சனி, அக்டோபர் 25, 2014

E...R...P...

E...R...P... 

ERP எனப்படும் புதிய திட்டத்தை அமுல்படுத்த 
தமிழ் மாநில நிர்வாகம் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றது. 
ERP அமுலாக்கம் செய்யப்பட்ட கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை 
சந்தித்து வருகின்றனர். 

தற்போதைய தமிழக CGM முன்பு STR பகுதியில் CGM  ஆக இருந்தபோது அங்கு ERP திட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். 
எனவே இங்கும் அதிக ஆர்வம் செலுத்துகின்றார். 

தற்போதைய நிலவரப்படி அனைத்து பில் பட்டுவாடாக்களும் 
மாவட்ட அளவில் 31/10/2014க்குள் முடிக்கப்படும். 
அதன் பின் பணம் பட்டுவாடா செய்யும் அதிகாரம்
 மாநில நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு. 
மாவட்ட நிர்வாகங்களுக்கு இருக்காது. 

நவம்பர் 14 வரை எங்கும் எந்த வித பணப்பட்டுவாடாக்களும் இருக்காது. நமது நிர்வாகங்கள் நல்ல நாளிலேயே தில்லை நாயகங்கள்.. 
இது போன்ற சூழ்நிலையில் சொல்லவே வேண்டியதில்லை...  

GPF.. FESTIVAL, ஒப்பந்த ஊழியர் சம்பளம்,LIC , மனமகிழ்மன்றம்,சங்க சந்தா,வருமான வரி என பிரச்சினைகள் சூழ நின்று சூன்யம் வைக்கும். 

மாநிலச்சங்கங்கள் 24 மணி நேரமும் 
செயல்பட வேண்டிய நிலை உருவாகும். 
தமிழகத்தின் அனைத்து சங்கங்களும் இணைந்து இன்னும் ஒரு மாதம் இந்த வேதனையை தள்ளி வைக்க வேண்டுகோள் விட்டுள்ளன. 

எதையும் காதில் போட்டுக்கொள்ளாத நிர்வாகம் 
என்ன நிலை எடுக்கும் என தெரியவில்லை...
எதையும் எதிர் கொண்டு பழகியுள்ள நமது தோழர்கள் இதையும்  எதிர்கொள்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக