புதன், நவம்பர் 18, 2015

2014-15 நிதி நிலை அறிக்கை

2014-15  நிதி நிலை  அறிக்கை 
நமது  நிறுவனத்தின் நிதி நிலை  அறிக்கை  CMD  வெளியிட்டுள்ளார் .
செய்திகளில்  வந்தவை  சில ...........
நமது நிறுவனம் 2013-14 ல் ரூ 7020  கோடி நஷ்டம் .2014-15ல் ரூ 8234 கோடி நஷ்டம் .புதிய  கம்பெனி சட்ட  தேய்மான கணக்கீட்டில் நஷ்டம் கூடியுள்ளது.
தேய்மான கணக்குக்கு முன் லாபம் ரூ 672 கோடி .வருமானம் 4.16 % கூடி 
ரூ 27242 கோடி உயர்ந்துள்ளது .(சென்ற ஆண்டு  ரூ 26153 கோடி) கடன் விகிதம்.0.13 % என    தொலை தொடர்பு  நிறுவனங்களில் மிக  குறைவாக  உள்ளது. வரும் ஆண்டு  ரூ 7700 கோடி விரிவாக்க த்திற்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.டவர்  கம்பெனி மூலம் ரு 2200 கோடி,,கட்டிடம்,இடம் மூலமாக ரூ 2500 கோடி  திரட்ட  திட்டமிடப்பட்டுள்ளது.
செலவினம் 2013-14 ல்ரூ 11008 கோடியிலிருந்து  ரூ 10840 கோடியாக குறைந்துள்ளது .ஊழியர்கள் செலவு ரூ 15436கோடியிலிருந்து  ரூ 14963 கோடியாக குறைந்துள்ளது ஊழியர்கள்  2.38 லட்சத்திலிருந்து  2.25 லட்சமாக  குறைந்துள்ளது

சனி, நவம்பர் 14, 2015

DEC post poned

தொடர் மழை  காரண்மாக 14/11/2015  மாவட்டசெயற்குழு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேதி பின்னர்  அறிவிக்கப்படும் 

செவ்வாய், நவம்பர் 10, 2015

மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு

நாள்:-14/11/2015  மாலை :-0500 மணி  சங்க அலுவலகம்
தலைமை:- தோழர். M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர்:- M செல்வரங்கம், மாவட்ட செயலர்,
அஞ்சலி உரை:- தோழர். C .வேலு, மாவட்ட உதவிசெயலர்,

ஆய்படு பொருள்


மத்திய சங்க செயற்குழு-முடிவுகள்

 சிறப்புரை:-தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர்,

மாவட்ட சங்க செயல்பாடுகள்-பிரச்சனைகள்

அ இ சங்க போராட்டங்கள்-ஆய்வு,

பணிஓய்வு பாராட்டு விழா-தோழர் ஆரோக்கியதாஸ்.

வாழ்த்துரை:-K.அசோகராஜன், மாநில பொருளர் 

மற்றும் மாவட்ட முன்னோடிகள்

இதர தலைவ்ர் அனுமதியுடன்,

நன்றியுரை .V.தேவதாஸ், மாவட்ட பொருளர்,

அனைவரும் வருக, தோழமையுடன்,
M.செல்வரங்கம், மாவட்ட செயலர்
v  விடுமுறை மிகுதி நேரப்படி பெறவிரும்பும் தோழர்கள், அதற்கான பில் அனுப்ப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
v  செருப்புக்கான பணம் பட்டுவாடா நடை பெற்றுள்ளதா என தெரிவிக்கவேண்டும்.
v  தோழர் சதீஸ்குமார் பதவி உயர்வு மத்திய சஙகம் தீர்த்துள்ளது.2013 முதல் பதவி உயர்வு கிடைக்கும்.

v  மாவட்ட,கிளை சங்க பொறுப்பாளர்கள், பிரச்சனைகள் இருந்தால் செயற்குழு கூட்டத்திற்க்கு  எடுத்து வரவும்.

திங்கள், நவம்பர் 09, 2015

Promotion

 புதுவையில் விளையாட்டு வீரர்  தோழர் சதீஷ் குமார்  வாலிபால்  விளையாட்டில்  அ  இ  அளவில் மூன்று  முறை  வென்றார் . 2 முறை  அ இ அளவில் சிறந்த  விளையாட்டு வீரர் என் பட்டமும்  வென்றார். அதன் அடிப்படை யில்  பதவி உயர்வு  கார்ப்பரேட்  அலுவலகத்தில்  கோரி  மத்திய சங்கம்  மூலமாக ,பிரச்சனை எடுக்கப்பட்டு , தோழர்   காமராஜ்   நேரிடையாக 
டெல்லியில்  சென்று  விவாதித்து  பெறப்பட்டுள்ளது.

மத்திய , மாநில ச ங்கக்த்திற்கு  நன்றிகள் \

cwc resolutions

போனஸ் 

போனஸ் வழங்குவதற்கான  வரையறைகளை  போனஸ் குழு இறுதி செய்யாத நிலையில்.. தீபாவளிக்குள் தற்காலிக  போனஸ் வழங்கிடக்கோரி அகில இந்தியத்தலைவர்களும்.. மாநில மட்டத்தலைவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுமாறு மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வைப்புநிதி - GPF

வைப்புநிதி பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களை வருத்தத்துடன் செயற்குழு உற்று நோக்குகிறது. வைப்பு நிதிக்கான நிதியை BSNLக்கு உடனுக்குடன்  DOT அனுப்ப வேண்டும் எனவும்.. தற்போது நிலவும் தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL  நிர்வாகம் முயல வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

78.2சத IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி 

12/06/2012 வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல் HRA  வாடகைப்படி  78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல் நிர்வாகம் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNL நிர்வாகம்  உடனடியாக 78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும்.

நேரடி நியமன  ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள்.

BSNLலில் நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012 வேலை நிறுத்தத்தின் போது உடன்பாடு  எட்டப்பட்டது.  ஆனால் ஆண்டுகள் 3 கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. எனவே உடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன ஊழியர்களுக்கு 12 சத பங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதியப் பங்களிப்பு 

BSNL உருவாக்கத்தின் போது ஊழியர்களுக்கான ஒய்வூதிய நிதியை  அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது. ஆனால் 15/06/2006 அன்று அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும் என்றும்..  40 சத நிதிச்சுமை BSNL  நிர்வாகத்தால் ஏற்கப்பட வேண்டும் எனவும் உத்திரவு இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர் விரோத உத்திரவு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து சங்கங்களையும் இணைத்து போராட மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

DELOITTE குழு அறிக்கை 

ஒரு லட்சம் ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஊழியர் விரோத DELOITTE குழு அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட  வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.  BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான  இத்தகைய மோசமான முடிவுகளை எதிர்த்து போராட்டக்களம் காண மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

செல் கோபுரம் தனி நிறுவனம் 

செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் போக்கை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் ஏற்படும் செலவினங்கள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லை.  மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஊழியர் தரப்பில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே தனி செல் கோபுர நிறுவன உருவாக்கத்தால் உருவாகும் தீய விளைவுகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

மாற்றல் கொள்கை 

மாற்றல் கொள்கையில் கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள் என்பது அதிகமான காலமாகும். எனவே 3 ஆண்டுகளுக்கு முன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு உரிய திருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு வரப்பட வேண்டும்.

deepavali wishes