திங்கள், ஜூன் 27, 2016

மத்திய அரசு ஊழியர்கள் 33 லட்சம் வேலை நிறுத்தம் ஜூலை 11/2016


மத்திய அரசு  ஊழியர்கள் 33 லட்சம் 
வேலை நிறுத்தம்  ஜூலை 11/2016

ஊதிய கமிஷன்  பரிந்துரைகளில் 1968 க்கு பின் மிகமோசமான ஊதிய  நிர்ணயம் ,ரயில்வே  பணிகளை  தனியாருக்கு தாரை வார்க்கும் 
நடைமுறைகள் , என பல்வேறு  பாதக பரிந்துரைகளை  நிராகரித்து ,மாற்றம் கோரி 
போராட உள்ள மத்திய அரசு  ஊழியர்களை 
ஆதரித்து  ஜூலை 6 ம் தேதி ஆர்ப்பாட்டம் 
நடத்திட  மாநிலசங்கம்  கோரி உள்ளது.
ஆர்ப்பாட்டம்  சக்தி மிக்கதாக  நடத்துவோம் . 

வேலூர் மாநில மாநாடு ஜூலை 21,22./2016

  வேலூர்  5  வது மாநில  மாநாடு  ஜூலை  21,22./2016
மது   சங்கத்தின் ஆகப் பெரும்  மாவட்டம்,
7 உறுப்பினர் தேர்தலில்  தொடர் 
வெற்றி  பெற்ற மாவட்டம்,
இணைய தள செய்திகளில் நம்பகத்தனமை,,முன்னோடி,
அ இ  சங்கத்திற்கு துணை நிற்கும்
 நம்பிக்கை  துணை,
மாநில சங்கத்தின் நெருக்கடியான  தருணங்களில்
உறுதிப்பாட்டை காட்டி
,சங்க செயல்பாட்டிற்கு ஊறு செய்யும்
கொள்கைகளை,  தோலுரித்து 
 மாநில சங்கம்  காத்த  மாவட்டசங்கம் ,
 மாநாட்டு சிறக்க , மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
உரிமை கோரும்  நாம் நமது பங்கினை  செலுத்துவோம்.
நிதி கொடுப்போம், மாநாடு சிறக்க செயலாற்றுவோம் .