வியாழன், டிசம்பர் 31, 2015

NEW YEAR WISHES

·         Tomorrow is the first blank page of a 365 page book. Write a good oneBrad Paisley American singer-songwriter and musician


சனி, டிசம்பர் 19, 2015

DEMO 22/12/2015

அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் 
சார்பாக 
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு உடனடியாக 

78.2 சத IDA இணைப்பை வழங்கக்கோரி 
இழுத்தடிக்கும் இழிநிலையை எதிர்த்து...

கேள்விகள் கேட்டே காலம் தள்ளும் கொடுமையைக் கண்டித்து...

22/12/2015 - செவ்வாய் அன்று 

பொதுமேலாளர் அலுவலகம்  
மாலை  05300 மணி 

வியாழன், டிசம்பர் 17, 2015

அஞ்சலி.

ஒப்பற்ற தோழனுக்கு 
மாற்றுத்திறனாளிகளின் மலர்ச்சிக்குப் பாடுபட்ட 
பொதுவுடைமைப் போராளி
தோழர்.சிதம்பரநாதன் ள்ளம் கசிந்த அஞ்சலி.


திங்கள், டிசம்பர் 14, 2015

மாவட்டசெயற்குழு

NFTE-BSNL, PUDUHERRY

மாவட்டசெயற்குழு
நாள்:19/12/2015----  மாலை 0500 மணி---- சங்க அலுவலகம்


தலைமை:- M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
v அஞ்சலி
ஆய்படுபொருள்
v தமிழக/புதுவை வெள்ளசேதம்
v அமைப்பு நிலை
v பழுதுகள்/சேவைபதிப்பு களைதல்
v அ.இ,செயற்குழு முடிவுகள்
v மாநில மாநாடு- நிதி திரட்டுதல்
v மாவட்ட சஙக நிதி நிலை
v இதர தலைவர் அனுமதியுடன்.

பணிஓய்வு பாராட்டுவிழா
தோழர் A.ஆரோக்கியதாஸ் -- தோழர். P.ஆறுமுகம்
அனைவரும் வருக!
M.செல்வரஙகம்,  மாவட்டசெயலர்


திங்கள், டிசம்பர் 07, 2015

STR MEET POST PONED

கன மழை  ,தொடர் மழை  காரணமாக  09/12/2015 திருநெல்வேலி  பர்ரமரிப்பு  பகுதி  மாவட்ட செயற்குழு , கிளை  அமைப்பு  கூட்டம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர்  தேதி  அறிவிக்கப்படும்.

திங்கள், நவம்பர் 30, 2015

தமிழ் மாநிலமாவட்டச் செயலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்,

தமிழ் மாநிலமாவட்டச் செயலர்கள் 
கலந்தாய்வுக் கூட்டம், கடலூர்

           மாநிலச் சங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் மாநில மாவட்டச்செயலர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தை கடலூர் மாவட்டச் சங்கம் ஏற்றுநடத்தியது.

           கடலூர் மெயின் தொலைபேசியக கான்பரஸ் ஹாலில் 27-11-15வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாநிலத்தலைவர் தோழர் M. லட்சம்தலைமையில் கூட்டம் துவங்கியது. மாநில பொறுப்புச் செயலர் தோழர்  P.சென்னகேசவன் தவிர்க்க முடியாது வரமுடியாத சூழலில் சென்னை தோழர்  G.S.முரளிதரன்  மாநில உதவிச் செயலாளர் பொறுப்பேற்று நடத்தினார். தமிழகத்தின்பெரும்பான்மை மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டது இந்த அமர்வின்தனிச்சிறப்பு.

           தர்மபுரி மாவட்டச் செயலர் தோழர் மணி அவர்கள் சமீபத்திய புயல்மழையில் -- கடலூர் உள்ளிட்டு-- மாநிலத்தில் அகால மரண மடைந்தவர்களுக்குஅஞ்சலி உரையாற்ற அவை அஞ்சலி செலுத்தியது.

           நமது மாவட்டச் செயலர் இரா,ஸ்ரீதர் மாவட்டசங்க சிறப்பு நிகழ்வுகளைக்கூறி வந்திருந்தோரை வரவேற்றார்.

           அவுரங்காபாத் மத்திய செயற்குழு விவாதப் போக்குகளையும்முடிவுகளையும் மிகச் சிறப்பாக விளக்கி மத்திய சங்கச் சிறப்பு அழைப்பாளர்தோழர் P. காமராஜ் துவக்க உரையாற்றினார்.

           மாநில உதவிச் செயலாளர் தோழர் G.S. முரளிதரன் நிகழ்ச்சிநிரலைஅறிமுகம் செய்து அமர்வின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார்.

வேலூர் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு
           அடுத்த மாநில மாநாடு வேலூரில் நடைபெற உள்ளது.  வேலூர் மாநிலமாநாட்டு வரவேற்புக் குழுப் பொதுச் செயலாளர் தோழர் P. நெடுமாறன்வரவேற்புக்குழுவின் சார்பில் மாநில மாநாட்டிற்காக எடுக்கப்பட்டுவரும்தயாரிப்பு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் அமர்வின் முன் வைத்தார்.மாநில மாநாடு சிறக்க நிதி ஆதாரத்தைத் திரட்டித் தந்து அனைத்து மாவட்டச்செயலர்களும் ஒத்துழைக்க வேண்டும் என தோழமை வேண்டுகோள் விடுத்தார். வேலூர் மாவட்டச் செயலர் தோழர் அல்லிராஜா, வரவேற்புக்குழுப் பொருளாளர்தோழர் மதியழகன் மாநாடு பற்றிய கூடுதல் விவரங்கள் தந்து உரையாற்றும்போது எல்லோரும் மாநாடு சிறக்க ஒத்துழைப்பதுடன் அனைவரையும் வரவேற்கவேலூர் ஆவலோடு காத்திருப்பதாகக் கூறினார்கள்.

           அனைத்து மாவட்டச் செயலர்களும் பங்கேற்று உரையாற்றியது நாம்சந்திக்க உள்ள அங்கீகாரத் தேர்தலின்  வெற்றிக்கு  கட்டியம் கூறியது.  அமர்வில்கலந்து கொள்ள கடலூர் வந்த பிறகு தூத்துக்குடி மாவட்டச் செயலர் இடையேவந்த துயரச் செய்தியால் திரும்ப நேரிட்டது.
மாநில மாநாட்டு நிதி
           கடலூர் மாவட்டத்தின் சார்பில் மாநில மாநாட்டு பங்களிப்பான ரூபாய்ஒரு லட்சத்தை ஏற்கும் வகையில்  முதல் தவணையாக ரூபாய் இருபதாயிரம்(ரூ20,000/=) வழங்கப்பட்டது. மாவட்டச் செயலர்களிடம் வரவேற்புக் குழு ரசீதுபுத்தகங்களை ஒப்படைத்தது.
          
வாழ்த்துரை
தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்வின்பொறுப்புக்களுக்கிடையேயும் அமர்வில் கலந்து கொண்டு, ஒற்றுமையைவலியுறுத்தி மாநில மாநாட்டின் வெற்றிக்கு நல்ல துவக்கம் செய்து சம்மேளனச்செயலர் தோழர் G. ஜெயராமன் வாழ்த்தினார்.  அகில இந்திய அமைப்புச் செயலர்தோழர் S.S.கோபாலகிருணஷ்ணன் உற்சாகமான உரையாற்றினார்.

           மேலும், மாநில சங்க சிறப்பு அழைப்பாளரும் நமது வழிகாட்டியுமானமூத்த தோழர் K. சேது, முன்னாள் மாநிலச் செயலர் தோழர் S.தமிழ்மணி, TMTCLUமாநிலப் பொதுச்செயலர் தோழர்  R.  செல்வம் முதலிய தோழர்கள் கருத்துரைவழங்கினர்.  மாநிலப் பொருளாளர் தோழர் K. அசோகராஜன் உள்ளிட்ட மாநிலசங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.


நிறைவுரை
           மாலையில் நிறைவடைந்த மாவட்டச் செயலர்கள் அமர்வில் தோழர்பட்டாபி நிறைவுரையாற்றினார்.  பிரச்சனைத் தீர்வுகளின் இன்றைய நிலை, நாம்எதிர் நோக்கியுள்ள சவால்களை விளக்கிக் கூறி அங்கீகாரத் தேர்தலில் நாம்ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் கடமைளை மனதில் பதியச்செய்தார்.  மாநில மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறி மாநாடுவெற்றி பெற அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டினார்.

           கடலூர் அமர்வு நம்மை புதிய தடத்தில் நடை போட நம்பிக்கைவெளிச்சம் தந்த சிறப்பான உள்ளரங்க நிகழ்வாய் அமைந்தது என்பதில்அனைவருக்கும் மகிழ்ச்சி

           வெற்றியை நோக்கி உறுதியோடு உழைப்போம்!  முன்னோக்கிச்செயலாற்றுவோம்!