வியாழன், மார்ச் 24, 2016

நல்ல ஜோக், வெட்கங்கெட்ட ஜோக்

நல்ல ஜோக்வெட்கங்கெட்ட ஜோக்
 “அதிகாரியல்லாத ஊழியர்களின் சம்பளம் கடந்த 11 ஆண்டுகளில் 5மடங்கு கூடியிருக்கிறதாம்BSNLEU சங்கம் அங்கீகாரத்திற்கு வந்த பின்தான்ஊழியர்கள் பெருமளவு பலன் அடைந்திருக்கிறார்களாம். . . 01.01.2007  முதல்அமலுக்கு வந்த மிகச் சிறப்பான ஊதிய மாற்றம் மற்றும் புதிய பாதைஅமைத்த NEPP திட்டம் மூலம் ஊழியர்களின் பொருளாதார அந்தஸ்துவெகுவாக உயர்ந்திருக்கிறதாம். . .  2004 மற்றும் 2016 கால இடைவெளியில்ஐந்து மடங்கு ஊதியம் உயர்ந்திருக்கிறதாம். . .”
இப்படி எல்லாம் BSNLEUதனது இணைய தளம் வழியாக சொல்லிக்கொள்கிறது,
கடந்த 11 ஆண்டுகளில் NEPP தவிர வேறு எந்தவொரு பிரச்சனையையும்BSNLEU தீர்த்தது இல்லை என்பதுதான் உண்மைஆனால் ஆண்டு உயர்வுதொகை,  பஞ்சப்படி உயர்வால் அதிகரித்த ஊதியத்திற்கு வெட்கங்கெட்டவகையில் சொந்தம் கொண்டாடுகிறது BSNLEUகீழே உள்ளவற்றைப்பார்த்தால் உண்மை வெட்டவெளிச்சமாகும்.
1] 42.5 %  ஊதியத்தில் உயர்வு 12 இன்கிரிமெண்ட்டால் வந்தது. ( 2005 2006ஆண்டுகளின்  இன்கிரிமெண்ட் ஊதியக் குழு அளித்த மூன்று சதவீதமாகும் )
2]  50% IDA ஊதிய இணைப்பு 2008 ல் அனைத்து பொதுத்துறைநிறுவனங்களுக்கும் DPE அளித்து உத்தரவிட்டதால் வந்தது
3] 130% உயர்வு ஜனவரி 2005 முதல் ஜனவரி 2016 வரை இன்டஸ்டிரியல்கிராக்கிப்படி IDA உயர்வால் வந்தது
4] Pay + IDA வில் 30% உயர்வு 01.01.2007 முதல் இரண்டாவதுஊதியக்குழுவால் வந்தது.     ( ஊழியர்களுக்கான உயர்ந்த பட்ச சம்பளவிகிதமாக E1A ஸ்கேலோடு 30 சதவீத உயர்வு என்பதும் முன்பே Dir(HR) தரமுன்வந்ததுதான் [BSNLEU சங்கத்திற்கு அவர் எழுதிய 24/02/2009 கடிதம்காண்க ஆனால் நமது துரதிருஷ்டம் Dir(HR)  தர முன்வந்ததையே 14மாதங்கள் தூங்கி இருந்து விட்டு 7.5.2010 ல்தான் — அதுவும் E1A ஸ்கேல்இல்லாமல் – ஊதிய ஒப்பந்தமாக கையெழுத்திட்டது BSNLEU. 30 சதவீதஉயர்வு என்பது அதிகாரிகள் சங்கம் பெற்றதுதானே தவிர ஒரு சதவீதம் கூடBSNLEU சங்கத்தால் உயர்தது இல்லை.
BSNLEU சங்கம் 78.2 IDA தீர்விற்கும் சொந்தம் கொண்டாட முடியாது.78.2 IDA தீர்வு NFTE சங்கம் அங்கீகாரம் பெற்றபின் அதனுடையஆக்கபூர்வமான தலையீட்டிற்கு பின்பே சாத்தியமானது சமீபத்திய வரலாறு.
11 வருடங்களில் 5 மடங்கு ஊதிய உயர்வு என ஊதப்படுவதில் NEPPதிட்டத்தால் கிடைத்திருக்கக் கூடிய இரண்டு பதவி உயர்வுகளுக்கு மட்டுமேBSNLEU சங்கம் சொந்தம் கொண்டாட முடியும்,  அதிலும் ஒரு பதவி உயர்வுடைம் பவுண்டு திட்டத்தால் கிடைத்திருக்கக் கூடுமாதலால் உண்மையில்ஒரு பதவி உயர்வு அதனால் உயரக்கூடிய மூன்று சதம் அல்லது IDAஉயர்வால் அதற்குச் சற்று கூடுதலான சம்பள உயர்வு மட்டுமே BSNLEUசங்கத்தால் கிடைத்தது.
சுருக்கமாகக் கூறுவதென்றால் கடந்த 11 ஆண்டுகளில் ஆறு புள்ளிசொச்சம் ஊதிய உயர்வே BSNLEU சங்கத்தால் கிடைத்தது எனலாம்.  ஆனால்அது சொந்தம் கொண்டாட முயல்வதோ, . . . அடடாமுழு புசணிக்காயைஅரைகுறை விவரங்களைக் கூறி மறைக்க முயல்கிறார்கள்.  130 சதவீதஇன்டஸ்டிரியல் கிராக்கிப்படி IDA உயர்வு ,  ஆண்டு சம்பள உயர்வாகியஇன்கிரிமெட்டுகள் பன்னிரெண்டு , அனைத்துப் பொதுத்துறைநிறுவனங்களுக்கும் வழங்கிய 50% சதவீத IDA ஊதியத்தோடு இணைப்பு ,அதிகாரிகளுக்கு வழங்கிய 30%சதவீத பிட்மெண்ட் பலன் இவை எதற்கும்BSNLEU சங்கம் சொந்தம் கொண்டாட முடியாது.
ஏதோ ஒரு வெங்கடராமையா 1.2.2004  ல் அடிப்படை ஊதியம் ரூ 10,000வாங்குவதாகக் கொள்வோம் அவருக்கு இன்கிரிமெண்ட் பிப்ரவரியில்.கிராக்கிப்படி சேர்த்து அவரது அந்த மாத ஊதியம் ரூ. 14490/-.
மேலே கண்ட தோழருக்கு ( NEPP பதவி உயர்வு இல்லாமல் 30% சதவீதபிட்மெண்ட் உயர்வு 1.1.2007 முதல் இல்லாமல் ) 1.2.2016 அன்று அடிப்படைஊதியம் + கிராக்கிப்படி அவருக்கு என்னவாக இருக்கும்?
அது ரூபாய் 51105/-. என வரும் என கணக்கு சொல்கிறது.
இந்த Rs.36615 உயர்வுக்கு BSNLEU சங்கமா காரணம் ?
கேழ்வரகில் நெய் வடிவதாக கதைக்கலாம். . .
அதைக் கேட்டுக் கொள்ள நாம் என்ன . . .?
                                                                                   

                                                ( வேலூர் NFTE சங்க இணைய தளத்திலிருந்து )