திங்கள், செப்டம்பர் 30, 2013

சொசைட்டி செய்திகள்

சொசைட்டி செய்திகள் 

01-10-2013முதல் வட்டிவிகிதம் 16.5%இருந்து 1%குறைந்து  15.5%ஆக மாற்றப்பட்டுள்ளது 

  • ஈவுத்தொகை (Dividend) 12% அக்டோபர் மாத சம்பளத்தில் வழங்கப்படும்  

  •  இன்சுரன்ஸ் ரூ 3 லட்சத்தில் இருந்து  ரூ 4 லட்சமாக உயர்த்தப்படும் 

  • மாதந்தோறும் பிடிக்கப்படும் Thrift fund ரூ 600 லிருந்து ரூ 800 ஆக உயர்த்தப்படும் 

  • அபராத வட்டி (Penal interest ) 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது 

  • Ordinary Loan ரூ 5 லட்சமாக உயர்த்த ஒப்புதல்  பெற டெல்லி க்கு அனுப்பப்பட்டுள்ளது 

IDA 6.6 சதம்

அக்டோபர்  IDA

நுகர்வோர் விலைவாசி குறியீட்டெண் 

உயர்வின் அடிப்படையில் 

01/10/2013 முதல் 


உயரும் என்று தெரிகின்றது.

சொசைட்டி பொதுக்குழு

  1. சொசைட்டி பொதுக்குழு கூட்டம் 29/09/2013 அன்று

  1. சென்னையில்நடைபெற்றது. தமிழகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை11000,
  1. சென்னை 6700,இதர 2300. தமிழகத்தின் தற்பொதைய
 இயக்குனர்கள்10,சென்னை4 மட்டுமே.புதிய இயக்குனர்கள் 18

பதவிகளில் தமிழகத்திற்க்கு வெறும் 10மட்டுமெ, முன்பு இருந்த நிலையை

விட குறைத்து விட திட்டமிட்டு சென்னை சங்க கூட்டணி களம்

இறங்கின.தமிழகத்தின் உரிமையை காத்திட போராடினோம்.இனிதமிழகத்தின்

 பங்கினை குறைத்திட திட்டமிட்ட அனைத்து சக்திகளையும் எதிர்த்து

போராடவேண்டும்.
திட்டமிடப்பட்ட தாக்குதல் தலைவர் தோழர் வீரராகவன் மீது
 
தொடுக்கப்பட்ட தை வன்மைய்யாக கண்டிக்கிறோம்

சனி, செப்டம்பர் 28, 2013

JAO தேர்வு

JAO தேர்வு  
தேறியும்.. தேறாதோர்...

 2006/2009/2012 ஆகிய வருடங்களுக்கான JAO காலியிடங்களுக்கு தேர்வெழுதி தேவையான மதிப்பெண்களை பெற்றிருந்தும் போதிய  காலியிடங்கள் இல்லாத காரணத்தால் பல தோழர்கள்  
JAO பதவி உயர்வை அடைய முடியவில்லை.

JAO  பதவி என்பது அகில இந்திய கேடரில் இருந்து மாநில கேடராக ஆக்கப்பட்டதால் வந்த பிரச்சினை இது. தற்போது CORPORATE அலுவலகம் மேற்கண்டவாறு JAO தேர்வில் தேர்ச்சியடைந்தும்  காலியிடங்கள் இல்லாததால் பதவி உயர்வுக்கு செல்ல இயலாத தோழர்களின் விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.   
அக்டோபர் 3க்குள் மாநில நிர்வாகங்கள் பதில் தர வேண்டும்.

JAO தேர்வில் தேறியும் தேறாத  
தோழர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு காத்திருக்கின்றது... 

RESOLUTIONS









மத்திய செயற்குழு

ஜுனகட் நகரில்  செப் -24/25 தேதிகளில் மத்திய செயற்குழுக்கூட்டம் நடை பெற்றது. நமது மாவட்டத்தில் இருந்து19 தோழர்கள் கலந்து கொண்டனர்.
சஙக கொடிஏற்றத்திற்க்கு பின் மத்திய செயற்குழு துவக்கத்தில் ஆய்படு பொருள் இணைப்பு குறித்து விவாதம் எழுந்து பின்னர் அனைத்து பிரச்சனைகளையும் இன்ன பிற தலைப்பில் விவாதிக்கலாம் என் பொதுசெயலர் அறிவித்தார், ஆனால் அவைளை விவாதிக்கயாரும் இல்லை.
தமிழக மாநிலசெயலர் தோழர்.பட்டாபி தனது பாணியில் பிரச்சனைகளை  பட்டியலிட்டு தீர்வுக்கு முன் வைத்தார். அ.இ.சஙக நிர்வாகி தோழர்.S.S.G. தமிழக நிகழ்வுகள்,அத்துமீறல்கள் குறித்து பேசினார்.தமிழக மாநில சில தோழர்களின் அறிக்கையை பல மாநிலசெயலர்கள்.பொதுசெயலர்  கண்டித்தனர்.
இறுதியில் பேசிய பொதுசெயலர்  எல்லா கருத்துகள்,குற்றசாட்டுகளுக்கு, தனது வெளிப்படையான பேச்சு மூலம் பதில் அளித்தார்.
தமிழக மாநிலசெயலர் தோழர்.பட்டாபி  தலைமையில் அமைந்த குழு போராட்ட கோரிக்கைகள்-குறிந்து விவாதித்து பரிந்துரை செய்தது.
கடும் மழை ,நல்ல ரம்மியமான இடம் ,வரவேற்ப்புக்குழு ஏற்பாடுகள் நல்ல முறையில் இருந்தது.

மத்திய சங்க செயற்குழு

மத்திய சங்க செயற்குழு குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் செப் 24/25 தேதிகளில் சிறப்புற நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

v    குறைந்த பட்சபோனஸ்புதிய போனஸ் திட்டம்
v    LTC, மருத்துவப்படி வெட்டு நீக்கிட
v    பதவி உயர்வு பாதகங்கள் நீக்கிட
v    பரிவு அடிப்படை பணி மதிப்பெண் தளர்வு,
v    BSNL நிதியாதாரம் 
v    ஒய்வு பெற்றோருக்கு 78.2 சத பலன் 
v    RM/GR D ஊழியர் STAGNATION பிரச்சினை 
v    பயிற்சிக்கால தொகையை உயர்த்துதல் 
v    பயிற்சி முடித்த RM/GR D ஊழியரை TM ஆக்குதல் 
v    SC/ST காலியிடங்களை நிரப்புதல்
v    JTO ஆக  OFFICIATING செய்யும் TTAக்களை நிரந்தப்படுத்துதல்.
v    உடல் ஊனமுற்றோருக்கு சிறப்பு சலுகைகள் 
v    தேர்வு விதிகள் தளர்வு
v    78.2 சத இணைப்பு பலன் 01/01/2007 முதல் நிலுவை ,வீட்டுவாடகை              படி, பெற
v    JAO/JTO/TTA/TMகேடர்களில் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம்
v    TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
v    நான்கு கட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
SC/ST
தோழர்களுக்கான  சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 
NE-12
சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
v    போன்ற கோரிக்கைகளை வென்றிட போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
v    அக்-09-2013 –ஆர்ப்பாட்டம்
v    மத்திய,மாநில,மாவட்ட சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம்
v    அனைத்து சங்கங்களை கலந்து வேலைநிறுத்தம்

v     

புதன், செப்டம்பர் 11, 2013

JCM NATIONAL COUNCIL

JCM  NATIONAL COUNCIL
தேசிய கூட்டாலோசனைக்குழு 

JCM தேசிய கூட்டாலோசனைக்குழு உருவாக்கத்திற்கான உத்திரவை 
BSNL நிர்வாகம் 09/09/2013 அன்று வெளியிட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

நேர்மைக்கும் திறமைக்கும் உதாரணமான நமது மாநிலச்செயலர்  
தோழர். பட்டாபி அவர்கள் NATIONAL JCMல் உறுப்பினராகஅறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்வுக்கும் பெருமைக்கும் உரியது.

ஊழியர் பிரச்சினை தீர்வில், BSNL வளர்ச்சியில் 
தோழர். ஜெகன் வழியில் 
தமிழகப்பங்கை  பாங்கை உரிய முறையில் 
தோழர். பட்டாபி செலுத்திட மனமார வாழ்த்துகின்றோம்.

BSNL/MTNL சீரமைப்புக்குழு

BSNL/MTNL  சீரமைப்புக்குழு 

நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் தலைமையிலான BSNL/MTNL சீரமைப்புக்குழு 12/09/2013 அன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை 
BSNLலில் ஒருலட்சம் பேருக்கும் 
MTNLலில் 20ஆயிரம் பேருக்கும் விருப்ப ஒய்வு அளிப்பது 

MTNL ஓய்வூதிய சுமைக்காக 5925 கோடி நிதியுதவி பெறுவது 

2010ல் 4G சேவைக்காக தண்டமாக கட்டிய 
ஏறத்தாழ 23000 கோடி  BWA பணத்தை திரும்ப பெறுவது..

8900 கோடி நட்டத்தை சந்தித்துள்ள BSNL,
5000 கோடி நட்டத்தை சந்தித்துள்ள MTNL 
ஆகிய அரசு நிறுவனங்களை நட்டத்தில் இருந்து மீட்பது...

போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு முறையும் பல எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றது. 
ஆயினும் உருப்படியான காரியங்கள் எதுவும் நடந்தபாடில்லை. 

மந்திரிகள் கூட்டம் நடக்கின்றது என்ற செய்தியை கேட்டு கேட்டு  
கவிஞர். மீராவின் 
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் 
கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.

ஆனாலும் காத்திருப்போம்..
பெட்ரோல் டீசல் வெங்காயம் விலை இறங்கும்..
BSNL/MTNL நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன்..

நன்றி  காரைக்குடி 

ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு
நாள்:-11/09/2013 புதன் காலை10 மணி-சங்க அலுவலகம்
தலைமை:தோழர்:அ.மகேஸ்வரன்,மாவட்டத்தலைவர்,
ஆய்படு பொருள்
வைப்பு நிதி-குறித்து முடிவு
பிரச்சனைகள்
இதரதலைவர் அனுமதியுடன்
1200 மணி-தோழர்.கோபி-பணிஓய்வு பாராட்டுவிழா

நமது மத்திய,மாநிலசங்க வேண்டுகோளின்
 அடிப்படையில்78.2% தீர்வுபெற்றதற்க்காக 

ரூ200/ பெற்று அனுப்பிட கோரி உள்ளது.
அனைவரும் வழங்கிட வேண்டுகிறோம்
அனைவரும் வருக!
தோழமையடன்,

ப.காமராஜ், மாவட்டசெயலர்

திங்கள், செப்டம்பர் 02, 2013

TTA POSTINGS

நமது  தோழர்கள்  A.D.சுப்பிரமணியன்,-IMPCS ,S.பசுபதி -பாஹுர் ,விஜயராகவன் -STR-அருண்  -திருக்கனூர்  பகுதிக்கு TTA ஆக  நியமிக்கப்பட்டுள்ளனர் .வாழ்த்துகிறோம்