சனி, ஜூலை 07, 2018

நிதிநிலை அறிக்கை-ட்ராய் பரிசிலனை

நிதிநிலை அறிக்கை-ட்ராய் பரிசிலனை
ட்ராய் தொலைத்தொடர்பு பகுதியின் 2017-18 வருவாய் குறித்து பரிசிலனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நமது நிறுவனம் குறித்த சில தகவல்களை பார்ப்போம்.
BSNL Q4  காலண்டில் ரூ 5707 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. டெலிகாம் பகுதி Q4 காலாண்டு வருமானம்.ரூ 62,198 கோடி BSNL மார்க்கட் பங்கு 8.2% ஏர்டெல் 33.52%, வொடோபோன் 19.91%, ஜியோ 13.88%, IDEA 13.84% பெற்று மூன்றாவது காலண்டைவிட 1.69% வருவாய் கூடி உள்ளது. இக்காலத்தில் BSNL 8.14% பெற்று நிறுவனம்  வருவாய் முன்னேற்றம் காட்டப்பட்டுள்ளது.
2017-18 காலத்தில் டெலிகாம் பகுதி வருவாய் மொத்தம் ரூ 2,54,618 கோடி பெற்று சென்ற ஆண்டை காட்டிலும் ரூ 2,74,770 கோடியில் இருந்து 7.34% குறைவாக வருவாய் ஈட்டியுள்ளது.
BSNL வருவாய் ரூ 2,80,18 கோடியில் இருந்து ரூ 2,21,14 கோடியாக 21.07%  குறைவு ஏற்பட்டுள்ளது.2017-18 ல் தென் மாநிலங்கள் வருவாய் டெலிகாம் பகுதி, மற்றும் ப்ச்ன்ல் நிறுவனத்திலும் அதிக வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. தென் மாநிலங்கள் டெலிகாம் பகுதி 31.09% BSNL 8.89%, வடக்கு 27.49%, BSNL 6.34%, மேற்கு 22.38%, BSNL 6.53%, கிழக்கு 19.03, BSNL 4.35% என வருவாய் பங்கு அமைந்துள்ளது.தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா வருவாய் ஈட்டி முதல் மூன்று இடங்களில் பிடித்துள்ளது.
BSNL ல் சென்ற ஆண்டை விட கூடுதலாக வருவாய் ஹரியான மட்டுமே ஈட்டியுள்ளது.
மத்திய அரசுக்கான வருவாய் கூட 16% குறைந்துள்ளது.
2017-18 மூன்றாவது காலண்டில் லைசன்ஸ் கட்டணம் சென்ற ஆண்டு ரூ 3249 கோடி இந்த ஆண்டு ரூ3104 கோடி,  அலைக்கற்றை உரிமகட்டணம் ரூ1629 கோடியில் இருந்து ரூ1152 கோடி,ARPU சராசரி வருமானம் ரூ 84 லிருந்து ரூ79 ஆக குறைந்துள்ளது. ARPU ரூ 150 க்கு மேல் உயர்ந்தால் மாட்டுமே லாபத்தை ஈட்டிட முடியும்.
இந்த அறிக்கை வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல. மாறக டெலிகாம் பகுதியின் ஆரோக்கியம் நலிவடைந்த நிலையில் இருந்து மாறிட, குறிப்பாக நமது நிறுவனம் நல்ல நிலைக்கு மாறிட வேண்டும். நமது கோரிக்கை தீர்வுக்கு அடித்தளமாக, நிர்ணயம் செய்யும் காரணியாக,மாற்றிட வேண்டும். நிதிநிலை பெருக்கம் BSNL வளமாக மாறிட மட்டுமல்ல, நமது ஊதிய மாற்றமும் அடங்கியுள்ளது. 04/07/2018 அன்று கூடிய AUAB வருவாய் பெருக்கிட,புதிய இணைப்புகள் பெற்றிட,மேலும் முனைப்புடன் செயல்பட மாநில , மாவட்ட ,கிளை மட்ட ஊழியர்கள் அதிகாரிகள் இணைந்து மாற்றம் காண்போம்.. BSNL நிறுவனத்தை உயர்த்துவோம். நாமும் உயர்வோம்.


AUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:

AUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:
 24-02-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா., அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால்., நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அமைச்சர் வழங்கிய  உறுதிமொழிகளின் மீது  எந்தவித முன்னேற்றங்களும் இல்லை. எனவே.,போரட்ட உறுதிமொழியை நிறைவேற்ற கோரி  கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. 
11-07-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம்., மாநிலங்களில் உள்ள CCA அலுவலகம் மற்றும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
24., 25 மற்றும் 26 ஜூலை 2018 ஆகிய தேதிகளில் கார்ப்பரேட் அலுவலகம்., மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகர்களில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது.
மாவட்டங்களில் ஒன்றுபட்டு போராட ஆயத்தமாவோம்.