செவ்வாய், மார்ச் 17, 2015

DEMONSTRATION


கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

19/03/2014
பொதுமேலளார் அலுவலகம்
மாலை 0500 மணி

ü ERP பிரச்சனையில் தொடரும் அவலங்கள்
ü மருத்துவ பில் பட்டுவாடா தாமதம்,
ü விடுப்பு எடுக்க சிரமம்,
ü ஊதிய பட்டியலுக்கு அலையும் அவலம்,
ü டவர்,கட்டிட வாடகை, கரண்ட்பில் காலதாமதம்,
ü காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியபட்டுவாடா காலதாமதம்,
ü எது யாரிடம் கேட்பது என குழப்பம்
ü திட்டமிடாத புதிய மாற்றம், ஊழியர்கள் திண்டாட்டம்,
ü பாஸ் வோர்டு ஊழியருக்கு இல்லை என்றால் ஊழியர் வேலை என்ன?
ü மாநில நிர்வாகம் பார்வையாளராக இருந்து வருவது ஏன்?
ü மாற்றத்தை ஏற்போம், குளறுபடிகளை எதிர்ப்போம்
ü ஊழியர் நலன் காத்திட, சிரமங்களை அகற்றிட ஆர்ப்பரிப்போம்!
அனைவரும் வருக! ஆர்ப்பரித்து வருக!
மாவட்ட சங்கம்.


MMUNITY FROM TRANSFER

IMMUNITY FROM TRANSFER 


சங்க நிர்வாகிகளுக்கு மாற்றல் விதிவிலக்கு 

BSNLலில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும் 
இரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்தது. அதில் கூடுதல் திருத்தங்கள் செய்து 13/03/2015 
அன்று மேலும் உத்திரவு வெளியிட்டுள்ளது.

அதன்படி 
  • அங்கீகரிக்கப்பட்ட  முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின் செயலர்,உதவிச்செயலர்  மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில்  இருந்து விலக்கு அளிக்கப்படும். 
  • அங்கீகார காலமான 25/04/2013 முதல்  24/04/2016 வரை  இந்த   விலக்கு அளிக்கப்படும்.
  • மேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் , மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு  பொருந்தும். கிளைகளுக்கு இச்சலுகை இல்லை.
  • சங்கம் மாறினாலும்  இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும். மாற்று சங்கங்களுக்கு சென்று மறுபடியும் இச்சலுகையை அனுபவிக்க முடியாது. 
  • மாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தால் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க  இயலும்.
அதிகாரிகள் சங்கங்களுக்கான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது இது ஊழியர் சங்கங்களுக்கும் பொருந்தும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.