சனி, அக்டோபர் 17, 2015

CM தேசியக்குழு கூட்ட முடிவுகள்

JCM தேசியக்குழு கூட்ட முடிவுகள் 

JCM தேசியக்குழு 16/10/2015 அன்று டெல்லியில்
 மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் 
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

1.  மின்விபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு கருணை அடிப்படை பணிகளில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.

2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA  தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.

3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட நகரங்களில் தனியாருக்குத்  தாரை வார்க்கப்படும்.

4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி மீண்டும் நினைவூட்டல் கடிதம் DOTக்கு  அனுப்பப்படும்.

5.CASUAL ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது  பற்றி 
BSNL வாரியக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

6. ஊழியர்களின்  வாடகை இல்லா குடியிருப்புத்தொலைபேசியில் 
இரவுநேர இலவசங்களை  அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

7. TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் பற்றி  ஊழியர் தரப்பு இரண்டு    வாரங்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

8. DELOITTE குழு அமுலாக்கத்தில்  மாவட்டங்கள் இணைக்கப்படும் போது BUSINESS AREA எனப்படும் வியாபார வட்டத்தில் சம்பளம் மற்றும்  நிர்வாகப் பொறுப்புக்களும்,  ஊழியர் மாற்றங்கள் SSA அளவிலும் இருக்கும்.

9. MDF மற்றும் பழுது பதியும் தொலைபேசிகளை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

10.இலாக்காத் தேர்வுகள்  அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் மீண்டும் வெளியிடப்படும்.

11.சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

12.CORPORATE  அலுவலகப் பணியாளர்களுக்கு தலைமையகப்படி  
HQ ALLOWANCE வழங்குவது ஏற்கப்படவில்லை.

13. தவறுதலாக  வழங்கப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச  நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

14. பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவது, TA மற்றும் மருத்துவ முன்பணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

15. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.

16. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும்  ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

17. JCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட  பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கூட்டம் நடைபெறும்.

18. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றுதல் பற்றி பரிசீலிக்கப்படும்.

தோழர்களே...
JCM கூட்டத்தில் போனஸ் வழங்குவது,
 JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள்
 மேற்கொள்வது ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
பல முடிவுகள் ஆகட்டும் பார்க்கலாம் 
என்ற பாணியிலேயே உள்ளன. 

குறிப்பாக போனஸ் வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து ஊழியரை ஏமாற்றுவது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
OFFICIATING JTO - நிரந்தரம் 

JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையொட்டி  JTO பதவியில் நெடுங்காலமாக OFFICIATING  செய்து வரும் TTA தோழர்களை நிரந்தரம் செய்வது பற்றி டெல்லி தலைமையகம் மாநில நிர்வாகங்களுக்கு சில  குறிப்பிட்ட  வழிகாட்டுதல்களை வழங்கியதோடு அவை 31/10/2015க்குள்  முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

  • 31/03/2016 அன்று JTO  காலியிடங்கள் கணக்கீடு செய்தல்.
  • தற்போது OFFICIATING  செய்து வரும் TTA தோழர்களின் எண்ணிக்கை கணக்கீடு.
  • தேவையான  JTO காலியிடங்களின்  கணக்கீடு.
  • மேற்கண்ட தோழர்கள் PHASE I பயிற்சிக்கும் களப்பயிற்சிக்கும்  FIELD TRAINING அனுப்புதல்.
  • PHASE I பயிற்சி மற்றும்  களப்பயிற்சி முடித்தவர்களை நிரந்தரப்படுத்துதல்.

JTO  OFFICIATING  தோழர்களின் நிரந்தரம் பற்றிய பிரச்சினை தற்போதுதான்  நிரந்தரமான தீர்வை நோக்கி நடைபோடுகிறது.