ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

மத்திய செயற்குழு-ஜெய்பூர்.

மத்திய செயற்குழு-ஜெய்பூர்.

ஏப்ரல் 09&10 தேதிகளில் ஜெய்பூர் நகரில் நமது மத்திய சங்கத்தின் மத்திய செயற்குழு நடைபெற்றது. தமிழக மத்திய செயற்குழு உறுப்பினர்கள்  தோழர்கள் பட்டாபி மாநிலசெயலர், SSG, புதுவை காமராஜ், கலந்துகொண்டனர்.  தமிழ் மாநிலத்தில் இருந்து தோழர்கள்லட்சம், சென்னகேசவன்,முரளிதரன்,அசோகராஜன்,  நடராஜன்,  கடலூர்ஸ்ரீதர்,மதுரை முருகேசன் உட்பட 25 தோழர்கள் கலந்துகொண்டனர். ராஜஸ்த்தான் மாநில சங்கம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தேசீயக்கொடி, சம்மெளனக்கொடி, உயர்த்தியபின் பொதுசெயலர் ஆய்படு பொருளை  முன் மொழிந்து விளக்கினார். மாநில , மாவட்ட மாநாடுகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடித்திட வலியுறுத்தினார். உறுப்பினர் சரி பார்ப்பை சந்திக்க கிளை செயலர் கூட்டத்தை மாநிலசங்கங்களும், மாவட்ட செயலர் உள்ளிட்ட விரிவடைந்த கூட்டத்தை மத்தியசங்கமும் நடத்திட திட்டமிட்டு ஜனவரி2016க்குள் நடத்திட வேண்டும். ஏப்ரல் 21&22 தேதிகளில் வேலைநிறுத்தம், டெல்லி பேரணி, மாநில கருத்தரங்கம். கோரிக்கை, நிர்வாகத்தின் நிலை, கவுன்சில்கள் செயல்பாடு ,மாற்று சங்க தடை செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்கினார்.
தலைவர் இஸ்லாம் நமது தேர்தல் அறிக்கையை செயல்படுத்திட நமது முனைப்பான செயல் பாடு, போனஸ் திட்டம், குறித்து விளக்கினார்.
பின்னர் பேசிய மாநிலசெயலர்கள் தங்கள் மாநில பிரச்சனைகள், வேலைநிறுத்தம், மாநில கருத்தரங்கம். உள்ளிட்ட அனைத்தையும் விவாத்திதனர்.
தோழர் பட்டாபி உரை:- நமது மாநில செயலர் கருத்தை கேட்க அனைவரும்  ஆவலாக இருப்பதாக தலைவர் அழைத்து உரை ஆற்றிட அழைத்தார்.
மத்திய சங்கம் சந்தாவை உயர்த்தியதற்க்கு நன்றி கூறி,நிறைவான நிலையில் மாநிலசங்கங்கள் மாநில மொழியில் பத்திரிக்கை வெளியிடுவது தேர்தல் தயாரிப்புக்கு உதவிடும் என்பதை முன் மொழிந்தார்.
ஓய்வூதியம்  மிக பாதுகாப்பாக உறுதி படுத்தப் பட்டுள்ளது என்ற நம்பிக்கை இருந்தது. ஓய்வூதியம் மத்திய அரசின் பொறுப்பு என எண்ணி இருந்தோம். ஆனால் இன்று ஓய்வூதியம் பாதுகாப்பாக இல்லை. 37-அ விதி  BSNL ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து விளக்கம் இருந்தாலும் ஓய்வூதியம் மத்திய அரசின் பொறுப்பு என்பதை தெரிவிக்கவில்லை.
2010 ஓய்வூதிய மாற்றத்திற்க்கான அமைச்சரவை குறிப்பில் ஊதிய மாற்றம் செய்யும் பொழுதுஎல்லாம் ஓய்வூதியம் மாற்றப்படுவது சட்டரீதியாக தவறு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த ஊழியர்கள் பொதுதுறை மாறும் பொழுது ஓய்வூதியம் வழங்கிட  DOP&T வழிகாட்டுதலை DPE இதுவரை ஏற்று உத்திரவு வெளியிடவில்லை.கடந்த 14 ஆண்டுகளில்
BSNL  IDAஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை, செலவினம், குறித்த எந்த தகவலும் இல்லை. தோழர்கள் இஸ்லாம் மற்றும் புதுவை காமராஜ் தகவல் உரிமை சட்டம் மூலமாக பெற்ற தகவல்கள் பல செய்திகளை வெளிகொண்டு வந்துள்ளது. முதன் முறையாக இந்த வருடம் பட்ஜெட்டில் IDA  ஓய்வூதியம் ரூ 3821 கோடி என மதிப்பீடு செய்யப்படுள்ளது. ஓய்வூதியம் செலவில்  அரசின் 60%  பொறுப்பு என்பதில் இன்று DOT ஓய்வூதியத்துடன் MTNL ஓய்வூதிய செலவும் சேருகிறது என்பது கவலைக்குரிய அம்சம் ஆகும்.
விதி37-அ பாரா 2ல் திருத்தம் தேவைப்படுகிறது. FR 116ன் அடிப்படையில் ஓய்வூதியகொடை இருக்க வேண்டும். ஓய்வூதியம் அரசின் பொறுப்பு என்ற செயலர்கள் நிருபேந்திர மிஸ்ரா, சித்தார்த் பெகுரா கடிதங்களின் உத்திரவாதத்தை உத்திரவாக பெற நடவடிக்கை எடுத்திடவேண்டும். அரசைபொறுப்பாக்கிட வேண்டும்.
பணிபாதுகாப்பு அடுத்த பிரச்சனையாகி உள்ளது. நிர்வாகம் மக்களுக்கு அறிவித்து நடத்திய ஆண்டு பொதுக்குழு அறிக்கையில் டிலாய்டி கமிட்டி பரிந்துரைகள் அமுலாக்கம்,ஊழியர் எண்ணிக்கை குறைப்பு ,மாற்றுபணி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
BCG கமிட்டி பரிந்துரைகள் ஓரம் கட்டப்பட்டு டிலாய்டி கமிட்டி பரிந்துரைகள் அமுலாக்கம் முன்னுக்கு வைக்கப்பட்டுள்ளது.75000 பதவிகள், உபரி என் அறிவிக்கப்பட்டு,50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களின் ஊதியத்தில் 50% மான்யமாக அரசிடம் கோரப்படவுள்ளது. இது சூழ்ச்சியான ஏற்பாடு.50% கிராக்கிப்படி இணைப்பு கோரி வருகிறோம்.அரசு மான்யம் பெறும் பொழுது கோரிக்கை சாத்தியமாகுமா?.பொதுத்துறை ஊதிய மாற்றத்தின் பொழுது நிபந்த்னையே அரசு ஊதிய மாற்ற செலவுக்காக நிதி அளிக்காது என்பது ஆகும். எனவே நமது ஊதிய மாற்றத்தை மறுக்கவே இப்படிஒரு ஏற்பாடு நடைபெறுகிறது.
மாற்றாக நமது நிறுவனத்தின் வளர்ச்சி பணிக்காக அரசின் உதவி பெற வேண்டும். இதை வலியுறுத்தி பெற வேண்டும்.

டிலாய்டி கமிட்டி பரிந்துரைகளில் பாதகமான அம்சமான மாற்றலில் மாவட்ட அளவில் மாற்றல் என் உத்திரவை மத்திய சங்கம் பெற்று தந்துள்ளது. ஏரியா அலவலகம் மாற்றத்தின் பொழுது பராமரிப்பை தவிர நிர்வாகம்,மாற்றல்கள்,ஊழியர் பிரச்சனைகள், உபரி ஊழியர் பயன்பாடு குறித்து நிர்வாகத்தின் நிலை என்ன? விளக்கம் பெறவேண்டும்.
(பட்டாபி உரை தொடரும்