செவ்வாய், மே 03, 2016

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
2008 ல் உடன்பாடு கண்ட BSNLEU-SNATTA   மற்றும் கண்ட ஏமாற்றம்
ஞாபகம் வருதே!  இலாக்காதேர்வு, 5 ஆண்டு தகுதிகுறைப்பு,கேடர்பெயர் மாற்றம், ஓய்வூதியம், ஊதியகுறைப்பு சரிசெய்தது,விதி 8 மாற்றல் என அனைத்தும்  NFTE  2013-2016 அங்கிகார காலத்தில் பெறப்பட்டது. நட்டத்தை ஏற்படுத்தியவர்களிடம் மீண்டும்  ..........?ஞாபகம் வருதே!

D ரங்கநாதன்

அண்ணாச்சிக்கு அஞ்சலி
                                       
               
கடலூர் மாவட்ட NFTE சங்கத்தின் பலம்
ஆணி வேர்தோழர் சிரிலின் சீடன்,
எல்லோராலும் அண்ணாச்சி என்றும் 
DR என்றும்அன்புடன் அழைத்த 

தொழிற்சங்க வழிகாட்டி
தோழர் கடலூர் D ரங்கநாதன்
இன்று மே 2 ம் நாள் முற்பகல் இயற்கை எய்தினார் என்பதைக்
கண்ணீர் மல்க அறிவிக்கிறோம்.

                            பனி போர்த்திய இமையமென வெள்ளுடை தரித்த கருணைச் செங்குன்று!
                            கோட்டமில்லாத நேரிய கொள்கைச் சிங்கம்!
                            அவர் பார்த்துப் பார்த்து கட்டிய கடலூர் கோட்ட சங்கம் – அதன்
                            உறுப்பினர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் பெருக்கம்!

அண்ணாச்சி நேர் பார்த்து கட்டி அமைத்த தந்திதொலைபேசி கம்பிப் பாதைகள்தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறிப் போயிருக்கலாம்ஆனால்அவர் கட்டி வளர்த்த கொள்கை வீரர்கள் உண்டுஅண்ணாச்சி போற்றிய
கொள்கையை மேல் எடுத்துச் செல்ல!

மறைந்த நம் தலைவருக்கு
 செங்கொடி தாழ்த்தி புகழ் அஞ்சலி செலுத்துவோம்!
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நம் பரிவை உரித்தாக்குவோம்!