புதன், பிப்ரவரி 13, 2013

MEETING12/02/2013


மாநில செயலர் சிறப்புக்கூட்டம்
புதுவையில் 12/02/2013 அன்று உணவு இடைவேளை கூட்டம் நடைபெற்றது. தலைவர் மகேஸ்வரன் தலைமையில் தோழர்.அசோகராஜன், மாநிலபொருளர், தோழர் பட்டாபி, மாநிலசெயலர், சிறப்புரை நிகழ்த்தினர்.தேர்தல்.78.2 கிராக்கிப்படி இணைப்பு,பிப்20,21 வேலை நிறுத்தம் ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.
ப.காமராஜ்,மாவட்ட செயலர்.

வெள்ளி, பிப்ரவரி 08, 2013

Meeting on 12/02/2013


NFTE-BSNL-PUDUCHERRY-SSA
சிறப்பு கூட்டம்

மனமகிழ் மன்றம்-12/02/2013-பகல்1300 மணி

தலைமை:-தோழர்.அ.மகேஸ்வரன்,மாவட்டத்தலைவர்,

வரவேற்புரை:- தோழர்.ப.காமராஜ், மாவட்ட செயலர்,

சிறப்புரை

தோழர்.கி.அசோகராஜன்,மாநில பொருளர்,
தோழர்.ரா.பட்டாபி, மாநில செயலர்,

நன்றியுரை:-ராதாகிருஸ்ணன், மாவட்ட பொருளர்

அனைவரும் வருக!

தோழமையுடன்,
ப.காமராஜ், மாவட்ட செயலர்

FEB-20-21-strike poster


வியாழன், பிப்ரவரி 07, 2013

ஓங்கோல் தேசிய செயற்குழு

ஒளிமயம் நோக்கி ஓங்கோல் தேசிய செயற்குழு
பிப்=4,5 -2013
ஆந்திரா மாநிலம் ஓங்கோல் நகரில் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட விரிவடைந்ததேசிய செயற்குழு நடைபெற்றது. மிகசிறப்பான ஏற்பாடுகள், தோழர்.குப்தா அரஙகம்,நினைவு ஸ்தூபி,மலரஞ்சலி என அவரது நினைவு போற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றது.சம்மேளன கொடி ஏற்றி தோழர்.குப்தா உடன் இருந்த 45 ஆண்டு கால நினைவு போற்றும் செய்திகளை தோழர் மதுசுதன் ராவ் அஞசலி உரைஆற்றினார்.
தமிழகத்தில் இருந்து ஜெயபால், சேது,நூருல்லா,ஆறுமுகம், காமராஜ் ,லட்சம். அசோகராஜன்,செல்வம்பிச்சைபிள்ளை,ஸ்ரீதரன்,ராபர்ட்ஸ், சங்கர், முருகேசன்,மாரி,லால், முரளி,மனொஜ்,செல்வரங்கம்,தஙகமணி,குடந்தை கனெசன்,விஜய் ஆதிராஜ், பாலகுமார், நடராஜன்,பன்னீர், மனோகரன்.மில்டன்,அல்லிராஜ் என 70 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். புதுவையில் இருந்து 14 தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்படு பொருளாக தேர்தல் மட்டுமெ இருந்தது.
மாநில செயலர்கள்,மாவட்டசெயலர்கள்,அ.இ.சங்க நிர்வாகிகள் தேர்தல் குறித்தும், தங்களது மாநிலத்தில் பெறக்கூடிய வாக்குகள், தேர்தல் கோரிக்கைகள், என பல அம்சங்களை உள்ளடக்கி பேசினர்.
ஆந்திர மாநில வலையில் குறிப்ப்பிட்டது போல நமது மாநில செயலர் தோழர் பட்டாபி  சிறப்பான உரை நிகழ்த்தினார். கடந்த 2 ஆண்டுகளில் நமது சங்கம்
அங்கீகாரம் இல்லாத சூழ்நிலையில் தோழர். குரு தாஸ் குப்தா முன் முயற்சியால்,தலைவர்,பொதுசெயலர் தொடர் முயற்சியால் இராண்டாவது சங்க அங்கீகாரம் பெற்று இருப்பது மிக முக்கியமான சாதனை.
v  ஓய்வூதியம் டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் உண்டு என்று உத்திரவு.
v  பதவி உயர்வின் பொழுது மறுக்கப்பட்ட வீட்டு வாடகைப்படி பெற்றுதந்தது.
v  அதிகாரிகளை விட மேம்பட்ட ஊதிய நிர்ணயமுறை.
v  மருத்துவ வசதி-தந்தை,தாயார் அல்லது மாமனார்,மாமியார்-விருப்பம்.
v  ல்ட்ச்-விடுப்பை காசாக்குதல் பணத்திற்க்கு வருமான வரி விலக்கு பெற்றுதந்தது.
v  10-வருட சேவைக்குபின் முழு ஓய்வூதியம் பெற்றுதந்தது.
v  2004 க்கு பின்னர் பணியமர்த்தப்பட்ட ஸம் களுக்கு அரசு ஓய்வூதியம்
v  கருணை அடிப்படை பணிக்கு 3 வருட நிபந்தனை நீக்கம்.
v  2007-ல் பதவிஉயர்வுக்குபின்னர் விருப்ப அடிப்படையில் புதிய ஊதிய நிர்ணயம்
v  கட்டாய மாற்றல் சென்றவர்கள் திரும்பி வர விருப்ப மாற்றல்வழங்க பதிவு முறை கொண்டுவந்தது.
o    SC/ST/ ஊழியர்கள் சலுகையாக பதவிஉயர்வில் 1 ஆண்டு சேவை சலுகை
o    கருணை அடிப்படை பணிக்கு ச்ச்/ச்ட் க்கு 55 புள்ளிகளில் தளர்வு.
o    நிரப்பபடாத SC/ST/பதவிகளை நிரப்பிட சிறப்பு ஆளெடுப்பு/தேர்வு
o    மகளிருக்கு வருடம் 12 நாள் சிறப்பு விடுப்பு.
o    ஒப்பந்தப்படி மகளிருக்கு மத்தியரசு வழங்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு
o   jto தற்காலிக முறை ஒரு கட்ட விதிவிலக்கு அளித்து நிரந்தரம்.
o  B.E.,M.B.A படித்த வர்களுக்கு 10% சிறப்பு ஒதுக்கீடு
உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

உறுப்பினர்கள்சேர்க்கையில் கடலூர் மாவட்ட தோழர்கள்பிச்சைபிள்ளை,ஸ்ரீதர  கொடுத்த மனு மீது  பொதுசெயலர்  யாரயும் சேர்க்க  மறுகக கூடாது  என வழி காட்டினர்  
திருநெல்வேலி தோழர். சங்கர் ஊழியர் கருத்தை அறிவது, கீழ்மட்ட ஊழியர்களின் மனநிலையில் இருந்து செயல்பட வேண்டும் என பேசினார்.
தோழர்.காமராஜ் ,புதுவையில் 3 வது முறையாக வெற்றிபெறுவோம்.
அபிமன்யு சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிபெறுவோம்.
உறுப்பினர்  சேர்க்கையில் யாரையும் மறுக்க கூடாது.பட்தவி உயர்வு திட்ட கோளாறு பற்றி பேசினார்.
தலைவர் இஸ்லாம் கோரிக்கைகளை விவரித்து பேசினார்.
செயலர் தேர்தல் எதிர் கொள்ளும் முறை குறித்தும், கோரிக்கைகளை குறித்தும் பேசினார்.



புதன், பிப்ரவரி 06, 2013

CWC PHOTOS



Extended National Executive Committee Meeting at Ongole on 4th & 5th February,2013: The meeting started by 10.00A.M and National Flag hoisted by Com. Islam Ahmad All India President and NFTE flag hoisted by Com.Madhusudana Rao Senior Leader and spoke about Com.Om Prakash Gupta 40 minutes on condolence motion as a first speaker. General Secretary C.Chendeswar Singh, Dy.Gen.Secretary Com.Mathivanan, Com. K.Anjaiah A.P.Circle Secretary and other Circle Secretaries were attended. Circle Secretaries spoke elaborately about 6th membership verification and presented a very positive picture. The NFTE-BSNL has appealed to SNATTA and SEWA-BSNL to forge alliance with NFTE BSNL and face the 6th membership verification together to succeed the demands of BSNL employees and those of TTAs & SC/ST employees. Com.Pattabhi made his mark with an inspiring speech which was well received by the participants. Other Circle Secretaries have also come up with ideas on the forthcoming Membership verification born out of their experience. Nearly 850 members attended the meeting. The National Executive concluded with a fiery speech by Com Chandeshwar Singh and Com.Islan Ahamed. Tremendous arrangements made by the reception committee, Ongole .-
Courtesy-A.P.circle website