சனி, நவம்பர் 14, 2015

DEC post poned

தொடர் மழை  காரண்மாக 14/11/2015  மாவட்டசெயற்குழு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேதி பின்னர்  அறிவிக்கப்படும் 

செவ்வாய், நவம்பர் 10, 2015

மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு

நாள்:-14/11/2015  மாலை :-0500 மணி  சங்க அலுவலகம்
தலைமை:- தோழர். M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர்:- M செல்வரங்கம், மாவட்ட செயலர்,
அஞ்சலி உரை:- தோழர். C .வேலு, மாவட்ட உதவிசெயலர்,

ஆய்படு பொருள்


மத்திய சங்க செயற்குழு-முடிவுகள்

 சிறப்புரை:-தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர்,

மாவட்ட சங்க செயல்பாடுகள்-பிரச்சனைகள்

அ இ சங்க போராட்டங்கள்-ஆய்வு,

பணிஓய்வு பாராட்டு விழா-தோழர் ஆரோக்கியதாஸ்.

வாழ்த்துரை:-K.அசோகராஜன், மாநில பொருளர் 

மற்றும் மாவட்ட முன்னோடிகள்

இதர தலைவ்ர் அனுமதியுடன்,

நன்றியுரை .V.தேவதாஸ், மாவட்ட பொருளர்,

அனைவரும் வருக, தோழமையுடன்,
M.செல்வரங்கம், மாவட்ட செயலர்
v  விடுமுறை மிகுதி நேரப்படி பெறவிரும்பும் தோழர்கள், அதற்கான பில் அனுப்ப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
v  செருப்புக்கான பணம் பட்டுவாடா நடை பெற்றுள்ளதா என தெரிவிக்கவேண்டும்.
v  தோழர் சதீஸ்குமார் பதவி உயர்வு மத்திய சஙகம் தீர்த்துள்ளது.2013 முதல் பதவி உயர்வு கிடைக்கும்.

v  மாவட்ட,கிளை சங்க பொறுப்பாளர்கள், பிரச்சனைகள் இருந்தால் செயற்குழு கூட்டத்திற்க்கு  எடுத்து வரவும்.

திங்கள், நவம்பர் 09, 2015

Promotion

 புதுவையில் விளையாட்டு வீரர்  தோழர் சதீஷ் குமார்  வாலிபால்  விளையாட்டில்  அ  இ  அளவில் மூன்று  முறை  வென்றார் . 2 முறை  அ இ அளவில் சிறந்த  விளையாட்டு வீரர் என் பட்டமும்  வென்றார். அதன் அடிப்படை யில்  பதவி உயர்வு  கார்ப்பரேட்  அலுவலகத்தில்  கோரி  மத்திய சங்கம்  மூலமாக ,பிரச்சனை எடுக்கப்பட்டு , தோழர்   காமராஜ்   நேரிடையாக 
டெல்லியில்  சென்று  விவாதித்து  பெறப்பட்டுள்ளது.

மத்திய , மாநில ச ங்கக்த்திற்கு  நன்றிகள் \

cwc resolutions

போனஸ் 

போனஸ் வழங்குவதற்கான  வரையறைகளை  போனஸ் குழு இறுதி செய்யாத நிலையில்.. தீபாவளிக்குள் தற்காலிக  போனஸ் வழங்கிடக்கோரி அகில இந்தியத்தலைவர்களும்.. மாநில மட்டத்தலைவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுமாறு மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வைப்புநிதி - GPF

வைப்புநிதி பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களை வருத்தத்துடன் செயற்குழு உற்று நோக்குகிறது. வைப்பு நிதிக்கான நிதியை BSNLக்கு உடனுக்குடன்  DOT அனுப்ப வேண்டும் எனவும்.. தற்போது நிலவும் தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL  நிர்வாகம் முயல வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

78.2சத IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி 

12/06/2012 வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல் HRA  வாடகைப்படி  78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல் நிர்வாகம் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNL நிர்வாகம்  உடனடியாக 78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும்.

நேரடி நியமன  ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள்.

BSNLலில் நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012 வேலை நிறுத்தத்தின் போது உடன்பாடு  எட்டப்பட்டது.  ஆனால் ஆண்டுகள் 3 கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. எனவே உடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன ஊழியர்களுக்கு 12 சத பங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதியப் பங்களிப்பு 

BSNL உருவாக்கத்தின் போது ஊழியர்களுக்கான ஒய்வூதிய நிதியை  அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது. ஆனால் 15/06/2006 அன்று அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும் என்றும்..  40 சத நிதிச்சுமை BSNL  நிர்வாகத்தால் ஏற்கப்பட வேண்டும் எனவும் உத்திரவு இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர் விரோத உத்திரவு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து சங்கங்களையும் இணைத்து போராட மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

DELOITTE குழு அறிக்கை 

ஒரு லட்சம் ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஊழியர் விரோத DELOITTE குழு அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட  வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.  BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான  இத்தகைய மோசமான முடிவுகளை எதிர்த்து போராட்டக்களம் காண மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

செல் கோபுரம் தனி நிறுவனம் 

செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் போக்கை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் ஏற்படும் செலவினங்கள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லை.  மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஊழியர் தரப்பில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே தனி செல் கோபுர நிறுவன உருவாக்கத்தால் உருவாகும் தீய விளைவுகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

மாற்றல் கொள்கை 

மாற்றல் கொள்கையில் கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள் என்பது அதிகமான காலமாகும். எனவே 3 ஆண்டுகளுக்கு முன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு உரிய திருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு வரப்பட வேண்டும்.

deepavali wishes


வியாழன், நவம்பர் 05, 2015

மத்திய செயற்குழு- 01/11/2015 to 03/11/2015

மத்திய செயற்குழு- 01/11/2015 to 03/11/2015
வாயிற்களின் நகரம் அவுரஙபாத், இடதுசாரி தொழிற்சங்க தளமாக, இருக்கும் நகரம், மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் உறுப்பினர் சரிபார்ப்பில் வெற்றிபெரும் நகரம் என பல பெருமைகளை பெற்ற இடத்தில் நமது மத்திய செயற்குழு நடைபெற்றது. மத்திய சங்க தலைவர்,செயலர் கொடியேற்றிட,மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ்திட, AITUC தோழர். பாலசந்திர காங்கோ தலைமை உரையில் ,நமது சங்க போராட்டங்கள், அவுரஙபாத், நகரின் தனித்துவம் குறித்து உரையாற்றினார். மத்திய சங்க செயலர் ஆய்படு பொருள் குறித்து முன்னுரை வழங்கி, மாநிலம் வாரியாக மதிப்பீடுகளை முன் வைத்தார். தலைவர் பிரச்சனைகளை,பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்.

மாநிலசெயலர்கள்,தங்கள் மாநில தல நிலைமைகள், உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல். போனஸ்,மாற்றல் கொள்கை, GPF பட்டுவாடா, டவர் கார்ப்பரேசன்.MTNL-BSNL இணைப்பு,கவுன்சில் செயல் பாடுகள்,78.2% HRA , பென்சன் 60:40 உத்திரவு மாற்றம், ஊதிய மாற்றம்,அமைப்பு பிரச்சனைகள், வேலை நிறுத்தங்கள், ஊதிய தேக்க நிலை, கல்வி தகுதி  தளர்த்துதல்,என பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடை பெற்றது. தமிழகம் சார்பாக 28 தோழர்கள் பங்கேற்றனர். தமிழ மாநில சார்பாளர்கள் முழுமையாக அவையில் இருந்து பங்கேற்றனர். மாநில செயலர். தோழர்.பட்டாபி, சம்மேளன செயலர் தோழர் SSG  தோழர்.காமராஜ் சிறப்பு அழைப்பாளர், விவாதத்தில்  கலந்துகொண்டனர்.
தோழர்பட்டாபி உரை:- 3 ம் நாள் மாநில செயலர் உரை நம்பிக்கை அளிக்கும் உரை.மத்திய சங்க செயல்பாட்டை பாராட்டி, பிரச்சனை தீர்வுகளை பட்டியலிட்டார்.23  தேர்தல் வாக்குறுதிகளில் 9 தீர்வு,4 தீர்வு பெறும் நிலை,7 பரிசீலனை,3 நிராகரிப்பு.

1)       அதிகாரிக்கு வழங்கியது போல ரூ200 மாதம் தோறும் சேவைக்கு பேசிட,வருடம் தோரும் சுமார் ரூ50 கோடி சலுகை.
2)       பயிற்சிக்கான ஊதியம்  70 % புதியஊதியத்தில் 01/10/2007 முதல் 8000 ஊழியர்கள் பலன்.
3)       ஒரு இன்கிரிமெண்ட் பலன் ஊதிய இழப்பை தடுத்திட TTA கேடருக்கு பெற்றது. மற்ற கேடர்களுக்கு பரிசீலனை.
4)       TM/TTA/JTO/JAO-- RR மாற்றம்.சேவைகாலம்  5 ஆண்டாக குறைப்பு
5)       தற்காலிக JTO நீதிமன்ற தீர்ப்பின்படி ஊதியம், RR மாற்றம்.மறுபயிற்சி குறித்து மத்தியசங்கம் தீர்வுபெற்றுதரவேண்டும்.
6)       விடுப்பு ஊதியம் பணிஓய்வுக்கு மறுதினம் பட்டுவாடா.
7)       விடுப்பட்டவர்களுக்கு P.O வழங்குதல், 01/01/2000 முதல் நிலுவை.
8)       நகரஙகள் சீரமைப்பு.கூடுதல் HRA.
9)       அலவசுகள் மாற்றிட மறுத்தாலும் 78.2% அடிப்படயில் HRA
10)   தகவல் உரிமை சட்டப்படி தகவல் பெற்று மத்தியரசு முதன் முறையாக IDA ஊதிய ஓய்வூதியம் தனி கணக்கு, தனி நிதி ஒதுக்கீடு.
11)   மகளீருக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு. 10 பொதுதுறையில் மட்டும் அமுல்.நமது நிறுவனம் 2 வது ஆகும்.
12)   புதிய TTA/- RR ல் உள்ள குறிபாடுகள் மாற்றம்.
13)   தவறான போனஸ் ஓப்பந்தம், PMS முறை போனஸ் ஊதியஒப்பந்தம் காரணமாக  மறுக்கபட்ட போனஸ் பெற  புதியஒப்பந்தம் காண போராட்டம்.
14)   பரிவு அடைப்படை பணி மீண்டும் மாநில நிர்வாகத்திற்க்கு மாற்றம். குறைகள் தீர்க்க வழிமுறைகள் விவாதம்.
15)   60:40 சத அமைச்சரவை உத்திரவை மாற்றிடவேண்டும்.எதிர்கால ஊதிய மாற்றத்தை பாதிக்கும்.
16)   கட்டாய ஓய்வூதிய உத்திரவை முறியடிக்க வேண்டும்.
17)   JAO தேர்வு மதிப்பெண்கள் பெற்று பதவிபெறாத தமிழக ஊழியர்களுக்கு வேறு மாநில பதவிகளுக்கு, அல்ல்து தற்காலிக பதவிஉயர்வு பெற்றுதரவேண்டும்.
18)   MTNL-BSNL இணைப்பில் நிர்வாக உறுப்பினர்களிடம் அனைத்து அம்சங்களையும் விவாதிக்கவேண்டும்.
டிலாயிட் பரிந்துரைகளில் அமுலாக்கம் செய்யப்பட்டு வருகிறத். மாற்றல் மாவட்ட அளவில் என்றாளும் மற்ற அதிகாரங்கள் பிசினஸ் ஏரியா என்பது பாதகங்களை ஊருவாக்கும்.
19)    OFC/BB  தனியார் மய ஆபத்துகள்.
20)   தேக்க நிலையில் 16000 பேர்.மேலும் ஊதிய இழப்பு நிரந்தம் .ஊதிய ஒப்பந்த பாதக அம்ச உத்திரவு மாற்றப்படவேண்டும்.
21)   பாரத் நெட் பணி ரூ70000 கோடி திட்டம் ப்ச்ன்ல் நீக்கி தனியாருக்கு தாரை வார்க்கமுயற்சி.
22)   PWA திரும்ப பெற்றது,லைசன்ஸ் கட்டணம் கட்ட மறுப்பு.
23)   MTNL-BSNL இணைப்பில் HR பிரச்சனகள் .
24)   வலுவான மாநிலஙகள் கூடுதல் வாக்குகள் பெற முயற்சி.உறுப்பினர் சரிபார்ப்பில் நமது வழிமுறைகள், திட்டம் குறித்து உரை நிகழ்த்தினார்
.
தோழர்SSG உரை.:- ஃபோரம் குறித்தும்,பெரியண்ணன் செயல்பாடு கருத்துகள் இருந்தாலும் ஃபோரமில் தொடர வேண்டும். அமைப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.போனஸ்,உறுப்பினர் சரிபார்ப்பு, ஊழியர் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார்.
தோழர் காமராஜ் உரை:- புதிய அங்கீகார விதிகள், கவுன்சில் விதிகளில் மாற்றம் தேவை. பிசினஸ் ஏரியா மாற்றம் ஊழியர் பிரச்சனைகள்,
TM/TTA/JTO/JAO  பதவிஉயர்வு தேர்வுகளில் கல்விதகுதி தள்ர்த்திட வேண்டும். பரிவு அடிப்படை பணி மறுக்கப்பட்டவர்களுக்கு பணமாக ஈடுவழங்குதல், மருத்துவ வசதிகளில் முழு கட்டணத்தை வழங்குதல்,
ரூ7100 ஊதிய நிலை ரூ6550 மாற்ற பாதிப்பு களைதல். பண்டிகை கால முன்பணம் உயர்த்துதல். குறித்து உரையாற்றினார்.

பொது செயலர் கீழகண்டஒழுங்குவிதிகளை கடை பிடிக்க வழியுறுதினார்.
மாநில செயலர்கள், அ இ சங்க நிர்வாகிகள், வேறு மாநிலத்திற்க்கு. மாநிலசெயலர் அழைப்பின்றி , அறியாமல் செல்லக்கூடாது.
தமிழகம் விவாகரங்களில் சென்னை மாநிலசெயலர் தலையிடக்கூடாது. அமைப்பு பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடாது STR  பிரச்சனயில் மத்திய சங்கம் தனது நிலையை ஏற்கனவே தெளிவு படுத்தி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாற்றமில்லை.

பொது அரங்கம் ,புகைப்படம் அ இ பொதுசெயல்ர் உரை தொடரும்..........