வியாழன், ஜூன் 26, 2014

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.

தோழர்.மூ.மகேந்திரன்,STS பணிஓய்வு

தோழர்.மூ.மகேந்திரன்,STS புதுவையில் NFTE சங்கம் கட்டி வளர்த்த்தில் மிக முக்கிய தோழர் ஆவார்.
போஸ் அணி தலமை ஆலோசகர் இருந்தவர், தோழர் ராஜூவை ஆசானாக ஏற்றவர். 1980 போராட்டங்களில் களம் கண்டவர், கிளை, மாவட்ட பொறுப்புக்களை ஏற்று செயல்பட்டவர்.விருப்பு வெறுப்பு அற்று மனதில் பட்ட விசயங்களை,ஆலோசனைகளை முன் வைப்பவர். அனைரிடமும் அன்பாக பழகும் தன்மை, எளிமை என திகழ்ந்தவர். சங்க நிகழ்வுகள் அனைத்திலும் முன்  நிற்பவர். தன்னலம் மறுப்பு, உதவும் குணம் NFTE சங்க உணர்வுடன் இருந்தவர். அவர் 30/06/2014 பணிஓய்வு பெற உள்ளார்.. மாநிலசங்கத்திற்க்கு ரூ500/ நன்கொடை வழ்ங்கியுள்ளார். அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.

#########

தோழர் K.ராமநாதன்,SDE பணிஓய்வு

கடலூர் மாவட்டத்தில் டெக்னீசியன் ஆக பணி துவங்கி, நெய்வேலியில் NFTE சங்க கிளை செயலர்,மாவட்ட பொருளர் என சிறப்பாக செயல்பட்டவர். முன்னோடி தோழர்கள் கணேசன், ரகு,ரெங்கனாதன்,என்.கே.எஸ். என பலருடன் தொழிற்சங்க பணி புரிந்தவர். தோழர் ஆர்.கே. யை தொடர்ந்து வலியுறுத்தி PI/RSA/TTA க்களுக்கு தகுதித்தேர்வு மூலம் JTO பெற்றிட, நெய்வேலியில் மாநில கருத்தரங்கம் நடத்தி. PI/RSA/TTA பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர், தானும் JTO தேர்வு எழுதி பதவி உயர்வு பெற்று 30/06/2014 அன்று பணிஓய்வு பெற உள்ளார்... மாநிலசங்கத்திற்க்கு ரூ1000/ நன்கொடை வழங்கியுள்ளார்,புதுவை,கடலுர் மாவட்ட சங்கங்களுக்கு ரூ1000/ நன்கொடை வழ்ங்கியுள்ளார்.அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.

########

தோழர்.வெங்கட்ராமன்,Sr.TOA

திருநெல்வேலி மாவட்டத்தில், பணி துவக்கி, புதுவைக்கு மாற்றலில் வந்தார். நிர்வாக அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றியவர், நமது கிளை சங்க தலைவராக தற்பொழுது
இருந்து வரும் தோழர்.வெங்கட்ராமன் 30/06/2014 அன்று பணிஓய்வு பெற உள்ளார்... மாநிலசங்கத்திற்க்கு ரூ500/ நன்கொடை வழங்கியுள்ளார். அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.