திங்கள், மே 09, 2016

nfte

நான் தான் .. நான் தான் ... நம்பர் 1 நான் தான் ...


அங்கீகரிக்கபட்ட சங்கம்... நான் தான் ..

என்னால் மட்டுமே முடியும் ...

என அழுக்கு தண்ணீரில் வாய் கொப்பளித்து 

போனஸ் ...LTC ...MRS ...

பறிகொடுத்த BSNLEU சங்கத்தை 
புறம் தள்ளிடுவோம் ...

மே 10 ..கறை படுவோம் ...

அக்கறைபடுவோம் ...

NFTE க்கு வாக்கு நிரப்பிடுவோம் 

வாக்கு வெல்லட்டும்... வாய்மை வெல்லட்டும்..

சிந்தனை செய்... இளைய மனமே...

வண்ணக்கனவுகளோடு...
வருங்கால நம்பிக்கையோடு...
BSNLலில் அடியெடுத்து வைத்தோம்...
நம் கனவைக் கலைத்தது யார்?
அங்கீகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு 
நம் வருங்காலத்தை சிதைத்தது யார்?

கலைந்த கனவுகள் ஒன்றா? இரண்டா?
இழந்த உரிமைகள் எண்ணில் அடங்குமா?

வாங்கிய சம்பளம் குறைந்து போன 
வன்கொடுமைக்கு  காரணம் யார்?

பத்தாண்டு நிபந்தனையில்.. 
பதவி உயர்வை தடுத்தது யார்?

பயிற்சிக்கால உதவித்தொகை உயர்வில் 
பாராமுகமாய் இருந்தது யார்?

பதினாறு ஆண்டுகள் ஆனபோதும்...
ஓய்வூதியத்திட்டத்தை தடுத்தது யார்?

பரிட்சை என்பதைக் கானல் நீராக்கி 
நம் கண்ணை  மறைத்தது யார்?

போனஸ் என்பதையே நம்
தலைமுறை காணாததற்கு காரணம் யார்?

மருத்துவப்படி என்பதை மருந்துக்கு கூட
நாம் அனுபவிக்காமல் செய்தது யார்?

LTCயா? அது எங்கே இருக்கு? என்று 
ஏக்கத்துடன் நம்மை ஏங்க வைத்தது யார்?

வாக்கு வெல்லட்டும்...
வாய்மை வெல்லட்டும்...


தடுத்ததும்.. கெடுத்ததும்...
BSNLEU என்னும் அங்கீகார மமதையல்லவா?

இளைஞர்களின் வாழ்வைக்கெடுத்த 
இயக்கங்கள் முன்னேறுமா?

எனதருமை இளைஞனே...
நடுவிரலில் மைபூசு...
நம் வாழ்வு கெடுத்தோர் 
முகத்தில் கரி பூசு..

எஞ்சிய நம் வாழ்வு வளம் பெற..
நாம் இழந்ததை மீண்டும் அடைந்திட..
நம்மோடு இணைந்த கரங்களுக்கு..
NFTEன் இணைந்த கரங்களுக்கு..
வரிசை எண் 16ல் வாக்களி...