புதன், மே 08, 2013

cuddallore settlement


கடலூர்  மாவட்ட  மாநாடுக்கு பின்னர்  தோழர் ஸ்ரீதர்  மீது  நடத்திய  தாக்குதல்,காவல்துறை  புகார்,நிர்வாக  புகார்,
என  தாக்குதல்  அனைத்தும்  முறியடிக்கப்பட்டு நிர்வாகத்தின் சுமுக அணுகுமுறை ,மாநில சங்கம்  முயற்சியால் பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  தோழர் ஸ்ரீதர் ,மாவ்ட்டசெயலர்  அவர்களுக்கு  நமது வாழ்த்துக்கள் 

கடலூர்  மாவட்ட சங்க  தீர்மானம் 

தீர்மானம் 1:

     திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையத்தில் நிகழ்ந்த பிரச்சனையை ஒட்டி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த மாவட்ட அவசர செயற்குழு ஆழ்ந்த கவலையுடன் பரிசீலித்தது.

   மாநில, மாவட்ட சங்கங்களின் உணர்வினைப் புரிந்து கொண்டு விரைவான தீர்விற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள உறுதி மொழி, நிர்வாகம் – சங்கத்திற்கிடையே இருக்க வேண்டிய நல் உறவிற்கு காட்டியுள்ள ஆக்கபூர்வமான சமிக்ஞை என்பதாக மாவட்ட செயற்குழு கருதுகிறது.

   எனவே மாவட்ட நிர்வாகத்தின் உறுதி மொழியினை ஏற்று வரவேற்கிறது. உறுதி மொழியை விரைவில் செயல்படுத்த வேண்டுகிறது

தீர்மானம் 2:

       நமது மாநில சங்கம், மாவட்ட சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     கிளைத்தலைவர் தோழர். V. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     மாவட்ட செயலருக்கு வழங்கப்பட இருந்த பணி இடை நீக்கத்தை கைவிடவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

     மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக நமது மாவட்ட முதுநிலைப் பொதுமேலாளருக்கும் இம்மாவட்டச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.


தீர்மானம் 3:

     கடலூர் மாவட்ட பணி இடை நீக்கப் பிரச்சனையில் உரிய நேரத்தில் தலையிட்டு தீர்விற்கு வழிகோலிய மாநில சங்கதிற்கு நன்றியை உரித்தாக்குகிறது.
    





திறந்தமடலும்,திட்டமிட்ட.....?


தமிழ் மாநில செயலர்,செயல்பாட்டைதொடர்ந்து தொடர்ந்து விமர்சனம் 

என்ற பெயரில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது, சுயவிமர்சனபார்வையுடன் 


சுத்தசுயம்ஆக, பாரபட்சமின்றி இருந்தால் பரிசீலிக்கலாம். சன்னிதான

 குரலுக்கு வாயசைத்தால் எப்படி ஏற்ப்பது.


 CGM கூட்டத்திற்க்குமாநிலசெயலர்,அழைத்ததும்,அன்றே வங்கி 

கணக்குகளை பெயர் மாற்றம் செய்யலாம் என்பதை ஏற்ற 

மாநிலபொருளர்,வாராமலேயெ போனது ஏன்?

புதுவையில் சில மாதங்கக்ளுக்கு முன்னர் போட்டி செயல்பாடு 

சீர்குலைவு, நடவடிக்கை எடுக்க மாநிலசெயலரிடம் பேசியவர் இன்று 

போட்டி செயல்பாடு சீர்குலைவு, நியாயமே என மடல் எழுதுகிறார். இது  

மட்டும் மாமியார் மண்குடம்..........

கருர்,ஈரோடு,திருச்சி,என தனிகூட்டம் நீங்கள் போட்டு,முடிவுஎடுத்து 

போட்டி செயல்பாடு செய்தால் நியாயம்.உங்களிடமிருந்து, போட்டி

 செயல்பாடு சீர்குலைவுயிடமிருந்து சங்கத்தை காத்திட மற்றவர்

 பேசினால் குற்றமா?.

மாநிலசங்கத்திற்க்கு  மாநில நிர்வாகிகள் கடிதம் எழுதுவது நியாயம்

 மாநிலத்தலைவர் சேலம் வாருங்கள் பேசலாம், அல்லது நீங்கள் 

விரும்பும் நாளில் பேசலாம், என்று கூறியும் வர மறுத்துவிட்டு வலைதள

 பரபரப்புக்கு எழுதுவது தேவையா?


மாநிலசங்க நிர்வாகி இல்லாத ஒருவர் தானே ALL iN ALL என்னிடம் பேச

 வேண்டும் இல்லை என்றால்.... என மிரட்டல் விடுப்பதும்,அவரிடம் 

பேசினால் மட்டுமெ எல்லாம் அசையும் என்பதை அனவரும் ஏற்க 

இயலாது.

நிபந்தனைஇன்றி பேசினால் ஒற்றுமைவரும்.தனி மையம், தமிழக மையம் 

சென்னையில் இருந்தால் எப்படி ஒற்றுமைவரும்.?


சேலம் அறிக்கை எழுதிய அசோக்ராஜ் மிக சிறபான அறிக்கை என 

முழங்கியதும், பின்னர் பல்டி அடித்து மாறியதும் ஏன்? சன்னிதானம் 

கூறியாதாலா?

திறந்த மடல் தங்கள் தனி ஆவர்த்தனத்தை நியாயபடுத்த,மூடிமறைக்க 

மட்டுமெ,இது கடந்த கால போஸ் அணி நடவடிக்கை என்பதை

 அனைவரும் அறிவார்கள்.


காரைக்குடி முடிவை ஏற்க மறுத்தவர்கள் மீது  so called , inflated பெரும் 

பான்மை mutivaiமுடிவை மீறியவர்கள் மீது நடவடிக்கை என்றால், 

சங்கத்திற்க்கும் அது பொருந்தும்.


தமிழ்கத்தில் பெரும்பானமை குறித்து இன்னும் மயக்கம் 

உள்ளது.போட்டிசெயல்பாடு செய்து தமிழ்மாநில சங்கத்தை 

சன்னிதானத்திற்க்கு வாலாக மற்றிட தமிழக தோழர்கள் தயாரில்லை 

என்பதை உறுதியுடன் நிறைவேற்றுவோம்.

சனி, மே 04, 2013

செய்திகள்


மாற்றல் வசதி 

அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு  
BSNL  நிர்வாகத்தின் 19/09/2012 தேதிய  உத்திரவுப்படி 
கீழ்க்கண்ட  மட்டங்களில் 
மாற்றல் வசதி  IMMUNITY  TRANSFER அளிக்கப்படுகின்றது.


1. அகில இந்திய  மட்டம் 
    பொதுச்செயலர்  - GENERAL  SECRETARY 
    உதவிப் பொதுச்செயலர் - ASST. GENERAL  SECRETARY 
    பொருளர்  - ALL INDIA TREASURER 

2. மாநில மட்டம் 
    மாநிலச்செயலர்  - CIRCLE SECRETARY 
    மாநில உதவிச் செயலர் - ASST. CIRCLE SECRETARY 
    மாநிலப் பொருளர்  - CIRCLE TREASURER 

3. மாவட்ட மட்டம் 
    மாவட்டச்செயலர் - DISTRICT SECRETARY 
    மாவட்ட  உதவிச்செயலர்  - ASST. DISTRICT SECRETARY 
    மாவட்டப்பொருளர்  - DISTRICT TREASURER 

கிளை மட்ட பொறுப்பாளர்களுக்கு மாற்றல் வசதி இல்லை.
தற்போது நமது சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் 
நமக்கும் இது பொருந்தும்.
உண்மையில் மாற்றல் வசதி IMMUNITY FROM TRANSFER - என்பது 
இருக்கும் இடத்தை விட்டு மாற்றல் செய்யக்கூடாது   என்பதேயாகும். 
ஆனால் நாம் மாற்றல் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றோம்.


செய்திகள்



மே 14 குடந்தையில்...
 வாக்களித்தோருக்கு,  வாகை சூட  வைத்தோருக்கு
  நன்றி தெரிவிக்கும் விழா.  
சிறப்பு சிறு விடுப்பு உண்டு.

தமிழகத்தில் JAO தேர்வில் தேறியோருக்கு OFFICIATING  செய்வதற்கு 
விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.

NFTE  அகில இந்தியத்தலைவர்  தோழர். இஸ்லாம் தலைமையில் டெல்லியில் கூடிய  அனைத்து
சங்க கூட்டத்தில்  BSNLன் மறு சீரமைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மந்திரிகள் குழுவிடம்
 ஒரு மனதான கோரிக்கையை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 78.2 சத IDA இணைப்பை விரைந்து அமுல்படுத்துதல்,  நிறுத்தப்பட்ட மருத்துவப்படி மற்றும் LTCயை மீண்டும் பெறுதல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை மேற்கொள்ள
முடிவு செய்யப்பட்டுள்ளது.




    காரைக்குடி வலைதளம்-நன்றி

    தோழியர் ரத்னா பணிநிறைவு


    தோழியர் ரத்னா பணிநிறைவு





    தோழியர் ரத்னா சென்னை தொலைபேசி மாவட்டத்தில் 1971 முதல் இலாக்கா பணி/தொழிற்சங்கபணி துவக்கினார்.2013-ஏப்ர30ல் பணிநிறைவு செய்துள்ளார்.நன்றி மிக்க தோழர்கள்/ தோழியர்கள் தோழியர் மாலா தலைமையில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.
    தோழியர் ATR தலைமை ஏற்க, தோழியர் மலர் வரவேற்புரை நிகழ்த்தினார். ரத்தினம் தன்மை,சுடர்,ஆகிய பண்புகளை ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்.தோழர்கள் SST,AITUC,RK, JR, வள்ளிநாயகம், நடராஜன், SSK,NK,முர்த்தி,கிருஸ்ணகுமார், இந்திய தேசிய மாதர் சம்மேளனம்,வங்கி ஊழியர் சம்மேளனம்,உட்பட 200 தோழர்கள்,தோழியர்கள்,கலந்து கொண்டனர்.
    தோழர்கள் சேது,சிவசஙரன்,புதுவை காமராஜ்,முரளி,வீரராகவன், மவுலி,அன்பரசன்,வெங்கடெசன்,சம்பத்குமார்,BSNLEU நிர்வாகிகள், BSNLDEU நிர்வாகிகள், என பலரும்,பங்கேற்றனர்.
    42 வருடங்கள் தொழிற்சங்கபணி செய்து  வழிகாட்டியாக இருந்த தோழியர் ரத்னா பணி நிறைவு சிறக்க பலரும் வாழ்த்தினர்.

    ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

    மிரட்டும் தாதா

    மிரட்டும்  தாதா 
    கடலூர் தொலைபேசிக் கிளையில் அத்துமீறல்

    இன்று காலை தபால் தந்தி ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை தேர்தலுக்கான பிரச்சாரத்திற்க்கு திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையம் சென்ற நமது மாவட்ட செயலர் இரா. ஸ்ரீதர் அவர்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் மாவட்ட சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பிரச்சார நோட்டீசை ஒட்டியபொழுது அங்கிருந்த தோழர். விநாயகமூர்த்தி, மாவட்ட செயலரை தள்ளி, நோட்டீசை கிழித்தார். அதை தடுக்க முற்பட்ட மாவட்ட செயலரை தாக்கவும் முயற்சி செய்தார். இந்தத் தவறை சுட்டிக்காட்டிய மற்ற தோழர்களின் மீதும், நமது மாவட்ட செயலரின் மீதும், நமது சம்மேளன செயலரின் அறிவுறுத்தலின்படி திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் 9 நபர்களின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    மாலை 5.30 மணிக்கு காவல் நிலையத்திற்க்கு விசாரனைக்கு வரும்படி காவல் நிலைய அதிகாரியிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி வந்துள்ளது. 
    அநியாயத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலரின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை நியாயத்தின் பக்கம் நின்று எதிர்கொள்வோம். 
    இந்த அநாகரீக செயலை மாவட்ட சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
    -       மாவட்ட சங்கம்-கடலூர்                                               


    கடலூர் மாவட்ட செயலர் மாவட்டசங்க அறிக்கை ஒட்டும்பொழுது கிளை செயலர் தாக்கிட முயற்சி செய்வது, அறிக்கைகை கிழித்துஎறிவது என்பது எல்லாம் திட்டமிட்ட வன்முறை செயலாகும்.
    மற்ற மாவட்டத்தைபற்றி எச்சரிக்கை, தரமற்றவிமர்சனம்,மாநிலசெயலருக்கு எச்சரிக்கை இதுபோன்ற எல்லை மீறிய செயல்
    அரங்கேறி வருகிறது. மாநில தாதா நானே என தொடர்ந்து செயல்படுகிறது.
    கடலூர் பிரச்சனை அன்று மாலை தோழர்கள் சுமுகமாக பேசி தீர்த்திட முடிவுஎடுத்தனர்.
    ஆனால் இதை ஊதிட,மேலும் பெருசாக்கிட, மாநிலம் முழுவதும் கொண்டுசெல்ல திட்டமுடுவது,ஏற்பாடு செய்வது நல்ல செயல் அல்ல.வன்முறை தீர்வு அல்ல.கடந்த கால அனுபவம் உணர்த்திஉள்ளது என்பதை மறக்காமல் இருப்பது நல்லது.அது ஒரு வழி பாதை அல்ல.












      




    வெள்ளி, ஏப்ரல் 19, 2013

    தேர்தல் குறித்து


    தோழர்களே,

    நடந்து  முடிந்த  ஆறாவது  உறுப்பினர்  சரிபார்ப்பு  தேர்தலில் 61915  வாக்குகளை  பெற்று  நமது  NFTE  சங்கம்  இரண்டாவது  சங்கமாக   அங்கீகாரம்  பெறுகிறது.  99380  வாக்குகளை  பெற்ற  BSNLEU  சங்கமும்  நமது   சங்கமும்  பேச்சுவார்த்தை,  உடன்பாடு  போன்ற  விஷயங்களில்  சம  அந்தஸ்து  உள்ளவையாக  இருக்கும்.  வாக்குகளின்  அடிப்படையில்  JCM - இல்  SEATS  பகிர்ந்தளிக்கப்படும். 8, 6 என்ற எண்ணிக்கையில் இது அமையக்கூடும். NFTE -யிலிருந்து  JCM  தலைவரும்,  BSNLEU-விலிருந்து  செயலரும்  இருப்பர். 
    தமிழ்  மாநிலத்தில் NFTE சங்கம் முதலிடம் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு வாக்குச்சீட்டுகளை வெறுமனே மடித்து பெட்டிக்குள் போட்டுவிடுவது, BSNLEU தவிர்த்த வேறு சங்கத்திற்கு வாக்குப்போடுவது போன்ற திட்டமிட்ட துரோகச்செயல்களையும்  மீறி,   தோழர்  பட்டாபி  தலைமையில்  மீண்டும்  NFTE  சங்கம்  BSNLEU-வை  விட   கூடுதல்  வாக்குகள்  பெற்றுள்ளது.  மாநிலத்தில்  சுற்றுபயணம்  செய்த  அகில   இந்திய  நிர்வாகி -  தலைவர்  தோழர்  இஸ்லாம்  அவர்களுக்கு  நன்றி.-வேலூர்  வலைத்தளம் 

    அந்த கருப்பு ஆடுகள் யார் ?

                                                 
    Who is that Black Sheep !?
    ஒவ்வொரு மாவட்டத்திலும் பேர் சொல்ல ஆள் இல்லாதபோலி சங்கத்திற்கு 

    கணிசமான வாக்குகள் விழுந்துள்ளது திட்டமிட்ட செயலா ? என்று பெருத்த 

    சந்தேகத்தை கிளப்பி உள்ளது. 

    கோவையில் சுமார் 50 NFTE வாக்குகள் போலி (கோலி) சங்கத்திற்கு ! 

    திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதே நிலை !! 

    நமது மாவட்ட சங்கத்திற்கு வரவேண்டிய வாக்குகளை குறைக்க நடந்த சதியா என்பது தீர ஆராயப்பட வேண்டிய செயலாகும்.   கோவை வலைத்தளம் 

    ஈரோட-வலைதளம் 
    வாக்குமூலம்?

    புதிய அங்கீகார விதிகளின்படி இது முதல் தேர்தல். முதல் இரண்டு சங்கங்கள் அங்கீகாரத்துடன் செயல்பட ஊழியர்கள் உத்திரவிட்டுள்ளனர். அவர்களின் முடிவினை ஏற்போம். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்பட உறுதியேற்போம். போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்த  பொதுத் தேர்தலில் 49(ஓ) என்ற வாய்ப்பு தரப்பட்டது. அதைப் போலவே இந்த தேர்தலில் எண் 14 பயன்பட்டுள்ளது. நாடு முழுமையும் அந்த எண்ணிற்கு வாக்களித்துள்ளனர். இது ஏன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அதை துரோகம் என்று உதாசீனப்படுத்துவது சரியல்ல.
    பி.எஸ்.என்.எல் நிறுவனம் காக்க, ஊழியர் நலன் காக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே துவங்குவோம். அதுவே அனைவருக்கும் நல்லது.



    புதுவை வலைத்தளம் 


    புதுவை வெற்றி  நம்மிடமிருந்து  பறிக்கப்பட்டது.காரணம்கருத்து 

    வேறுபாடுகள்   தேர்தலுக்கு  முன்னரே  பல  ஊழியர்கள்  சுட்டி  காட்டிய பொழுதும்  நாம்  

    நம்பிக்கையுடன்  இருந்தோம் .கருத்து வேறுபாடுகள்  தேர்தல்  வெற்றியை பறித்து 

    விடக்கூடாது  என பொறுமை காத்தோம்.போட்டி செயல்பாடு  தேர்தல்  வெற்றியை


    பாதித்து விடக்கூடாது  என்  அமைதியாகஇருந்தோம்.


    புதுவை, கடலூர்  அத்துமீறல்கள்  வெகுவாக  வெற்றியை  பாதித்துள்ளது.தமிழ்நாட்டில் 

    திட்டமிட்ட துரோகச்செயல்களையும்  மீறி,   தோழர்  பட்டாபி  தலைமையில்  மீண்டும்  NFTE  சங்கம்  BSNLEU-வை  விட   கூடுதல்  வாக்குகள்  பெற்றுள்ளது .எல்லா 


    எல்லைகளையும்  தாண்டிய  போட்டி ,பாதக  செயல்பாடுகள்  குறித்து  நடவடிக்கை 

     தேவை  என்ற நிலையை  உருவாக்கியள்ளது .