வியாழன், ஏப்ரல் 23, 2015

15/04/2015-மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்

NFTE- BSNL-புதுச்சேரி மாவட்டசங்கம்.
15/04/2015-மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்

1)    மாவட்ட மாநாடு வரும் மே-2015 இறுதியில் நடத்திட முடிவு செய்யப்பட்ட்து. இதற்க்கான அறிவிப்பை சங்கவிதிகளின்படி வெளியிட செயற்குழு முடிவு செய்யப்பட்டது. மாநாடு சார்பாளராக சந்தாபிடித்தம் உள்ள அனைத்து உறுப்பினரும் கலந்துகொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.சார்பாளர் கட்டணம் ரூ100 வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
2)    மாவட்ட பொருளர் ராஜினாமா ஏற்கப்பட்டு தோழர் வி.தேவதாஸ் புதிய பொருளராக ஒரு மனதாக தேர்ந்தடுக்கப்பட்டார்.
3)    தோழர்கள் மகேஸ்வரன், அரிஹரன், ராஜினாமா ஏற்காமல் தோழர்களிடம் மாவட்டசங்க முடிவை கூறி பதவி விலகலை வலியுறுத்தவேண்டாம் என்பதை தெரிவிக்க மாவட்டசெயற்குழு கீழ்கண்ட குழுவை அமைக்கிறது. தோழர்கள் தண்டபாணி,தங்கமணி,செல்வரங்கம், புஸ்பராஜ்,ஞானசுந்தரம் ஆகியோர் கொண்டகுழு அமைக்கப்படுகிறது.
4)   இண்டோர்கிளையின் முறையான மாநாட்டை மாநிலசஙகம் அமைப்பு விதிகளின் படி நடத்தித்ருமாறு வேண்டிக்கொள்கிறது.
5)    மாவட்டசங்க பணம் ரூ1,550,02/= தோழர் அசோகராஜன் பெயரில்  சென்னை டெலிகாம் சொசைட்டியில் உள்ளதை மாவட்ட மாநாட்டிற்க்குமுன்  மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க செயற்குழு வேண்டுகிறது.
6)    மே தின கொடியேற்றம் அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் நடத்திட திட்டமிடவேண்டுகிறது.
7)    ஏப்ரல்21,22  வேலை நிறுத்தத்தில் பங்கேற்று  வெற்றிகரமாக நடத்திட, உறுப்பினர்களை செயற்குழு வேண்டிக்கொள்கிறது.

இண்டோர் பகுதி பவர்பிளாண்ட்,TD ஊழியர்களுக்கு பவர் க்ஷூ வழங்கிட மாவட்டநிர்வாகம் மறுத்த நிலையில் மாநிலநிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தற்போழுது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இண்டோர் பகுதி செப்பல் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.

வேலைநிறுத்தத்தில் வெற்றிகரமாக பங்கேற்ற அனைவரையும் மாவட்டசங்கம் பாராட்டுகிறது.

ப.காமராஜ், மாவட்டசெயலர்

கண்டிக்கிறோம்


கண்டிக்கிறோம் 

தோழர்  மதிவாணன் ,மாநிலசெயலர்  ,சென்னை போராட்டத்தின் பொழுது  தாக்கப்பட்ட்டார்.
தமிழ் மாநில சங்கம்  கண்டன  ஆர்ப்பாட்டம்  அறிவிப்பு  கொடுத்ததுள்ளது 




புதன், ஏப்ரல் 22, 2015

2-நாள் வேலைநிறுத்தம்

2-நாள்  வேலைநிறுத்தம் 
ஏப்ரல் 21 &22 தேதிகளில் 2-நாள்  வேலைநிறுத்தம்  புதுவையில் சிறப்பாக  நடை பெற்றது.
ஒரு சில சங்கக்களின்  சில தோழர்கள் தவிர்த்து  அனைவரும்  அதிகாரிகள் உட்பட  வேலைநிறுத்தம்  செய்தனர்.
வேலைநிறுத்தம் வெற்றிபெற உழைத்த ,பங்கேற்ற  அனைவருக்கும்  போரம்  சார்பாக நன்றிகள் 

செவ்வாய், ஏப்ரல் 21, 2015

STRIKE RALLY

வேலைநிறுத்த  ஆயத்த  பேரணி
புதுவையில்20/04/2015 அன்று  பல  நூறு  தோழர்கள் ,தோழியர்கள்  கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது .
அதிகாரிகள் ஊழியர்கள் ,காண்டிராக்ட் ஊழியர்கள்  புதுவை முக்கிய வழித்தடங்கள்  வழியாக  சென்று மக்களிடம் வேலை நிறுத்த  செய்திகளை  தெரிவித்து கொண்ட பேரணி நடைபெற்றது .இறுதியில் போரம் தலைவர்கள் கலந்துகொண்டனர்.





திங்கள், ஏப்ரல் 20, 2015

STRIKE

The two days "stay out strike will be from 00 Hrs of 21st to 24 Hrs of 22nd April, 2015". Forum has to conduct demonstration infront of all Circle, SSA HQs and all major stations on both days. All employees should participate in the two days "stay out strike " to "SAVE BSNL, SAVE NATION ".

திங்கள், ஏப்ரல் 13, 2015

DIST EXECUTIVE MEETING


மத்திய செயற்குழு

மத்திய செயற்குழு 
பட்டாபி  உரை  தொடர்ச்சி 

BBNL  நிறுவனம் 100 சத அரசு உதவியுடன், USO நிதி மூலமாக செயல்படுகிறது.இணைக்கவேண்டும் என்பதைவிட ,26 சதபங்குகளை பெற்று முக்கிய பங்குதாரர் நிலை பெற்றால்,அதன் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் BSNL இருக்கும். ரூ15 கோடி செலவு மூலதனம் போதும்.
நமக்கு வரவேண்டிய USO நிதி உதவி ரூ1250 கோடி பணத்தைதருவதற்க்கு பதிலாக நமது சேவையை NICF நிறுவனம் பரிசீலித்து வழங்கப்படும் என்பது நிதி வருவதை தடுத்திட செய்யும் முயற்சியாகும். TRAI அறிவித்த நிதியை பெறவேண்டும்.
அலைகற்றை தாரளமயம் செய்யப்பட்டு நாமும் ஒரு பகுதியை,பகிர்ந்து வருமானம் பெற அனுமதி பெறவேண்டும். TRAI இணக்கமான கருத்தை வெளியிட்டுள்ளது.
நமது கோரிக்கையில் 900 MHz லிருந்து 1.2 MHz விற்பனை செய்யமாட்டாது என பாராளுமன்றத்தில் அமைச்சர் அறிவித்தது நமது கோரிக்கை ஒன்று தீர்க்கப்பட்டுள்ளது.
போனஸ்:-நமது சங்க அங்கீகாரத்திற்க்குபின் புதிய கமிட்டி அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.ஊதிய ஒப்பந்த்த்தின்பொழுது BSNLEU PMS அடிப்படையில் போனஸ் என்பதை ஏற்றது. அதை முறியடித்து PLI என்பதைகொண்டு வரப்பட்டுள்ளது. நிர்வாகம் ஒரு ஆண்டு விவரங்களை மட்டும் அளித்து முட்டாளாக்கிட விரும்புகிறது. FAIR இருந்திட வேண்டும் என்பதை பெற்றுள்ளோம்.குறைந்த பட்சம் போனஸ் உறுதி செய்யப்படவேண்டும்.
JCM மற்றும் அங்கீகராவிதிகளை நாம் திருத்திட கோரவில்லை.அனால் நிர்வாகம் தந்திரமாக JCM பரந்துபட்ட ஒற்றுமையை,பறித்திட திட்டமிடுகிறது.5% வாக்கு பெற்றவர்களுக்குஒரு சீட் என அனைவரையும் ஒற்றுமை படுத்தும் மாற்றத்தை கோரலாம்.
நமது நிறுவனத்தின் இடம் மட்டும் 406 லட்சம் சதுர மீட்டர் உள்ளது. நமது பெயறுக்கு மாற்றும் பணி நடை பெற்று வருகிறது.மாநில அரசு ஒத்துழைத்தால் விரைவில் முடியும்.இந்த சொத்துக்களை விற்க முடியாது.மாறாக வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்ட முடியும்.
  • 2014 JTO ஆளெடுப்பு விதிகள் மாற்றி அமைக்கவேண்டும்.விரைவு படுத்திட வேண்டும்.

  • JAO தேர்வு பெற்றவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு வேறு மாநில பதவிகள் அல்லது வேறு வகையிலான தீர்வுகளை பரிசீலிக்க வேண்டும்.

  • 2007 க்குபின் பணிஅமர்ந்தவர்களின் ஊதிய இழப்பு விரைவில் சரி செய்திட வேண்டும்.

  •   நேரிடை நியமன ஊழியர்களுக்கு ஓய்வுதியகொடை தீர்வு செய்யவேண்டும்.

  • SC/ST ஊழியர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க ஏற்றுள்ளதை முன் தேதியிட்டு வழங்க கோர வேண்டும்.

  • ERP பிரச்சனைகள் பட்டியலிட்டு பல தீர்க்கப்பட்டுள்ளது. தீர்வடையாத பிரச்சனைகள் தீர்க்கவேண்டும்.

  • அடிமட்ட,சுரண்டபடும் காண்டிராக்ட் ஊழியர்களின் உத்திரவுகளை மாநிலமட்டத்தில் அமுல்படுத்திட உறுதிசெய்திடவேண்டும்ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை போக்க அதாலத் போன்ற நடைமுறை படுத்த வேண்டும் 

********************.

STR பிரச்சனை:- தமிழகத்தில் செயற்குழுவில் அராஜகம்,தலைமை பொதுமேலாளர் ,தோழர் மூர்த்தி பேசிட அனுமதி மறுப்பு என செய்திட்ட சென்னை தோழர்களின் செயலை பொதுசெயலர் உரையில் குறிப்பிட்டு மத்திய சங்க முடிவை ,மறுக்க மத்தியசெயற்குழுவில் பேச வேண்டுமெ தவிர மற்ற சங்க அமைப்பில் தலையிடுவது முறையற்ற செயல் என கூறினார். தமிழக தோழர்கள் இனியாவது உணருவார்களா?

ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

மத்திய செயற்குழு-ஜெய்பூர்.

மத்திய செயற்குழு-ஜெய்பூர்.

ஏப்ரல் 09&10 தேதிகளில் ஜெய்பூர் நகரில் நமது மத்திய சங்கத்தின் மத்திய செயற்குழு நடைபெற்றது. தமிழக மத்திய செயற்குழு உறுப்பினர்கள்  தோழர்கள் பட்டாபி மாநிலசெயலர், SSG, புதுவை காமராஜ், கலந்துகொண்டனர்.  தமிழ் மாநிலத்தில் இருந்து தோழர்கள்லட்சம், சென்னகேசவன்,முரளிதரன்,அசோகராஜன்,  நடராஜன்,  கடலூர்ஸ்ரீதர்,மதுரை முருகேசன் உட்பட 25 தோழர்கள் கலந்துகொண்டனர். ராஜஸ்த்தான் மாநில சங்கம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தேசீயக்கொடி, சம்மெளனக்கொடி, உயர்த்தியபின் பொதுசெயலர் ஆய்படு பொருளை  முன் மொழிந்து விளக்கினார். மாநில , மாவட்ட மாநாடுகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடித்திட வலியுறுத்தினார். உறுப்பினர் சரி பார்ப்பை சந்திக்க கிளை செயலர் கூட்டத்தை மாநிலசங்கங்களும், மாவட்ட செயலர் உள்ளிட்ட விரிவடைந்த கூட்டத்தை மத்தியசங்கமும் நடத்திட திட்டமிட்டு ஜனவரி2016க்குள் நடத்திட வேண்டும். ஏப்ரல் 21&22 தேதிகளில் வேலைநிறுத்தம், டெல்லி பேரணி, மாநில கருத்தரங்கம். கோரிக்கை, நிர்வாகத்தின் நிலை, கவுன்சில்கள் செயல்பாடு ,மாற்று சங்க தடை செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்கினார்.
தலைவர் இஸ்லாம் நமது தேர்தல் அறிக்கையை செயல்படுத்திட நமது முனைப்பான செயல் பாடு, போனஸ் திட்டம், குறித்து விளக்கினார்.
பின்னர் பேசிய மாநிலசெயலர்கள் தங்கள் மாநில பிரச்சனைகள், வேலைநிறுத்தம், மாநில கருத்தரங்கம். உள்ளிட்ட அனைத்தையும் விவாத்திதனர்.
தோழர் பட்டாபி உரை:- நமது மாநில செயலர் கருத்தை கேட்க அனைவரும்  ஆவலாக இருப்பதாக தலைவர் அழைத்து உரை ஆற்றிட அழைத்தார்.
மத்திய சங்கம் சந்தாவை உயர்த்தியதற்க்கு நன்றி கூறி,நிறைவான நிலையில் மாநிலசங்கங்கள் மாநில மொழியில் பத்திரிக்கை வெளியிடுவது தேர்தல் தயாரிப்புக்கு உதவிடும் என்பதை முன் மொழிந்தார்.
ஓய்வூதியம்  மிக பாதுகாப்பாக உறுதி படுத்தப் பட்டுள்ளது என்ற நம்பிக்கை இருந்தது. ஓய்வூதியம் மத்திய அரசின் பொறுப்பு என எண்ணி இருந்தோம். ஆனால் இன்று ஓய்வூதியம் பாதுகாப்பாக இல்லை. 37-அ விதி  BSNL ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து விளக்கம் இருந்தாலும் ஓய்வூதியம் மத்திய அரசின் பொறுப்பு என்பதை தெரிவிக்கவில்லை.
2010 ஓய்வூதிய மாற்றத்திற்க்கான அமைச்சரவை குறிப்பில் ஊதிய மாற்றம் செய்யும் பொழுதுஎல்லாம் ஓய்வூதியம் மாற்றப்படுவது சட்டரீதியாக தவறு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த ஊழியர்கள் பொதுதுறை மாறும் பொழுது ஓய்வூதியம் வழங்கிட  DOP&T வழிகாட்டுதலை DPE இதுவரை ஏற்று உத்திரவு வெளியிடவில்லை.கடந்த 14 ஆண்டுகளில்
BSNL  IDAஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை, செலவினம், குறித்த எந்த தகவலும் இல்லை. தோழர்கள் இஸ்லாம் மற்றும் புதுவை காமராஜ் தகவல் உரிமை சட்டம் மூலமாக பெற்ற தகவல்கள் பல செய்திகளை வெளிகொண்டு வந்துள்ளது. முதன் முறையாக இந்த வருடம் பட்ஜெட்டில் IDA  ஓய்வூதியம் ரூ 3821 கோடி என மதிப்பீடு செய்யப்படுள்ளது. ஓய்வூதியம் செலவில்  அரசின் 60%  பொறுப்பு என்பதில் இன்று DOT ஓய்வூதியத்துடன் MTNL ஓய்வூதிய செலவும் சேருகிறது என்பது கவலைக்குரிய அம்சம் ஆகும்.
விதி37-அ பாரா 2ல் திருத்தம் தேவைப்படுகிறது. FR 116ன் அடிப்படையில் ஓய்வூதியகொடை இருக்க வேண்டும். ஓய்வூதியம் அரசின் பொறுப்பு என்ற செயலர்கள் நிருபேந்திர மிஸ்ரா, சித்தார்த் பெகுரா கடிதங்களின் உத்திரவாதத்தை உத்திரவாக பெற நடவடிக்கை எடுத்திடவேண்டும். அரசைபொறுப்பாக்கிட வேண்டும்.
பணிபாதுகாப்பு அடுத்த பிரச்சனையாகி உள்ளது. நிர்வாகம் மக்களுக்கு அறிவித்து நடத்திய ஆண்டு பொதுக்குழு அறிக்கையில் டிலாய்டி கமிட்டி பரிந்துரைகள் அமுலாக்கம்,ஊழியர் எண்ணிக்கை குறைப்பு ,மாற்றுபணி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
BCG கமிட்டி பரிந்துரைகள் ஓரம் கட்டப்பட்டு டிலாய்டி கமிட்டி பரிந்துரைகள் அமுலாக்கம் முன்னுக்கு வைக்கப்பட்டுள்ளது.75000 பதவிகள், உபரி என் அறிவிக்கப்பட்டு,50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களின் ஊதியத்தில் 50% மான்யமாக அரசிடம் கோரப்படவுள்ளது. இது சூழ்ச்சியான ஏற்பாடு.50% கிராக்கிப்படி இணைப்பு கோரி வருகிறோம்.அரசு மான்யம் பெறும் பொழுது கோரிக்கை சாத்தியமாகுமா?.பொதுத்துறை ஊதிய மாற்றத்தின் பொழுது நிபந்த்னையே அரசு ஊதிய மாற்ற செலவுக்காக நிதி அளிக்காது என்பது ஆகும். எனவே நமது ஊதிய மாற்றத்தை மறுக்கவே இப்படிஒரு ஏற்பாடு நடைபெறுகிறது.
மாற்றாக நமது நிறுவனத்தின் வளர்ச்சி பணிக்காக அரசின் உதவி பெற வேண்டும். இதை வலியுறுத்தி பெற வேண்டும்.

டிலாய்டி கமிட்டி பரிந்துரைகளில் பாதகமான அம்சமான மாற்றலில் மாவட்ட அளவில் மாற்றல் என் உத்திரவை மத்திய சங்கம் பெற்று தந்துள்ளது. ஏரியா அலவலகம் மாற்றத்தின் பொழுது பராமரிப்பை தவிர நிர்வாகம்,மாற்றல்கள்,ஊழியர் பிரச்சனைகள், உபரி ஊழியர் பயன்பாடு குறித்து நிர்வாகத்தின் நிலை என்ன? விளக்கம் பெறவேண்டும்.
(பட்டாபி உரை தொடரும்

திங்கள், ஏப்ரல் 06, 2015

Digital India: 20K Villages Now Broadband Connected

Digital India: 20K Villages Now Broadband Connected
The committee which was set up by PM Modi to oversee and examine the Digital India vision has reported that as of now, 20,000 villages have been connected via broadband under National Optical Fibre Network (NOFN) plan. At the same time, it has been decided that NOFN would be renamed as BharatNet.
Started in 2011, NOFN (now BharatNet) had been allocated a budget of Rs 20,000 crore with a vision to connect 2,50,000 villages with broadband, within 2 years.
Although the progress has been slow, with only 8% of the initial target achieved in 4 years, officials are now upbeat that the mission would be accomplished as work has been started on warfooting. (But yes, obstacles exist. For example, monkeys are creating trouble in Varanasi and stopping the digital India push)
Initially, it was envisioned that villages would be provided with 100 MBPS speed under this plan, but the target has now been revised to speeds between 2MBPS and 10 MBPS. Yesterday, we had reported that India still has second lowest broadband speeds in Asia Pacific region, with 2MBPS of average speed.
Additionally, the committee has recommended to increase the budget of the mega plan to Rs 72,000 crore from Rs 20,000 crore; which will enable to provide broadband access to households at a discounted rate of Rs 150 per month in poor states. In economically developed states, the committee has recommended a price range of Rs 250 per month.
It is yet not clear as to which states would be classified as poor and economically developed. Interestingly, Andhra Pradesh has already announced that they will offer 15 MBPS broadband connection for only Rs 150 per month.
Earlier this year, we had reported that Department of Telecom (DoT) will join forces with cable operators to roll out last mile broadband connectivity.

சனி, ஏப்ரல் 04, 2015

வாமனனுக்கு வாழ்த்துக்கள்



உட்பகை ஒருபுறம் இருந்தாலும்.. 
உறுபகை நாற்புறமிருந்தாலும்..
இட்ட பணி.. இயக்கப்பணி செய்வதில்...
இணையற்ற கடலூர் மாவட்டத்திற்கு 
இதயம் நிறைந்த நமது வாழ்த்துக்கள்...

மூன்றடியால்  உலகளந்தவன்.. 
கடவுள்  வாமணன்..
மூன்றெழுத்தால்  இயக்கம் காப்பவன் 
கடலூர் வாமனன்...

சொலல்வல்லான்.. சோர்விலான்.. அஞ்சான்..
ஸ்ரீதரை இகழ் வெல்லல்  யார்க்கும் அரிது..
பல்லாண்டு.. வாழ்க.. வாழ்க.. வாழ்கவே ..

வெள்ளி, ஏப்ரல் 03, 2015

தோழர் சந்தேஸ்வர் சிங் உரை




ப்ரல் 21,22 புதுவை வேலை நிறுத்த கூட்டத்தில்
தோழர் சந்தேஸ்வர் சிங் உரை
போரம் தலைவர்கள் அனைவரும் உரைநிகழ்த்தினார்கள்.இன்று நமது நிறுவனம் கடுமையான காலத்தை சந்தித்து வருகிறது.மிக மோசமான நிலையிலும் இல்லை அதே சமயம் மிக நல்ல நிலையிலும் இல்லை. நிறுவன உயரதிகாரிகள் வேறும் பார்வையாளராக,அரசின் முடிவை அமுல் படுத்தும் நிலையில் உள்ளனர். போராட்ட கோரிக்கைகள் மீது ஒரு உருப்படியான பேச்சுவார்த்தை நடத்திடவில்லை.100 சத அரசு பங்குகளை கொண்ட மத்திய அரசு எஜமானன் நிலையிலிருந்து நடந்துகொள்ளாமல்,லாபத்தில் நிறுவனத்தை நட்த்திட முன் வராம்ல், சீரழித்திட,தனியாருக்கு ஆதரவாக திட்டம் போட்டு நடந்து வருகிறது.
01/10/2000ல் நமது நிறுவனம் பொதுதுறையாக மாற்றம் பெற்றது.செப்-2000ல் 3 நாள் வேலைநிறுத்தம்செய்து  அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உடன்பாடு கண்டு பணிபாதுகாப்பு,அரசு ஓய்வுதியம், நிதி ஆதாரஸ்திரதன்மை உத்தரவாதம் பெற்றோம். இன்று இவை மூன்றும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. நமது நிறுவனம் வருடம் தோறும் நட்டம் அடைந்து வருகிறது.ரூ60,000 கோடி உபரி இருந்த நிலையில்,.வட்டிமூலம் பல ஆயிரம் கோடி வட்டி பெற்று வந்தொம்,ரூ7500 கோடி நடப்பு மூலதனத்தை கடனாக அரசு மாற்றி வட்டியுடன் ரூ14,500 கோடியை அரசு நம்மிடம்அபகரித்தது.2010 ல் 3ஜி அலைகற்றை ஏலத்தில் நம்மை அனுமதிக்காமல் நாடுமுலுவதும் சேவை என்று தேவை இல்லாத அலைக்கற்றைகளை நம் மீது சுமத்தி  அதிக படச ஏலத்தொகை ரூ16,000 கோடியை அரசு நம்மிடம் சூறையாடியது .மற்ற  நிறுவனங்கள் 4 அல்லது 5 மாநிலங்கள் ஏலம் எடுத்து முறைகேடாக பயன் படுத்திய பொழுது கண்டுகொள்ளாமல் இருந்தது. சேர்மன் மூலம் காலதாமதம் செய்து அமைச்சரை சந்தித்த் பொழுது அபராத வட்டி ரூ6 கோடி கட்டவேண்டி வந்தது.
1996 ல் நம்மை செல் சேவைக்கு அனுமதிக்கவில்லை.2002 ல் நீதி மன்ற அனுமதி பெற்று செல் சேவை துவக்கினோம்.நமது செயல்பாட்டல் செல்சேவை முதலிட்த்தை நாம் பெற்றோம்.
4.5 மில்லியம் செல் உபகரணம் வாங்கிட கோப்பு அமைச்சரிடம் 2 வருடம் ,தனியார் நிறுவன நிர்பந்த்தால் முடக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் செழித்திட, நம்மை பின்னுக்க்கு தள்ளிட உத்வியது. 2007 ஜூன் 11 வேலை நிறுத்த முடிவால் அமைச்சரிடம் ஒப்பந்தம் கண்டு 50% டெண்டர் விடப்பட்ட்து. ஆனால் உள்துறை இலாக்கா சீன பொருட்களை நாம் பெறக்கூடாது என ஒப்புதல் தர கால்தாமதம் செய்து,பின்னர் அதிக விலைக்கு மேற்க்கு நாடுகளில் வாங்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவஙகள் சீன பொருல் வாங்கிட தடை ஏதுமில்லை. இதன் காரணமாக நாம்கடும் நட்ட்த்தை சந்தித்துள்ளோம்.
நமது நிறுவனம் ஊழல் காரணமாக பாழ்பட்டு வருகிறது.தேவைற்ற உபகரணங்கள் வாங்கப்பட்டு காலாவதியாகி தூங்குகின்றன.தேவையற்ற பொருட்கள் ஏலம் இடுவதற்க்குமுன் காணாமல் போகின்றன, ஏல இடபட்டாலும் முறையாக கணக்கில் வருவதில்லை.டவர் பராமரிப்பு,விரிவாக்கம் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர் நம்பிக்கை,எண்ணிக்கை இழந்து வருகிறோம்.மார்க்கட் பங்கு ஒற்றை இலக்கத்திற்க்கு சரிந்துள்ளது.பராமரிப்புக்கு உபகரணம்,டிராப் வயர்,மோடம், என ஏதுமில்லை.
இந்த சூழ்நிலையில் அனைத்து சங்கங்களும் கூடி விவாதித்து செய் அல்லது  செத்துமடி என்ற சூழ்நிலையை, கணித்து போராட முடிவெடுத்தது.ஆர்ப்பாட்டம்,3 நாள் தார்ணா,டெல்லி பேரணி.50 லட்சம் கையெழுத்துஇயக்கம் என் பல்வேறு இயக்கங்களை நட்த்தி உள்ளோம்.. கேரளா மாநிலம் மிக அதிகமான கையெழுத்து பெற்றுள்ளது. மக்களிடம் சென்று நமது நிறுவனத்தை சீரழிக்கும் அரசின் நடவடிக்கையை எடுத்துரைத்துள்ளோம். நமது நிறுவனத்தை தனியாரிடம் விற்கும் முயற்ச்சிகளை,மலிவான சேவை கிடைத்திட நமது நிறுவனத்தை வேண்டிய அவசியத்தை மக்களிடம் எடுத்துரைத்திட இந்த கையெழுத்துஇயக்கம் பயன்பட்டுள்ளது.
டெல்லிபேரணிக்குபின் சூழ்நிலையை கணக்கில் கொண்டு மார்ச் காலவரையாற்ற வேலை நிறுத்தம் 2 நாள் வேலை நிறுத்தம்  ஆக மாற்றப்பட்டுள்ளது.அதிகாரிகள் அரசி தாளத்திற்க்கு ஆடி, நமது நிறுவனத்தை காத்திட,மோடிஅரசின் தொழிலளார் கொள்கைகளைஅமுல் படுத்தி வருகின்றனர்.
எனவே புது வியூகம் அமைப்பது மாராட்டிய சிவாஜி தந்திரம் போல தாக்குவது மறைவது, பின்னர் தாக்குவது என முடிவு செய்துள்ளோம்.
மத்தியரசுக்கு எதிராக வலுவாக ஏதும் செய்துவிட முடியாது என்பது சரியல்ல.உலகில் எந்த அரசு ஊழியர்களை,ஒழித்துவிடவோ,ஒதுக்கிதள்ளிவிடவோ முடியாது.தொழிலாளார்கள் உலகை படைக்க வல்லவர்கள், மாற்றத்தை உருவாக்க வல்லவர்கள்.நமது ஒன்றுபட்ட சக்தி இதை சாதிக்கும்.இது சரியல்ல அது சரியல்ல என்ற மாச்சிரியங்களை தள்ளி வைத்து அனைத்து தரப்பு ஒற்றுமையை கட்டி போராடி சாதிப்போம்.
 நமது நிறுவனம் ஓட்டை படகு பொல ஊள்ளது.நாம் பெற்ற 3 அம்சம்  பணிபாதுகாப்பு,அரசு ஓய்வுதியம், நிதி ஆதாரஸ்திரதன்மை உத்தரவாதம் இன்று பாதுகாப்பாக இல்லை. ஓய்வூதியர்களுக்கு 78.2% இணைப்பு இல்லை என் மறுக்கப்படுகிறது.கோப்பு அலி கழிக்கப்படுகிறது. அரசு ஜூன் மாதம் 2014ல் தன்னைச்சையாக உத்திரவை உதவி செயலர் வெளியிட்டு நமது நிறுவனம் மூலம் அரசு பெறும் வருமானத்தில் 60% மட்டுமே ஓய்வுதிய செலவுக்கு பயன்படுத்த வேண்டும் . கூடுதல் செலவை நமது நிறுவனம் ஏற்கவேண்டுமென் நிர்பந்தித்து சேர்மன் கையேழுத்திடுள்ளார்.நமக்கு அரசு ஓய்வுதியம், உறுதிபடுத்பட்டுள்ளது என கடிதம் எழுதும் நிர்வாகம் இதை சீரழிக்கவும் திட்டமிடுகிறது.2025 க்குள் அனைவரும் பணி ஓய்வு பேற உள்ளனர்.அவர்களின் ஓய்வுதியம், பாதுகாத்திட இந்த போராட்டம் அவசியம்.

சாம்பிட்ரோடா கமிட்டி, நமது நிறுவன வளர்ச்சிக்கு ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்பஓய்வு30% பங்குகளை விற்க பரிந்துரைத்தது. நம்முடைய ஒற்றுமை அரசு கொள்கையை எதிர்த்து முறியடித்தோம்.இன்று மீண்டும் அந்த நிலை உருவாகியுள்ளது.
பிசிஜி,டிலாய்ட்டி கமிட்டி மோசமான பரிந்துரைகளை நாம் எதிர்த்து,70000 பேர் உபரி என முத்திரை குத்துவதை ஏற்க மாட்டோம்.காலியான இடங்களுக்கு காண்டிராக்ட் முறையில் நியமனம் என்பது வரும் கால சந்ததி நம்மை பழித்துபேசும் நிலை உருவாகிவிடும்.
மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டம்மிக கடும் எதிர்ப்பை சந்த்திதுள்ளது. அரசு கார்ப்பரேட்,மதவாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது.மக்கள் நல திட்டங்களுக்கு நிதி 16.5% குறைக்கப்பட்டுள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய நிர்பந்த அடிபடையில் பொதுதுறை சீரழிக்கப்பட்டு விற்க திட்டமிடப்படுகிறது. அமெரிக்கா போல அரசு எந்த தொழிலையும் செய்யக்கூடாது.குறைவான லேபர்.நிலம்  கொள்ளை அடிக்க மோடி அரசு செயல்படுகிறது.
அமைச்சர் 5 பொதுதுறை நிறுவனம் விற்கபடும் என கூறி உள்ளார். நமது நிறுவனம் ரூ83000 கோடி சொத்து மதிப்புள்ளது.50% சொத்து மதிப்பை தாண்டும் பொழுது நம்மை நலிவடைந்த நிறுவனமாக அறிவித்து விற்க திட்டமிடப்ப்படுகிறது.உயர் அதிகாரிகள் நமது நிறுவனத்தின் பணத்தை பெற்றுக்கொண்டு அரசு ஊழியராக தொடர்கின்றனர். நமது நிறுவனம் காத்திட முனைவது இல்லை. இப்படிப்பட்ட சூழ்னிலையில் நமது ஒற்றுமையை கட்டி அரசு ஓய்வூதியம்,2017ல்-ஊதியகுழு மாற்றம்,ஊதியகுழுமாற்றத்துடன் ஓய்வூதியமாற்றம் பெற்றிட போராடவேண்டும்.

நம்மை காத்திட, நிறுவனத்தை காத்திட,தேசத்தை காத்திட வரும் ஏப்ரல்2 நாள் வேலைநிறுத்த்ம் செய்து காத்திட வேண்டும்.

3G,4G Wi-Fi hotspots

BSNL to invest Rs 7,000 crore for setting up 3G,4G Wi-Fi hotspots


NEW DELHI: State-run telecom operator BSNL will invest Rs 7,000 crore in setting up Wi-Fi hotspots integrated with 3G, 4G networks across the country over the next two to three years, a top company official said. 

"Wi-Fi is an obvious choice for BSNL going forward but it alone cannot be successful. It has to be integrated with 3G, 4G network so that customer can be seamlessly transferred to Wi-Fi. In two to three years, we will be investing Rs 7,000 crore to set up integrated Wi-Fi across the country," chairman and managing director of BSNL Anupam Shrivatava said while speaking at TeleAnalysis event here. 

The company has already rolled out Wi-Fi service in Varanasi and will be extending it to more tourist spots by the end of this year. 

"By end of this financial year, we will have 2,500 Wi-Fi hotpsots," Shrivatava said. 

In addition to this, BSNL has also partnered with QuadGen Wireless for setting up Wi-Fi hotspots under a revenue share model. 

"BSNL is in best position to provide instant bandwidth. We will set up Wi-Fi hotspots and BSNL will provide bandwidth for it. We are committed to set up 1,000 Wi-Fi hotspots by June and another 5,000 by end of this year," QuadGen Wireless founder and chairman CS Rao said. 

QuadGen will set up Wi-Fi hotspots in South and West zone under this partnership. 

"Telecom operators have just committed huge amount in spectrum auction. They will need time to invest in networks. With BSNL we have 18-months window of opportunity to expand Wi-Fi network," Rao said. 

TMTCLU CIRCLE EXECUTIVE AT CUDDALLORE 02 04 2015

TMTCLU ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயற்குழு
கடலூரில் 2-04-2015 அன்று கடலூரில் நடைபெற்றதுகாலை 9-30 மணிக்கு தோழர்.தமிழ்மணி  அவர்கள் தேசியக்கொடி ஏற்றதோழர்.சேது அவர்கள் TMTCLUசங்கக்கொடியை ஏற்றி செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். TMTCLU கடலூர் மாவட்டச் செயலர் தோழர்.G.ரங்கராஜ் வரவேற்புரை நல்க செயற்குழு இனிதே துவங்கியது. மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் அஞ்சலி உரையாற்றினார்தஞ்சை தோழர்.S.நடராஜன் துவக்கவுரையாற்றினார்.மாநிலபொதுசெயலர் தோழர்.R.செல்வம் சங்கத்தின் செயல்பாட்டறிக்கையை சமர்ப்பித்து விளக்கவுறையாற்றினார். TMTCLU மாநிலப் பொருளர் தோழர்.M.விஜய் ஆரோக்கியராஜ் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்து பேசினார். தோழர்.கிள்ளிவளவன் அமைப்பு நிலைபற்றி பேசினார். கடலூர் மாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலர் தோழர்.T.மணிவாசகம், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பொதுசெயலர் தோழர்.K.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர்கள். V.நல்லுசாமி-ஈரோடு, செல்வராஜ்-சேலம், மாரிமுத்து-காரைக்குடி, கலை-தஞ்சாவூர், முனியன்–தர்மபுரி, முருகேசன்–மதுரை, மாரி-காரைக்குடி, , கடலூர் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். தோழர்.தமிழ்மணி,தோழர்.சென்னகேசவன், தோழர்.காமராஜ், தோழர்.ஆர்.கே. ஆகியோர்சிறப்புரையாற்ற,மாநிலசெயலர்.





தோழர்.பட்டாபி அவர்கள் நிறைவுரையாற்றினார். TMTCLU கடலூர் மாவட்டத் தலைவர் தோழர்.குமார் நன்றியுரை வழங்கினார்.

புதன், ஏப்ரல் 01, 2015

தலமட்டக்குழு கூட்டம்

33 வது தலமட்டக்குழு கூட்டம் 01/04/2015 முடிவுகள்
 புதுவை தல மட்டக்குழு கூட்டம் 01/04/2015 அன்று நடைபெற்றது. தலைமை ஏற்ற சீனியர் பொது மேலாளர் நமது மாவட்டத்தில் இந்த ஆண்டு EB மற்றும் பிராட்பேண்டு பகுதிகளில் குறியீடு எட்டப்பட்டது.தரை வழி தொலைபேசி,செல்சேவை குறியீடு எட்டப்படவில்லை. மொத்த வருமானம் 1/3 தரைவழி தொலைபேசி,1/3 செல் சேவை, 1/3 பிராட்பேண்டு மூலம் பெறப்பட்டுள்ளது. தரைவழி தொலைபேசி வருமானம் உயர்த்தப்படவேண்டும்.
ஊழியர்தரப்பு தலமட்டக்குழுகூட்டம் குறித்த காலத்தில் நடத்திட வேண்டும்.இந்த ஆண்டு புதுவை வருவாய் குறைவு  என்பது அதிர்ச்சிசெய்தி எனவே ஊழியர் தரப்பு எல்லாவித ஒத்துழைப்பு தர உறுதியளித்தது.

1)       ஆரோவில் தொலைபேசி நிலைய பேட்டரி மாற்றப்பட்டது.

2)       ஆரோவில் தொலைபேசி நிலைய போர் வெல் பழுதுமற்றும் ,பைப் மாற்றப்பட்டது.

3)       பாகூர் தொலைபேசி நிலைய என்ஜின் ரூம் கதவு பழுது நீக்கப்பட்டது.

4)       பில் கவுண்டர் விடுப்புக்கான விருப்பம் கோரப்படும்.

5)       உழந்தை பில் கவுண்டர் இன்வெர்ட்டர் தொலைபேசி நிலையம் மூலம் வழங்கப்படும்.

6)       சங்க அலுவலகத்திற்க்கு கம்பியூட்டர் வழங்கப்படும்.பிரிண்டர் குறித்து மாநில கவுன்சிலுக்கு பிரச்சனை அனுப்பப்படும்.

7)       செர்த்,குளுணி மருத்துவமனைகள் கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்த்திட அனுமதி வழங்க ஏற்ப்பாடு செய்யப்படும்.


  • பழைய பிரச்சனை தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. மூலகுளம் TD விஸ்தரிப்பை நிராகரிக்க, தலமட்டக்குழுவை அவமதிக்க நிர்வாகத்திற்க்கு உரிமை இல்லை என கடுமையாக  சாடியபின் சீனியர் பொது மேலாளர் தானே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உறுதிகூறினார்.
  • சீருடை ஏப்ரல் மாதம் நிதி பெற்று வழங்கப்படும்.
  • CSC க்கு JAOபணி அமர்த்திட விதிகளில் இடம் இல்லை என கூறப்பட்டது.
  •  ஓய்யூதியபிரச்சனையை கவனித்திட தனி AO/JAO  நியமிக்க கோரப்பட்டது.
  • மேட்டுபாளையம் CSC க்கு 2 மின்விசிறி ஏற்பாடு செய்திடப்படும்..
  • குரோன் டூல்ஸ் வழங்க ஏற்பாடு செய்திடப்படும்,
  • ஊதிய பட்டியல் SDE மட்ட்த்தில் வழங்கிட ஏற்பாடு செய்திடப்படும்,ஊழியர்களுக்கு விடுப்பு, உட்பட அனைத்துக்கும் ஒரு வாரகாலத்திற்க்குள் பயிற்சி அளிக்கப்படும்.
  • ஊழியர் தொலைபேசி,அலைபேசி எண்கள் –டைரி வழஙக பரிசீலிக்கப்படும்.