சேலத்தில்
ஒரு சிறந்த மாநில செயற்குழு !
20.06.2014  அன்று   சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு,  தேசியக்கொடியை தோழியர். லைலா பானு அவர்களும் சங்கக்கொடியை
தோழர். குன்னூர் இராமசாமி அவர்களும் ஏற்றிய பின்னர் துவங்கியது. தோழர். இலட்சம் அவர்கள்
தலைமையேற்றார். தோழர். பாலகுமார்,  தோழர். சென்னக்கேசவன்
வரவேற்புரையாற்றினர்.
சம்மேளன
அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள்
தோழர்கள். சேது, ஜெயபால், தமிழ்மணி ஆகியோர் 
உணர்ச்சிப்பெருக்கோடு உரையாற்றினர்.
மாநிலச்செயலர்
தோழர். பட்டாபி அவர்கள் நாட்டின் நிலை,  நமது
சங்கம்,  நிறுவனம் ஆகியன  பற்றி ஒரு சிறந்த உறையாற்றினார். கிளை,  மாவட்ட மாநாடுகளை காலத்தே நடத்த  வேண்டிய அவசியத்தினை எடுத்துரைத்து, நடத்தாத கிளைகள்
மற்றும் மாவட்டங்களை விரைவில் நடத்திட பணித்தார்.
தோழர்.ஆர்.கே.,  இன்றைய புதிய சூழலில் தொழிலாளர்கள் ஒற்றுமை காக்கவும்,
தங்களைச் சுற்றியுள்ள குறுகிய எல்லைகளைத் தகர்த்திடவும் அறைகூவல் விடுத்தார்.
மிக
குறுகிய கால அவகாசத்தில், 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்த போதும் சலிக்காமல்
உபசரித்து,   மாநில செயற்குழுவினை வெகு சிறப்பாக
நடத்திய  சேலம் தோழர்கள் மாநில சங்கம் மற்றும்
அனைத்து மாவட்டங்களின் பாராட்டுக்களை பெற்றனர். 
பாராட்டுக்கள்
தோழர்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக