சனி, ஜனவரி 31, 2015

STR NEW BRANCH AT CUDALLORE

புதிய  கிளை  துவக்கவிழா 

கடலூர்  புதுவை பராமரிப்பு  பகுதி  இணைந்த  புதிய  கிளை  30/01/2015 அன்று  தோழர்  பாலகுரு  தலைமையில்  தோழர்  சௌந்தராஜன்  கொடி ஏற்ற 
விழா துவங்கியது .தோழர்  சண்முகராஜ்  வரவேற்ப்புரை ,அஞ்சலி உரை க்கு பின்னர்  தோழர் ஸ்ரீ தர்  கடலூர்  மாவட்ட செயலர்  துவக்க உரை  நிகழ்த்தினார் .தோழர்கள்   தமிழ்மணி ,காமராஜ் ,ரங்கராஜ் மோகன்குமார் ,சுந்தரபாபு , அன்பழகன் மாவட்டசெயலர்  உரைக்குபின்னர்  புதிய  நிர்வாகிகள்  தேர்ந்தடுக்கப்பட்டனர் .
தலைவராக  தோழர்  பாலகுரு,செயலராக ராஜேந்திரன் ,பொருளாராக கனகராஜ்  நிர்வாகிகள்  தேர்ந்தடுக்கப்பட்டனர் . வாழ்த்துக்கள் 

CUDDALLORE FORUM CONVENTION





வியாழன், ஜனவரி 29, 2015

4th District conference of NFTE-BSNL., Vellore

The 4th District conference of NFTE-BSNL., Vellore was held today. More than 600 comrades including 50 ladies - out of a membership of about 700 - have participated in the conference. Comrade Pattabi, CS., TN Circle gave a scintillating speech on the current political situation, issues faced by Indian Telecom Industry & BSNL and the BSNL employees. He wanted 100 percent participation in March Strike to save BSNL and its employees. Sri C.A.Reddy, General Manager, Vellore has nicely presented the current position of BSNL & of Vellore SSA compared to other SSAs in the circle and wanted the Staff to give their best to give a better service to the customers. Comrade P.Kamaraj, Special invitee to the All India Union inaugurated the conference and drew the attention of the delegates on various issues faced by us and the need for fullest participation in the March strike. Comrade P.Chennakesavan, ACS, greeted the conference. Comrades N.K and Mohankumar of STR have also graced the occassion with their presence.
Com Islam could not participate in the conference as scheduled earlier since he was bereaved but sent his greetings. Com Sethu also wished the conference all success.
Comrades A.Palani, TM., TRL, Com K.Alliraja, STS., VLR and Com K.Perumal, SSS., VLR have been unanimously elected as President, Secretary and Treasurer respectively.
புதிய  நிர்வாகிகளை  வாழ்த்துகிறோம் 

திங்கள், ஜனவரி 26, 2015

r-k-laxman-passes-away-

GPF நிலையை.

குன்றென... நிமிர்ந்து நிற்கும்... 

நமது பாரம்பரியம்...

GPF நிலையை...


அறிந்து... அறிந்திட... அறிய பல தகவல்...

தமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம் உட்பட)
தொலைத் தொடர்பு மாவட்டங்களில் இருந்து GPF தொகை 
பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் எண்ணிக்கை 5660 பேர்.

இதற்கான நிதியினை நமது மத்திய, மாநில
சங்கத்தின் தொடர் முயற்சியால் முழுமையாக  21-01-2015 
அன்று நமது மத்திய நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. 

இந்நிலையில்... நமது மாநில நிர்வாகம் GPF தொகை
பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 
22-01-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும்
என்று நமது மாநில சங்கத்திடம் தெரிவித்தது.

ஒரு சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஊழியர் இறப்பு காரணமாக 
அவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக சேமநலநிதியிலிருந்து நிதி வழங்க நிர்வாகம் முற்பட்ட போது புதிய மென்பொருள் 
ERP அமுலாக்கத்தின் குளறுபடி காரணமாக 22-01-2015 அன்று GPF 
தொகை வங்கிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நமது மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்...
மாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி சரி செய்யப்பட்டு 23-01-2015 
இன்று மாநிலம் முழுவதும் GPF தொகை பெறுவதற்கு 
விண்ணப்பித்த 5660 ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான
தொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு
அனுப்பப்பட்டுள்ளது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

25-01-2015 (ஞாயிற்று கிழமை) மற்றும் 26-01-2015 (குடியரசு தினம்) விடுமுறை என்பதால் முதன்மை கணக்கு அதிகாரி 
(Chief Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள் வங்கிக்கு 
அனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர் மற்றும்
அதிகாரிகளுக்கு GPF தொகை பட்டுவாடா செய்திட 
மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ERP... நிதி நெருக்கடி... உள்ளிட்ட... பல்வேறு பிரச்சனைகளின் 
தாக்கத்தில் இருந்து ஊழியர்களின் பிரச்சனைகளை
பாரம்பரிம் குன்றாமல் காக்க போராடி வரும் 
நமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்.

அறிந்திட முடியாத......! 
பல செய்திகளை... பல தகவல்களை... பல புள்ளி விவரங்களை... கடைநிலை தொண்டன் கூட அறிந்திட செய்திடும். 
நமது மாநில செயலரின் மரபை போற்றுவோம்.

அந்நிலை... இந்நிலை... எந்நிலை... ஆனாலும் 
ஊழியர் நலன் நிலைக்காக போராடி வரும் 
நமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்...! போற்றுவோம்...!! போற்றுவோம்...!!!

வேலை நிறுத்த ஆயத்த கருத்தரங்கம்

 வேலை  நிறுத்த  ஆயத்த கருத்தரங்கம் கருத்தரங்கில்... பங்கேற்போம்...

கண்ணின் இமை போல... 

நம் நிறுவனத்தை... பாதுகாப்போம்...






செவ்வாய், ஜனவரி 06, 2015

dharnaa 06012015

தர்ணா  முதல்  நாள்  படம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


கிராமப்புற சேவையை வழங்குவதால் பிஎஸ்என்எல்லுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுகட்ட வேண்டும். சேவையை விரைவுபடுத்தவும், மேம்படுத்தவும் புதிய கருவிகளை வாங்க வேண்டும். நிறுவன நலனுக்கு எதிரான கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது. 4 ஜி சேவையை உடனடியாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை கட்டாயமாக்க வேண்டும். இலவச அலைக்கற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இன்று தொடங்கிய போராட்டம் 3 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.

பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் செவ்வாய்கிழமை  (ஜன-6)துவங்கி நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு புதுவை பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு  தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். அமைப்பாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், செல்வ ரங்கம் ,மணிகண்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.








ஞாயிறு, ஜனவரி 04, 2015

வாழ்த்துகிறோம்

 வாழ்த்துகிறோம் 
07/01/2015  அகவை  95
நீடுழி வாழ  வாழ்த்துகிறோம்.


guptha 06/01/2015

 தோற்றம் 06/04/1922- மறைவு  06/01/2013

06/01/2015  தோழர்  குப்தா  
இராண்டாம் ஆண்டு நினைவு  நாள் 

தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை கூட்டம்

NFTE-BSNL-PUDUCHERRY.
தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை கூட்டம்
தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை கூட்டம் 03/01/2015 அன்று நடைபெற்றது. கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
சாதாரணகடன் ரூ 6 லட்சமாக உயர்த்தப்பட்டது குடும்பநல நிதி(இன்சுரன்ஸ்) ரூ4 லட்சத்திலிருந்து ரூ 6 லட்சமாக உயர்த்தப்பட்ட்து. குடும்பநல நிதி ரூ800லிருந்து ரூ1200 ஆக உயரும். சாதாரணகடன் 01/04/2015 முதல் மாதம்தோறும் வழங்கப்படும்.
Thrift fund ரூ 500 லிருந்து ரூ800 ஆக உயரும்.அதற்கான வட்டி 8% லிருந்து 9 % மாக உயரும்.
கணினி கடன் 05/01/2015 முதல் ரூ30,000 ஆயிரமாக உயரும்.

RD விருப்பஅடிப்படையில் ரூ500/= முதல் ஏற்க்கப்படும்.

வியாழன், ஜனவரி 01, 2015

மனித வள திட்டம் பரிந்துரைகள்

மனித வள திட்டம் பரிந்துரைகள்
மத்திய சங்கத்திற்க்கு தோழர் பட்டாபி முன்வைத்தகருத்துகள். மேலும் மாவட்டத்தோழர்கள் தங்கள் கருத்து ஏதுமிருந்தால் மத்திய சங்கத்திற்க்கு தெரிவிக்கலாம்..
அகில இந்திய அளவில் மனித வள திட்டம் பரிந்துரைகள் உள்ளன.மாநில, மாவட்ட அளவில் திட்டபரிந்துரைகள் வேண்டும்.பின்னர்தான் நாம் முழுமையாக பரிசீலித்து ஊழியர்களை மாற்றுபணிக்கு திட்டமிடமுடியும். திட்ட,சாதக,பாதகங்களை அறியமுடியும்.
 நிறுவனத்தின் இன்றைய உற்பத்தி, சந்தை தேவைக்காக மாற்றம் செய்வதை யாரும் மறுக்க முடியாது.
வாடிக்கையாளர் சேவைமையம், சேல்ஸ்,மார்க்கட்டிங், பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சரிசெய்திடவேண்டும்.
கூடுதல்/பற்றாக்குறை என ஊழியர்களை இடமாற்றம் நிர்வாக உரிமை - யாகிவிடக்கூடாது. ஊழியர்,நிர்வாகம் இணைந்து முடிவு செய்திட வேண்டும்.
மாற்றலுக்கு ஈடு அல்லது ஒரு வருட மாற்றல் இருக்கவேண்டும்.
சீரமைப்பு என்றாலே ஊழியர் குறைப்பு மட்டுமே.எனவே பணிபாதுகாப்பு உரிமை தொடரவேண்டும். JTO ஆளெடுப்பு விதிகளைகூட மாற்ற மறுக்கும்  நிலை ,அரசு இயக்குனர்களின் பிடிவாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஊழியர்தரப்புகோரிவருகிறது.விருப்ப ஓய்வுதிட்டம் ஏற்கமுடியாது. விருப்ப ஓய்வுதிட்டம் பங்குவிற்பனைக்கு முன்னோடியாக இருக்கும்.2000 போராட்ட ஒப்பந்தம் அதன் அம்சங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
டிலாய்ட்டி பரிந்துரைகளை ஊழியர்தரப்பு எதிர்க்கிறது.ஏரியா திட்டம் நமது சேவை,வாடிக்கையாளர்  திருப்தி, ஆகியவற்றுக்கு துணையாக இருக்காது. மாவட்ட அமைப்பு வாடிக்கையாளர்,ஊழியர்கள், என அனைவரயும் பிணைப்புடன் வைத்துள்ளது. பூகோள ரீதியில் சேவைக்கு அருகே
அமையபெற்றுள்ளது.
தலை கனத்து,கால் சிறுத்துஎன்பது போல அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கை1,98,223 லிருந்து 94,138 ஆக குறைக்கும்திட்டம். BCG  திட்டம்1,86,500 என்பதைவிட மிக மிக குறைவு.
TTA கேடர்களை சரியானை இடத்தில் பொருத்தவில்லை.19691 TTA க்களை BCG24,000 ஆக உயர்த்திட பரிந்துரைத்தது.30,000 ஆக உயர்த்துவது சரியானது.11,000 ஊழியர்கள் வெளியிலிருந்தும், போட்டிதேர்வு விதிதளர்வு மூலம் TM களை உயர்த்திட வேண்டும்.
Sr.TOA-ERP - அமுலாக்கத்திற்க்கு பிறகு 9000 பேர் மட்டுமேதேவை.30,000 பேர் பயிற்சி மூலம் ,6 மாத்த்திற்க்கு ஒருமுறை பணிஓய்வு உட்பட காலியான பதவிகளில்.நிரப்பப்படவேண்டும். Sr.TOA என்றால் Sr.TOA (G) மட்டுமா அல்லது அனைத்து Sr.TOA உண்டா என்பதை விளக்கம்வேண்டும்.
TM/RM 88000 TM /30000 RM என 1,18,000 ஊழியர்களை பரிந்துரைத்தது.
இன்று மொத்தம் 117025 ஊழியர்கள் ஊள்ளனர்.ஆனால் இவர்கள் 72000 TM ஆக குறைப்பது 45000 ஊழியர்களை உபரியாகிவிடும்
30000,மற்ற கேடர்கள் 1500 மட்டுமே பரிந்துரைக்கப்படுள்ளது.அவைஎதுஎன கேடர் வாரியாக விளக்கம்வேண்டும்.
சில விளக்கஙகள் கோரி...
75000 ஊழியர்கள் உபரி என்றால் பின் விளைவுகள் என்ன? உபரியாக வைத்திருக்கவேண்டிய அவசியம், ஊதிய செலவினம் குறித்த திட்டம் என்ன?
அரசிமிருந்து ஊழியர்கள் உபரிக்கு நிதிஉதவி பெறப்படுமா?
இதுவரை உருவக்கப்பட்ட பதவிகள் கேடர் வாரியாக எவ்வளவு? எவ்வாறு பராமரிக்கப்படுகிறது.
ஊழியர்கள் உபரியானல் வெறுமாற்றுபணி உண்டா?
JTO/SDE இணைப்பில் JTO நிலை உயர்த்தபடுமா?
பங்குவிற்பனை திட்டம் ஏதுஉண்டா? அதற்க்காக ஊழியர் எண்ணிக்கை குறைத்து காட்ட படுமா?