வெள்ளி, பிப்ரவரி 28, 2014

JCM தேசியக்குழு

JCM தேசியக்குழு 

NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள் 

சென்ற JCM கூட்டத்தில் NFTE  சார்பாக 
17 பிரச்சினைகள் கொடுக்கப்பட்டன. 
ஆனால் 10 பிரச்சினைகள் மட்டுமே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது.  JCM  கூட்டத்தில் நாம் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாக மிச்சம் உள்ள 7 பிரச்சினைகளும் எதிர்வரும் 
JCM கூட்டத்தில் விவாதிக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்படடுள்ளது. 
அத்துடன் 3 புதிய பிரச்சினைகளையும் சேர்க்க கோரி ஊழியர் தரப்புச்செயலருக்கு நமது பொதுச்செயலர் கடிதம் அளித்துள்ளார்.

நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் 
  • JTO பதவியில் OFFICIATING செய்யும் தோழர்களின் பதவி  நிரந்தரம்.
  • SC/ST  காலியிடங்களை நிரப்புதல் 
  • JAO/JTO தேர்வு முறைகளை எளிமைப்படுத்துதல்.
  • MANAGEMENT TRAINEE தேர்வுக்கு ஊழியர்களை அனுமதித்தல்.
  •  TSM ஆகப்பணிபுரிபவர்களை நிரந்தரப்படுத்துதல். 
  • JAO/JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.
  • பயிற்சிக்கால உதவித்தொகையை STIPEND உயர்த்துதல்.
  • மகளிருக்கு கூடுதலாக 12  சிறுவிடுப்பு வழங்குதல்..
  • ஒழுங்கு நடவடிக்கைகளை DISC.CASES விரைந்து முடித்தல்.
  • 01/10/2000ல் நிரந்தரம் ஆன TSM தோழர்களுக்கு BSNL ஏற்பு உத்திரவு வழங்குதல்.

தோழர்.உம்ரமால் புரோஹித்
மத்திய அரசு ஊழியர்களின் ஒப்பற்ற தலைவரும் 
தேசிய கூட்டாலோசனைக்குழு செயலரும் 
AIRF இரயில்வே தொழிற்சங்கப்பிதாமகரும்  
தொழிலாளர் மேம்பாட்டிற்காக 
தோழர்.குப்தாவுடன் தொடர்ந்து 
தோள் கொடுத்தவருமான 

தோழர்.உம்ரமால் புரோஹித் 

இன்று 27/01/2014 அதிகாலை 
மும்பையில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவு 
மத்திய அரசு ஊழியருக்கு பேரிழப்பு.
வாழ்நாளெல்லாம் 
தொழிலாளருக்காக 
வாழ்ந்து மறைந்த 
தலைவரை 
வணங்குவோம்..

BSNL -- MTNL இணைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

BSNL அனைத்து அதிகாரிகள் 

ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு 

BSNL -- MTNL இணைப்பு 

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

ஊழியர் பிரச்சினைகள் , ஓய்வூதியம்,பங்கு 

விற்பனை ஆகியவற்றை முறைப்படுத்தாது 

BSNL MTNL இணைப்பில் முனைப்புக்காட்டும் 

அரசின்  அவசர கோல முடிவை எதிர்த்து 


இன்று 28/02/2014 - வெள்ளிக்கிழமை 

மாநிலம் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் 

மதிய உணவு இடைவேளையில் அனைத்து அதிகாரிகள் 

ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக 

கண்டன ஆர்ப்பாட்டம்