வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

ஊழியர் நல வாரியம்

ஊழியர் நல வாரியம் 
STAFF WELFARE BOARD 

BSNL ஊழியர் நலவாரியக்கூட்டம் 22/08/2014 அன்று டெல்லியில் 
CMD தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பில் சங்கத்திற்கொரு பொறுப்பாளர் கலந்து கொள்ள நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள்  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.


 • கல்வி உதவித்தொகை SCHOLARSHIP விண்ணப்பிப்பதற்கான அடிப்படைச்சம்பள நிர்ணயத்தை   உயர்த்துதல். REMOVAL OF BASIC PAY LIMIT.
 • பல கல்வி நிலையங்களில் மதிப்பெண்களுக்குப்  பதிலாக GRADE முறை அமுலில் இருப்பதால் புதிய வழிகாட்டுதல் அறிவிக்கப்பட வேண்டும்.
 • தற்போதுள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்துதல்.
 • குறைந்த வட்டியுடனோ, வட்டி இல்லாமலோ கல்விக்கடன் வழங்குதல்.
 • FASHION TECHNOLOGY படிப்பை கல்வி உதவித்தொகை பெற அங்கீகரித்தல்.
 • இறப்பு அன்று வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.25000/= என  உயர்த்துதல்.
 • இறப்பு அடையும் ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்குதல். இதற்காக மாதந்தோறும் காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்தல்.
 • நலவாரிய நிதி ஒதுக்கீட்டை  FUND உயர்த்துதல்.
 • ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான அன்பளிப்பை உயர்த்துதல்.
 •  நலவாரிய நிதி ஒதுக்கீட்டை விரைந்து முடித்தல்.
 • இயற்கை பேரழிவில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.10000/= உதவி அளித்தல்.
 • மனமகிழ் மன்றங்களுக்கான நிதி உதவியை ரூ.10000/= முதல் 30000/= வரை வழங்குதல்.
 •  சுற்றுலா செல்ல வழங்கப்படும் உதவித்தொகை 2002ல் நிர்ணயம் செய்யப்பட்டது. இது உடனடியாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். 90 சத செலவு ஈடுகட்டப்பட வேண்டும். 2000 KM வரை சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
 • ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தை உயர்த்துதல்.
 • கிர் காடுகள்,டாமன் டையு மற்றும் போர்பந்தரில் HOLIDAY HOME விடுமுறை வீடுகளை கட்டுதல்.
 • ஓய்வு பெற்ற ஊழியர்களை நலவாரிய உறுப்பினர்களாக அனுமதித்தல்.
 • நலவாரிய உறுப்பினர் காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்துதல்.

வாழ்த்து கிறோம்

மத்திய  அரசின் கூட்டு றவு  துறை நமது டெலிகாம் கூட்டு றவு

 சங்கத்தை  சிறந்த  நிர்வாகத்திற்கும்  இந்திய  நேபாள்  நட்புறவு

அவார்ட் வழங்கிட  தேர்ந்தடுத்து ள்ளது .ஆகஸ்ட்2 ம் தேதிஅவார்ட்

வழங்கப்படள்ளது சங்கத்தலைவர்  தோழர் வீரராகவன்  அதை பெற உள்ளார்

.அவரை \வாழ்த்து கிறோம் மேலும் அவார்ட் வழங்கிட உருதுனையாக இருந்த

இயக்குனர்கள் ,உறுப்பினர்கள் ,ஊழியர்கள்  அனைவரையும்  பாராட்டுகிறோம் .