் அச்சுறுத்தல் தேவையற்றது. BSNLEU சங்க தலையீடு திட்டமிட்ட நோக்கத்துடன் செய்யப்படுவதை தவிர்ப்போம்.