புதன், பிப்ரவரி 11, 2015

மாநில செயற்குழு கூட்டம் 10/02/2015

மாநில செயற்குழு கூட்டம் 10/02/2015
தோழர் லட்சம் தலைமை ஏற்றிட மாநில செயற்குழு கூட்டம் 10/02/2015 சிறப்புமிக்க ஏற்பாட்டில் செய்யப்பட்டு இருந்தது. மாநில அலுவலக மாவட்டசங்க தோழியர்கள் தேசியக்கொடி, சம்மேளனக்கொடி ஆகியவற்றை ஏற்றினர்.
சேலத்தில் சேர்வோம்,சென்னையில் அராஜகம் செயவொம் என திட்டமிட்டு, மியுசிய காவலர் அறைக்கு அருகில் அமர்ந்து ரிமொட் ஆட்டுவிக்க, தமிழக மாநில சங்க நலன் காத்திட மறந்து சென்னைக்கு நேர்ந்துவிட்ட சிலமாநில சங்க நிர்வாகிகள் மாநில செயற்குழு கூட்டத்தை சீர் குலைத்தனர். பாரதி வரியில் “ ஜவருக்கு நெஞ்சும், அரண்மனைக்கு வயிரும்என்பது போல செயல்பட்டனர். தலைமை பொது மேலாளரிடமும் , AITUC பொதுசெயலரிடமும் உச்சகட்ட அநாரிகமாக,சங்க மாண்புகளை குழி தோண்டி புதைத்து நடந்தனர். தலைமை பொது மேலாளர் உரை ஆற்ற முடியாமல் சென்ற அவலம் நிறைவேறியது. மாநில சங்கத்தை தங்களீடம் அடி பணிய செய்ய அராஜகத்தை அரங்கற்றினர். இந்த கட்டளையை நிறைவேற்ற  சென்னையில் இரவல் அராஜகவாதிகளை அதன் தலைமையிடமிருந்து பெற்று கூலிக்கு மாரடித்தனர்.சென்னை தலைமை நடத்திய இதேபாணி தமிழகத்தில் அவர் வரும் கூட்டங்களுக்கும்  திரும்ப நடக்கும். இரவு, பகல்,இரவு என தொடரும்.
அராஜகம் ஒரு வழிபாதையல்ல என்பதை சென்னைக்கு இரவல் போன மாநில சங்க நிர்வாகிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
அறிவார்ந்த மாநிலசெயலர் என மதி அற்றவர்கள் திட்டினாலும் அது உண்மை.
 எல்லையற்ற சகிப்புதன்மையை எளிதாக எடுத்துகொள்ளக்கூடாது.

-இன்னும் வரும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக