செவ்வாய், ஏப்ரல் 16, 2013

என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களில் பணிமூப்பு அடிப்படையில் 10 ஆயிரத்து 372 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் 10 ஆயிரத்து 372 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பினை என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஒப்பந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக