வெள்ளி, பிப்ரவரி 13, 2015

methane=17/02/2015
மீத்தேன்

இரவு நேரங்களில்
சாணக்கழிவு உள்ள  இடங்களில்
திடீரென தீப்பிடிக்கும்...
குலசாமி பேரை உச்சரித்துக்  கொண்டு
தைரியமாக எட்டிப்பார்ப்பதுண்டு...
அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்..
சில நேரங்களில் அங்கே எங்கள் தாத்தா
சுருட்டுப்பிடித்துக் கொண்டிருப்பதைப்  பார்த்ததுண்டு..

மேலே சொன்ன கொள்ளிவாய்ப்பிசாசு
மீத்தேன் என்னும் பெயருடைய.. 
CH4 என்னும் மூலக்கூறு வாய்ப்பாடுடைய..
HYDRO CARBON வகையைச்சேர்ந்த...
மூலக்கூறு என்பதும்...
இது ஒரு நிறமற்ற,மனமற்ற வாயு என்பதும்...
உடனடியாக தீப்பற்றக்கூடியது என்பதும்
இதற்கு தமிழில் கொள்ளிவாயு ,சாணவாயு
என்ற பெயர்களும் உண்டு என்பதும்
கல்லூரியில் வேதியியல் படிப்பு படிக்கும்போது
நமக்குப் புரிந்த விவரங்களாகும்...

உலகம் பிறந்தது எனக்காக...
ஓடும் நதிகளும் எனக்காக..
மலர்கள் மலர்ந்தது எனக்காக..
அன்னை மடியை விரித்தாள்  எனக்காக..
இந்த அற்புத வரிகள்...
இயற்கையின் படைப்பு 
மனிதனுக்கே என்னும் மகத்துவம் சொல்கின்றது.

இந்த இயற்கையின் படைப்பில் ஒன்றுதான்
நிலக்கரியும் மீத்தேனும்...

உலகின் இன்றைய பெரும் தேவை
உணவல்ல... பணமல்ல..
எரிபொருள்..எரிபொருள்...எரிபொருள்.
நிலக்கரியும் மீத்தேனும் 
எரிபொருளாகப்  பயன்படுவதால்
ஆள்வோர்களின் கவனம் முழுக்க அதன் மேல்தான்..

மீத்தேனை எடுத்த பின்னேதான் 
நிலக்கரியை எடுக்க முடியும்..
எனவே இவர்களின் முதல் குறி மீத்தேன்..

இந்த மீத்தேன்..
நஞ்சையும் புஞ்சையும் நிறைந்த தஞ்சை பூமியில் 
நிறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சோழ நாடு சோறுடைத்து என்பது
இன்றும் நம் காதுகளில் கம்பீரமாக விழும் பழமொழி.
ஏறத்தாழ 24லட்சம் ஏக்கரில் 
தஞ்சை மண்ணில் விவசாயம் செய்யப்படுகின்றது. 

நஞ்சை நிறைந்த நெஞ்சை நிறைத்த 
தஞ்சை பூமியை நஞ்சாக்கி விட்டு..
மீத்தேன் எடுக்க துடிக்கின்றன 
பாழும் அரசுகளும்...பண முதலைகளும்..

இங்கே மீத்தேன் கிணறுகளில்
500 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.
நிலத்தடி நீர் மணிக்கு 100 காலன் அளவில் வெளியேற்றப்படும்.
ஆண்டுக்கு 20 டன் உப்பு வெளியேறும்..
உப்பும் சோடியமும் சேர்வதால்..
நெஞ்சு குளிரும்  தஞ்சை நீர் நஞ்சாக மாறும்...
மீத்தேனும் ஓசோனும் எதிரிகள் இந்தியா பாக்கிஸ்தான் போல..
மீத்தேன் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும்...
தஞ்சை மண்ணின் நிலத்தடி நீரின் அளவு 4.77 டிஎம் சி...
ஆண்டுக்கு இத்திட்டத்தில்
2.03 டிஎம் சி தண்ணீர் வெளியேற்றப்படும்..
5 ஆண்டுகளில் தஞ்சையின் ஒட்டு மொத்த  ஈரமும்
ஈவிரக்கமின்றி வெளியேற்றப்படும்..
கால்நடைகள் தண்ணீருக்கு தவிக்கும்..
பச்சை வயல்கள் பாழாய்ப்போகும்...
காவிரி கடல் தேடிச்சென்று கலந்த காலம் போக 
கடல் காவிரியைத் தேடி தஞ்சை மண்ணுக்கு வரும்.. 
சோறுடைத்த சோழ நாடு
சோகமுடைத்த நாடாக மாறும்..
மீத்தேன் வெளி வந்தால்..
அடுப்பிலே தொடர்ந்து  
நெருப்பெரியும்... நெருப்பு மட்டுமே எரியும்..
ஆனால் அதை விட வேகமாய்
மக்களின் மனமும் வயிறும்  எரியும்...

உலை வைக்க நெருப்பிருக்கும்...
உலையில் போட அரிசி இருக்காது..
உண்டு வாழ உழவனும்.. ஒருவனும்  இருக்க மாட்டான்...

எனவேதான்..
தன் இறுதி மூச்சு வரை இதனை எதிர்த்தார் 
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்..

இன்று..
சமூக உழைப்பாளி  மேதாபட்கர்.. 
இடதுசாரிகள்.. சமூக ஆர்வலர்கள்..
மனிதனை, இயற்கையை  நேசிப்பவர்கள்..
மாணவர்கள்.. ஆசிரியர்கள்.. விவசாயிகள்...
என எல்லோரும் இன்று தஞ்சை மண்ணில் 
தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்..

கரிகால் சோழன் காலத்தில் கட்டப்பட்ட பாசன வசதிகள்
காலத்தால் மறையாத வரலாற்று சின்னங்கள்..
கலையம்சம் நிறைந்த  கோவில்கள் என்ற
நெஞ்சை அள்ளும் பாரம்பரியம் மிக்கது தஞ்சை மண்..

அதன்  பாரம்பரியம் அழிய நாம் பார்த்துக்கொண்டிருக்கலாமா ?
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும்  கயவர்களை விடலாமா?
சுடும் நெருப்புக்கு இடம் கொடுத்து..
குளிரும்  நீர் வளம்  இழக்கலாமா?
மனிதனை மனிதன் அழித்து.. மனிதன் வாழலாமா?

மீத்தேன்.. 
பசுமையை பாலைவனமாக்குவது..
குடிநீரை கொடும் நீராக மாற்றுவது..
வயல் வெளிகளை பொட்டல் வெளிகளாக புரட்டுவது...
வாழும் மனிதனை அகதியாய்  ஆக்குவது...

பண முதலைகள்... உச்சரிக்கும் பெயர் மீத்தேன்..
வாழும் மக்களை எச்சரிக்கும் பெயர் மீத்தேன்..

மீண்டும் மீத்தேனைப்  பற்றி 
எண்ணிப்பார்க்கின்றோம்..
இன்று.. மீத்தேனை பற்றிய.. 
நமது அறிவியல் அறிவு 
நமக்கு நினைவில்லை..
அன்று.. நம் பாட்டி சொன்ன 
கொள்ளிவாய்ப்பிசாசு 
என்பது மட்டுமே நினைவில் உள்ளது.

தோழர்களே...
கொள்ளிவாய்ப்பிசாசை விரட்டிடுவோம்...
குடைந்தையில் கூடிடுவோம்...

CIRCLE EXECUTIVE

என்ன சொல்லி எழுதிட....

" என்ன தோழர்... 
செயற்குழுவைப்பற்றி எதுவும் எழுதவில்லையா? "
நேற்று பல்வேறு பகுதிகளிலும் இருந்து
நமது தோழர்கள் நம்மிடம் எழுப்பிய கேள்வி இது.

வேலூர் விளக்கமாக எழுதி விட்டது. 
வழக்கம்போல் வாய்மையைப்புதைத்து 
கோவையும் குளறி விட்டது... 
இதில் நாம்  எழுதுவதற்கு.. என்ன இருக்கிறது...

எதை நாம் சொல்வது...?
என்னவென்று எழுதுவது? 

அஞ்சலி உரையில் மட்டுமே நிலவிய  
ஒரு நிமிட அமைதியைச் சொல்வதா?

காலை முதல் கடைசி வரை  கரைச்சல் செய்த 
சென்னை இரைச்சலைச்  சொல்வதா?

பங்காளிகள் பாணியில் POINT OF ORDER  கேட்டுத்
தோழர்கள் படுத்திய பாட்டைச்சொல்வதா?

அமைதி.. அமைதி.. என்று அவையில்  அமைதி வேண்டி அமைதியற்றுப் போன தலைமையைச் சொல்வதா?

ஜீவன ஜோதி அரங்கில் சோமபானங்கள்  சுரபானங்கள் தந்த  வேகத்தில் 
ஜீவனைப் போக்கிய  ம(தி )து வாரிசுகளின்  அடாவடி சொல்வதா?

அன்பே சிவம்.. அன்பே தவம் என்றார்கள்.. 
அந்த அன்பை வெளியேற்று என்று 
அட்டைப்பிடித்த  சென்னைத் தோழர்கள் 
அடம் பிடித்ததை சொல்வதா?

மனுக்கொடுக்க..வந்த கூட்டம் 
தடியோடு வந்து தடுமாறி நின்று.. 
தரம் தாழ்ந்த நிலை சொல்வதா?

நிறுவனத்தின் இன்றைய அவல நிலை சொல்ல வந்த 
தலைமைப் பொதுமேலாளர் 
அலுங்கிக் குலுங்கிப் போன அவலம் சொல்வதா?

அதிகாரிகளை ஐந்து நிமிடம் பேச விடுங்கள்...
அப்புறம் உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள் என்று 
தலைவர் முதல் தொண்டர் வரை 
கெஞ்சு.. கெஞ்சு  என்று கெஞ்சிய 
நமது பொறுமையின் உச்சம்  சொல்வதா?

அரங்கத்தைக்கொடுத்து விட்டோம்... 
கூவத்தில் குதித்து விட்டோம் என்று 
நம்மிடம் கோபத்தில் கொதித்து விட்டு.. 
அரங்கத்து விளக்குகளை அணைத்து விட்ட  
ஆரணங்குகளின் அதிகப்பிரசங்கித்தனம்  சொல்வதா?

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து 
குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?

இரும்பை விட இறுக்கமாய் இருந்து...
துரும்பைக்கூட அசைக்காத...
வாடிய பயிரைக்கண்டு வாடிய 
வள்ளலாரின்  வாரிசு...
சம்மேளனச்செயலரின் சாதனை சொல்வதா?

செத்த கல்லூரி உத்திரவு.... 
ஜீவன ஜோதியை அணைத்த 
வேதனை சொல்வதா?

எதை நாம் சொல்வது...? என்னவென்று எழுதுவது? 

தோழர்களே...
மேலே... நீங்கள் கண்டது...
வேடிக்கையாய் எழுதப்பட்டதல்ல...
NFTEன் மரபும் மாண்பும்... 
மண்ணோடு மண்ணாகும்.. நிலை கண்டு...
மனம் நொந்த வேதனையில் எழுதப்பட்டது..

தொழிற்சங்கத்தலைவர்கள் 
கடமை உணர்வு மிக்கவர்களாக 
கண்ணியம்... நேர்மை மிக்கவர்களாக 
தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் 
என்றார் மாபெரும் தலைவர் தோழர்.டாங்கே...

என்ன கொடுத்தும்.. ஒற்றுமை 
என்னைக்கொடுத்தும் ஒற்றுமை 
என்று தன் வாழ்நாள் முழுக்க 
ஒற்றுமை வளர்த்தார்..
அருமைத்தோழர்.குப்தா 

ஒரு கன்னத்தில் அறைந்தால் 
மறு கன்னத்தைக்காட்டி 
அறைந்தவன் கையை 
அன்போடு தடவிக்கொடுத்தார்...
NFTEன் ஏசு பிரான் தோழர்.ஜெகன்...

அன்று 
தோழர்.குப்தாவை.. 
சொற்களால் சிலையாக்கி...
இன்று... 
கற்களால் சிலையாக்கியவர்கள்...   
அன்று...
தலைவர்களை வசைபாடியவர்கள்...
இன்று.. 
அவர்களின் புகழ் பாடுபவர்கள்..

நம்மை வழிநடத்துபவர்கள்... 
நமக்குத்தலைவர்கள் என்று 
சொல்லிக்கொள்பவர்கள்...

நமது முன்னோர்கள்  சொன்ன 
வழியில் செல்கிறார்களா?

நிலைக்கண்ணாடி முன் நின்று 
இந்த கேள்வியை 
அவர்களே.. கேட்டுக்கொள்ளட்டும்...
தேசிய கொடியையும் ... சங்ககொடியினையும் .. தோழியர்கள் உயர்த்திட 
தொடங்கியது செயற்குழு ...சிறப்பான ஏற்பாடுகளுடன் !
வரவேற்புரை , அஞ்சலியுரை முடிந்த நிமிடம் 
கோவை சுப்பராயன் ... சூப்பர் சுப்பரயனாய் 
தொடக்கி வைத்தார்  ...வித்திட்டார்... கலவர  காட்சிக்கு! 
உடன் துணை புரிந்தார் கோவை ராமகிருஷ்ணன். 
பண்பாய் ...பக்குவமாய் .. பதில் தந்தார்... மாநில செயலர் 
எதிர் வினையாளர்க்கு !
ஏற்க மறுத்தனர் முடுக்கிவிடபட்ட எந்திரன்கள் !

மீண்டும் ... கோரிக்கை விடுத்தார் ... பட்டியலிட்டார்  மாநில செயலர் !
நம் முன் உள்ள  கடமைகளை ...
டெல்லி  பேரணி - மார்ச் 17 வேலை நிறுத்தம் குறித்து 
 செயற்குழு திட்டமிட்டு முடித்ததும் ...
தொடுத்திடுங்கள் கேள்வி கணைகளையென !
உருக்கமாய்  கேட்டு ...உறுதியும் அளித்தார் !
ஏற்க மறுத்தனர் அந்த 3 பேர் !

அமைப்பு விதி குறித்த சவடாலுக்கு 
தலைவர் லட்சம் ... கோடி ரூபாய் தகுதி  கேள்வியொன்றை 
தொடுத்தார் ...

விவாதம் ... தொடர்ந்த தருணம் 
திடுமென ...கோஷத்தோடு .. உள் நுழைந்தனர் 
சென்னை தொலைபேசி தோழர்கள் !
தமிழ் மாநில செயற்குழுவில் ... சென்னை தொலைபேசி 
தோழர்கள் அத்துமீறிய நுழைவு 
நியாயமாவென ? நயமாய் கேட்டார் மாநில செயலர் !
பதிலேதுமில்லை ...
மியூசியத்து  மந்திரத்தால் கட்டுண்டவர்களிடம் !!!

அப்பொழுது  .. தான் அந்த செய்தி வந்தது 
CGM  செயற்குழுவை வாழ்த்திட 
செயற்குழு அரங்கு  நெருங்கிவிட்டாரென !
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது ...
 கோரிக்கை வைத்தார் ...மாநில செயலர் 
" அப்படியே ... அமருங்கள் ... தோழர்களே 
CGM  உரை நிகழ்த்தி சென்றவுடன் ... தொடர்ந்திடுங்கள் 
உங்கள் முழக்கத்தையென !
சென்னை தோழர்கள் ...செவிமடுக்கவில்லை ... கடுகளவும் !

கூச்சல் ... தவிருங்கள் ..தோழர்களே !
மேற்புறம் மாற்றுதிறனாளி  கல்வி கூடம் ... +2 தேர்வு தயாரிப்பு  வேறு 
அமைதியான கத்தோலிக்க  பாரம்பரிய சேவை மையம் 
சூழல் உணர்ந்து அமைதி காத்திடுகவென  ...மன்றாடினார்  முரளி 
உதாசீனபடுத்தி ... தொடர்ந்தார்கள் 
மியூசியத்து ... மியூசிக்கை  !
அத்துமீறல் தொடர்ந்தது பாஞ்சாலி சேலையென !

CGM  
வந்தார் .. பேசிட அனுமதிக்கவில்லை மு(ட)ழக்கவாதிகள் !
மண்டபத்து பொறுப்பாளர் ...மன்றாடினார் அமைதி காக்க 
அவர்களே ...வேறு வழியின்றி  அழைத்தனர்  காவல்துறையை !
நமது தோழர்களும் ... சேர்ந்து கூட்டத்தை வெளி தள்ளினோம் 
வெளியேற்றபட்டனர் ... சென்னை தொலைபேசி தோழர்கள் !
அரங்கின் வாசலில் தொடர்ந்தனர் ...
செத்து போன கல்லூரியின் ... இத்துப் போன ... கட்டளையை  
சென்னை தொலைபேசி தோழர்கள் !
மாற்றுதிறனாளி மாணவசெல்வங்களின் 
தேர்வு கண் முன் நிற்க ...மனம் மரித்து போனவர் அல்ல நாமென !
தீர்மானம் இயற்றி ... முடித்து கொண்டோம் செயற்குழுவை !

இத்தனையும் ... அரங்கேறிய பொழுது 
செயற்குழு மேடையில் ...வலது ஓரத்தில் ... ஓர் உருவம் 
அமைதியாய் ...சலனமில்லாது ...வேடிக்கை பார்த்தது ???

ஊர் வந்து சொன்னோம் ... ஓர் தோழனிடம் 
அவரை ... அந்த மௌனம்  காத்த   தோழனை பற்றி ...
நெஞ்சில் சுருக்கென தைக்க சொன்னான் அந்த தோழன் ...
" ஜபல்பூர்  மாநாட்டில் பனியன் விற்று கொண்டிருந்தவருக்கு 
சம்மேளன செயலர் பதவி தந்த ... உங்களுக்கு 
இதுவும் வேண்டும் ... இன்னமும் வேண்டுமென !!!
மொத்தத்தில் ...
செயற்குழுவை முடக்க நினைத்தவர்கள் ... முடங்கி போனார்கள் 
முடக்கி விட்டோம் என கொக்கரிக்கும் 
அருங்காட்சியக செயல்வீரர்களுக்கு 
தமிழ் மாநிலம் வீறுகொண்ட லட்சிய பயணத்தின் 
வரலாறுக்கு சொந்தமானது ...
நண்டுகளின் நாட்டியமும் ..ஊளைகளும் ...
எங்கள்  கவனம் சிதைக்காது !
சிறிய நூல்கண்டா .. சிறைபடுத்துமென ?
எடுத்துரைத்த செயற்குழு .
வாழ்க !வெல்க !தொடர்க !