புதன், ஜூலை 02, 2014

மாநிலச்செயலர்... CGM உடன் ஓர் சந்திப்பு...

மாநிலச் செயலர் தோழர் பட்டாபி, 
மாநில உதவிச் செயலர் தோழர் முரளி,
CGM அலுவலக மாவட்ட செயலர் தோழர் மனோஜ் 
ஆகியோர் 01-07-2014 அன்று CGM அவர்களை சந்தித்தனர்.

சந்திப்பின் போது மாவட்டங்களில் காலத்தே ஒர்க்ஸ் கமிட்டி நடத்தவும், ஒர்க்ஸ் கமிட்டி பயனுள்ள மன்றமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும்,  ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை, மாவட்ட மட்டங்களில் அமுலாக்க படாத தொழிலாளர் நலச் சட்டம் குறித்தும் அதனை முன்னிறுத்தி 
ஜூலை 17 அன்று நடைபெறும் தர்ணா போராட்டம் குறித்தும், 
GPF நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் போதிய நிதி ஒதுக்குதல் 
குறித்த அழ்ந்த கருத்துக்களை CGM முன் வைத்தனர்.

ஒர்க்ஸ் கமிட்டி, ஒப்பந்த ழியர் நல உத்தரவு அமுலாக்கம் 
குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு 
அமுல்படுத்தும் வழிகாட்டும் கடிதம் எழுதிடவும், 
ஜூலை மாத GPF நிதி ஒதுக்கீட்டில் ஜூன் மாத பற்றாக்குறைக்கு 
கூடுதல் நிதி பெற்றுத்தரவும் CGM உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக