திங்கள், பிப்ரவரி 22, 2016

TEPU அகில இந்திய சங்கத்தின் மாநாடு

 TEPU  அகில இந்திய சங்கத்தின்  மாநாடு  21,22/02/2016 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
 அ இ செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் , ஆர்.கே ர
R.பட்டாபி,  மதிவாணன், SSG,காமராஜ்,ஜெயராமன் ,சுப்பராயன்,குமார், ஆகியோர்  பொது அரங்கில்  கலந்து கொண்டனர். தோழர்  ஆர்கே, தோழர்சி சிங்  வாழ்த்துரை  வழங்கினர்.

கீழ்க்கண்ட  தோழர் கள்  நிர்வாகிகளாக  தேர்ந்தடுக்கப்பட்டனர்.

தோழர். பாணி  கிரஹி  தலைவராகவும்,

தோழர்:​- செல்லப்பாண்டியன்  ,செயல்  தலைவராகவும்,
தோழர்:- சுப்புராமன்  செயலராகவும்,
தோழர்:​  விஜயகுமர்ர்  இணை  செயலராகவும்,
தோழர் கண்ணதாசன் , கரு ர்  ,பொருலராகவும் , தேர்ந்தடுக்கபட்டனர்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .SC/ST சேவா சங்கத்தின்


 SC/ST சேவா  சங்கத்தின்  மாநில்   சங்க மாநாடு மற்றும்  தேர்தல்  06/02/2016 அன்று  நடை பெற்றது. தேர்தலில்  வெற்றிபெற்று  மாநில  சங்கத்தின்  அங்கீகரிக்கப்பட்ட  பட்டியல வெளியிடப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்

செய்திகள்

செய்திகள் 

உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 
7வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் போட்டியிடும் சங்கங்கள்  விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
நமது NFTE சங்கத்தின் சார்பில் தேர்தலில் 
போட்டியிட விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் உடனடியாகத் தேர்தல் அதிகாரிகளை 
நியமிக்குமாறு மாநில நிர்வாகங்களை  டெல்லி 
 CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
வங்கிக்கடன் 
UNION வங்கி போன்ற வங்கிகள் நமக்கு கடன் கொடுப்பதற்கு 
கடுமையான நிபந்தனைகளை  விதித்த காரணத்தினால்  புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. இன்னும் இரண்டு வாரங்களில்  கூடுதல் சலுகைகளுடனும், கடுமையான நிபந்தனைகள் இல்லாமலும் இரண்டு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என 
டெல்லி நிர்வாகம் நமது சங்கத்திடம் தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
GPF...
22/02/2016க்குப்பின் GPF நிதி ஒதுக்கீடு  நடைபெறும் என்று நம்பப்படுகிறது. ஆயினும் GPF சம்பந்தமாக CORPORATE அலுவலகம் கேட்டிருந்த சில விவரங்களை அனுப்பாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பில்லை என்றும்  கூறப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------
BSNL நேரடி ஊழியர் ஓய்வூதியப்பலன்கள் 
BSNLலில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கான 
புதிய ஓய்வூதியத்திட்டம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. 
இதனிடையே  18ந்தேதி டெல்லியில் 
NFTE மற்றும் AIBSNLEA  சங்கங்களிடம் 
இத்திட்டம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 
BSNL தனது பங்காக சத பங்களிப்பைச்செய்வதாகவும்..
 ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்பு சதவீதம் பரிசீலிக்கப்படும் 
எனவும்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

15 ஆண்டுகளாக ஓய்வூதியப்பலன்களோ, 
பாதுகாப்போ இல்லாமல் BSNL நேரடி  ஊழியர்கள் 
நிராதரவாய் BSNLலில் பணிபுரியும் நிலை 
நமது சங்கத்தால்  சுட்டிக்காட்டப்பட்டது. 
மேலும் 3 சதப்பங்களிப்பு குறைவென்றும்...  
நிர்வாகம்  கூடுதல் பங்களிப்பு 
CONTRIBUTION அளிக்க வேண்டும் 
எனவும்  கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
இப்பிரச்சினை மார்ச் 4 அன்று கூடவுள்ள 
BSNL வாரியக்கூட்டத்தின்  ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
JTO இலாக்காத்தேர்வு 
JTO இலாக்காத்தேர்வை எதிர்த்து ஏற்கனவே
 இராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில்.. 
கேரளா மற்றும் ஒரிசா மாநிலங்களிலிருந்தும் 
சில தோழர்கள் வழக்கு மன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 
இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். 
இருந்தபோதும் நமது மத்திய சங்கம் சம்பந்தப்பட்ட 
தோழர்களை சந்தித்து சிக்கலைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறது.