சனி, மே 30, 2015

அசோகராஜனின் அராஜகம்,

அசோகராஜனின் அராஜகம், அத்துமீறல்
புதுவை மாவட்ட மாநாடு முடிந்து தோழர் காமராஜ் மாவட்டசெயலர் 

பொறுப்பேற்றதுமுதல் ஒத்துழையாமை துவக்கப்பட்ட்து.மாறுபட்ட கருத்து 

என்றமுறையில் பொய்செய்திகளை திட்டமிட்டு பேசுவது, திரித்து கூறுவது 

என அவரது லீலை தொடங்கியது. மதுரை மாநாட்டுக்கு முன்னரே மாநாடு ரசீது புத்தகங்களை பெற்று வசூல் செய்தவர் இன்றுவரை 

ஒப்படைக்கமறுத்து வரும் நல்லவர். மாவட்ட சங்கபணத்தை ரூ1,55000/ தர மறுத்து ஊருக்கு உபதேசம் செய்து வருபவர். பலமுறை மாவட்ட 

செயற்குழுவில் பல தோழர்கள் சுட்டிகாட்டியபின்னும் நல்லவர் வேசம் கட்டும் வல்லவர். இவர் மாநில பொருளர் பொறுப்பில்  தொடர்வது முறையற்ற செயல் என் புதுவையில் இவர் காதுபட பேசினாலும் எதையும் தாங்கும் தாரளமன்ம் படைத்தவர்.
உறுப்பினர் தேர்தலில் நமது சங்கம் தோற்க்கடிக்க கடலூர் போல புதுவையிலும் திட்டமிட்டு தனி வசூல், தனிபயணம்,இறுதியில்14 வாக்குகள் வீணடிக்கப்பட்டு 10 வாக்குகளில் நமது சங்கம் தோற்க்கடிக்க நல்ல பணி ஆற்றியவர்.
மாவட்டசங்கத்திற்க்கு நன்கொடை அளிக்காதே என அன்பு அட்வைஸ் சங்கவைரவிழாவிற்க்கு நிதி தரக்கூடாது என கூட்டம் போட்டு முடிவு செய்து அமுல்படுத்திய யோக்கியவான்.
இண்டோர் கிளை மாநாட்டை அறிவித்த தேதியில், நேரத்தில் நடத்தாமல், மாவட்ட செயலர் அறியாமால் 5 பேர் மட்டும் வைத்து பட்டியல் போட்டு முன்கூட்டியே கையேழுத்து பெற்ற நோட்டை பயன் படுத்திய சங்க விரோத உத்தம தியாகி.
6 மாத காலாமாக மாநிலசெயலர் மாநாடு முறையாக நடக்கவில்லை மாநாடு நடத்துங்கள் பல கடிதம் முன்னால் கிளை செயலருக்கு எழுதியும் முன்னேற்றமில்லை. 21 உறுப்பினர்கள்,நாங்கள் மாநாடு எதிலும் கலந்துகொள்ளவில்லை நிர்வாகிபட்டியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என கடிதம் மாநிலசெயலருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
இண்டோர் கிளை மாநாடு நடத்த மாநிலசெயலர் வழங்கிய இமெயில் கடிதத்தை போர்ஜரி என வர்ணித்து மாவட்டசெயலர் காமராஜ் மீது
மாநில பொருளர் என்ற பதவியை பயன்படுத்தி, மாநிலசெயலர் அறியாமல், மாநிலசங்க போர்வையில் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்க்ளுக்கு புகார் கடிதம் கொடுத்துள்ளார். நகலை மாநிலசெயலர், நிர்வாகம் ஆகியோருக்கு கொடுத்து மாவட்டசெயலர் மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ள நல்ல மனம் படைத்தவர்.
சேலத்தில் தோழர் நூருல்லா மாநில தலைவர்  மீது நில அபகரிப்பு மத்தியசங்க போர்வயில் புகார் கடிதம் கொடுத்து பணிஓய்வுக்கு முன் கைது செய்ய ஆலாய் பறந்த்தவர்களின் வழி வந்தவர்கள் அல்லவா
இதை மட்டுமே செய்யமுடியும்.

காவல்துறை வரட்டும். சந்திக்க காத்திருப்போம்.