திங்கள், அக்டோபர் 28, 2013

BONUS -On Karaikudi web

தீபாவ(லி)ளி
இந்திய தேசத்தின் மிகப்பெரும் விழாவான தீபாவளித்திருநாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் உழைக்கின்ற  ஊழியர்களின் உள்ளமோ நொறுங்கிக்கொண்டிருக்கின்றது.  
3 ஆண்டுகளாக போனஸ் இல்லை. 
அந்த வரிசையில் இந்த ஆண்டும் சேர்ந்திடுமோ? 
என்ற கேள்வி எழுகின்றது. 
அமெரிக்க அரசு இந்திய மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தீபாவளியைக் கொண்டாட தயாராகி வருகின்றது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறையின் CMDயோ  ஊழியர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் உரிமையான போனசை அறிவிப்பதை விடுத்து,  நிதி நிலையைக்காரணம் காட்டி போனசை மறுத்து வருகின்றார். 
மருத்துவப்படியை நிறுத்தியதால் 400 கோடி, 
LTCஐ நிறுத்தியதால் 100 கோடி, 
78.2 நிலுவையை பறித்ததால் 1000 கோடி 
என்று ஊழியர் உரிமையைப்பறித்த  CMD வெறும் 70 கோடி செலவாகும் போனசை மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?..
இதே ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 18 கோடியை உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி வழங்கியதை மறக்க முடியுமா? மொத்தத்தில் BSNL நிர்வாகம் ஊழியர்களின் உணர்வுகளை மதிக்க தவறி விட்டது. போனஸ்  என்பது லாபம் நட்டம் சார்ந்ததல்ல. 
அது இந்த தேசத்தின் பண்பாடு சார்ந்தது. எனவே போனஸ் மறுப்பு என்பது பண்பாடற்ற செயலாகவே கருதப்படுகின்றது. 
ஊழியருக்கு போனஸ் என்ற உரிமையை பெற்றுத்தந்த NFTE பேரியக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் போனசை பெறுவதற்கு தனது முயற்சியை தொடர்ந்து செய்து வந்தது. இந்த ஆண்டு மீண்டும் அங்கீகாரம்  கிடைத்திருப்பதால் கூடுதல் பொறுப்புடன் போனசைப்பெற கடமையுணர்வுடன் செயலாற்றி வருகின்றது. 
தோழர்களே !..போனஸ் நமது உரிமை என்ற குரலை ஓங்கி ஒலிப்போம். BSNL ஊழியர்கள் போனஸ் தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்னும் நிலை மாற்றுவோம். அக்டோபர் 30 உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோ