தோழர்
சந்தேஸ்வர் சிங் உரை
ஃபோரம் தலைவர்கள் அனைவரும் உரைநிகழ்த்தினார்கள்.இன்று
நமது நிறுவனம் கடுமையான காலத்தை சந்தித்து வருகிறது.மிக மோசமான நிலையிலும் இல்லை
அதே சமயம் மிக நல்ல நிலையிலும் இல்லை. நிறுவன உயரதிகாரிகள் வேறும்
பார்வையாளராக,அரசின் முடிவை அமுல் படுத்தும் நிலையில் உள்ளனர். போராட்ட
கோரிக்கைகள் மீது ஒரு உருப்படியான பேச்சுவார்த்தை நடத்திடவில்லை.100 சத அரசு
பங்குகளை கொண்ட மத்திய அரசு எஜமானன் நிலையிலிருந்து நடந்துகொள்ளாமல்,லாபத்தில்
நிறுவனத்தை நட்த்திட முன் வராம்ல், சீரழித்திட,தனியாருக்கு ஆதரவாக திட்டம் போட்டு
நடந்து வருகிறது.
01/10/2000ல் நமது நிறுவனம் பொதுதுறையாக
மாற்றம் பெற்றது.செப்-2000ல் 3 நாள் வேலைநிறுத்தம்செய்து அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உடன்பாடு கண்டு
பணிபாதுகாப்பு,அரசு ஓய்வுதியம், நிதி ஆதாரஸ்திரதன்மை உத்தரவாதம் பெற்றோம். இன்று
இவை மூன்றும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. நமது நிறுவனம் வருடம் தோறும் நட்டம்
அடைந்து வருகிறது.ரூ60,000 கோடி உபரி இருந்த நிலையில்,.வட்டிமூலம் பல ஆயிரம் கோடி
வட்டி பெற்று வந்தொம்,ரூ7500 கோடி நடப்பு மூலதனத்தை கடனாக அரசு மாற்றி வட்டியுடன்
ரூ14,500 கோடியை அரசு நம்மிடம்அபகரித்தது.2010 ல் 3ஜி அலைகற்றை ஏலத்தில் நம்மை
அனுமதிக்காமல் நாடுமுலுவதும் சேவை என்று தேவை இல்லாத அலைக்கற்றைகளை நம் மீது
சுமத்தி அதிக படச ஏலத்தொகை ரூ16,000
கோடியை அரசு நம்மிடம் சூறையாடியது .மற்ற
நிறுவனங்கள் 4 அல்லது 5 மாநிலங்கள் ஏலம் எடுத்து முறைகேடாக பயன் படுத்திய
பொழுது கண்டுகொள்ளாமல் இருந்தது. சேர்மன் மூலம் காலதாமதம் செய்து அமைச்சரை
சந்தித்த் பொழுது அபராத வட்டி ரூ6 கோடி கட்டவேண்டி வந்தது.
1996 ல் நம்மை செல் சேவைக்கு
அனுமதிக்கவில்லை.2002 ல் நீதி மன்ற அனுமதி பெற்று செல் சேவை துவக்கினோம்.நமது செயல்பாட்டல்
செல்சேவை முதலிட்த்தை நாம் பெற்றோம்.
4.5 மில்லியம் செல் உபகரணம் வாங்கிட கோப்பு
அமைச்சரிடம் 2 வருடம் ,தனியார் நிறுவன நிர்பந்த்தால் முடக்கப்பட்டது. தனியார்
நிறுவனங்கள் செழித்திட, நம்மை பின்னுக்க்கு தள்ளிட உத்வியது. 2007 ஜூன் 11 வேலை
நிறுத்த முடிவால் அமைச்சரிடம் ஒப்பந்தம் கண்டு 50% டெண்டர் விடப்பட்ட்து. ஆனால்
உள்துறை இலாக்கா சீன பொருட்களை நாம் பெறக்கூடாது என ஒப்புதல் தர கால்தாமதம்
செய்து,பின்னர் அதிக விலைக்கு மேற்க்கு நாடுகளில் வாங்கப்பட்டுள்ளது.தனியார்
நிறுவஙகள் சீன பொருல் வாங்கிட தடை ஏதுமில்லை. இதன் காரணமாக நாம்கடும் நட்ட்த்தை
சந்தித்துள்ளோம்.
நமது நிறுவனம் ஊழல் காரணமாக பாழ்பட்டு
வருகிறது.தேவைற்ற உபகரணங்கள் வாங்கப்பட்டு காலாவதியாகி தூங்குகின்றன.தேவையற்ற
பொருட்கள் ஏலம் இடுவதற்க்குமுன் காணாமல் போகின்றன, ஏல இடபட்டாலும் முறையாக
கணக்கில் வருவதில்லை.டவர் பராமரிப்பு,விரிவாக்கம் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்
நம்பிக்கை,எண்ணிக்கை இழந்து வருகிறோம்.மார்க்கட் பங்கு ஒற்றை இலக்கத்திற்க்கு
சரிந்துள்ளது.பராமரிப்புக்கு உபகரணம்,டிராப் வயர்,மோடம், என ஏதுமில்லை.
இந்த சூழ்நிலையில் அனைத்து சங்கங்களும்
கூடி விவாதித்து செய் அல்லது செத்துமடி
என்ற சூழ்நிலையை, கணித்து போராட முடிவெடுத்தது.ஆர்ப்பாட்டம்,3 நாள் தார்ணா,டெல்லி
பேரணி.50 லட்சம் கையெழுத்துஇயக்கம் என் பல்வேறு இயக்கங்களை நட்த்தி உள்ளோம்..
கேரளா மாநிலம் மிக அதிகமான கையெழுத்து பெற்றுள்ளது. மக்களிடம் சென்று நமது
நிறுவனத்தை சீரழிக்கும் அரசின் நடவடிக்கையை எடுத்துரைத்துள்ளோம். நமது நிறுவனத்தை
தனியாரிடம் விற்கும் முயற்ச்சிகளை,மலிவான சேவை கிடைத்திட நமது நிறுவனத்தை வேண்டிய
அவசியத்தை மக்களிடம் எடுத்துரைத்திட இந்த கையெழுத்துஇயக்கம் பயன்பட்டுள்ளது.
டெல்லிபேரணிக்குபின் சூழ்நிலையை கணக்கில்
கொண்டு மார்ச் காலவரையாற்ற வேலை நிறுத்தம் 2 நாள் வேலை நிறுத்தம் ஆக மாற்றப்பட்டுள்ளது.அதிகாரிகள் அரசி தாளத்திற்க்கு
ஆடி, நமது நிறுவனத்தை காத்திட,மோடிஅரசின் தொழிலளார் கொள்கைகளைஅமுல் படுத்தி
வருகின்றனர்.
எனவே புது வியூகம் அமைப்பது மாராட்டிய
சிவாஜி தந்திரம் போல தாக்குவது மறைவது, பின்னர் தாக்குவது என முடிவு செய்துள்ளோம்.
மத்தியரசுக்கு எதிராக வலுவாக ஏதும்
செய்துவிட முடியாது என்பது சரியல்ல.உலகில் எந்த அரசு ஊழியர்களை,ஒழித்துவிடவோ,ஒதுக்கிதள்ளிவிடவோ
முடியாது.தொழிலாளார்கள் உலகை படைக்க வல்லவர்கள், மாற்றத்தை உருவாக்க வல்லவர்கள்.நமது
ஒன்றுபட்ட சக்தி இதை சாதிக்கும்.இது சரியல்ல அது சரியல்ல என்ற மாச்சிரியங்களை
தள்ளி வைத்து அனைத்து தரப்பு ஒற்றுமையை கட்டி போராடி சாதிப்போம்.
நமது நிறுவனம் ஓட்டை படகு பொல ஊள்ளது.நாம் பெற்ற
3 அம்சம் பணிபாதுகாப்பு,அரசு ஓய்வுதியம்,
நிதி ஆதாரஸ்திரதன்மை உத்தரவாதம் இன்று பாதுகாப்பாக இல்லை. ஓய்வூதியர்களுக்கு 78.2%
இணைப்பு இல்லை என் மறுக்கப்படுகிறது.கோப்பு அலி கழிக்கப்படுகிறது. அரசு ஜூன் மாதம்
2014ல் தன்னைச்சையாக உத்திரவை உதவி செயலர் வெளியிட்டு நமது நிறுவனம் மூலம் அரசு
பெறும் வருமானத்தில் 60% மட்டுமே ஓய்வுதிய செலவுக்கு பயன்படுத்த வேண்டும் .
கூடுதல் செலவை நமது நிறுவனம் ஏற்கவேண்டுமென் நிர்பந்தித்து சேர்மன்
கையேழுத்திடுள்ளார்.நமக்கு அரசு ஓய்வுதியம், உறுதிபடுத்பட்டுள்ளது என கடிதம்
எழுதும் நிர்வாகம் இதை சீரழிக்கவும் திட்டமிடுகிறது.2025 க்குள் அனைவரும் பணி
ஓய்வு பேற உள்ளனர்.அவர்களின் ஓய்வுதியம், பாதுகாத்திட இந்த போராட்டம் அவசியம்.
சாம்பிட்ரோடா கமிட்டி, நமது நிறுவன
வளர்ச்சிக்கு ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்பஓய்வு30% பங்குகளை விற்க பரிந்துரைத்தது.
நம்முடைய ஒற்றுமை அரசு கொள்கையை எதிர்த்து முறியடித்தோம்.இன்று மீண்டும் அந்த நிலை
உருவாகியுள்ளது.
பிசிஜி,டிலாய்ட்டி கமிட்டி மோசமான பரிந்துரைகளை
நாம் எதிர்த்து,70000 பேர் உபரி என முத்திரை குத்துவதை ஏற்க மாட்டோம்.காலியான
இடங்களுக்கு காண்டிராக்ட் முறையில் நியமனம் என்பது வரும் கால சந்ததி நம்மை பழித்துபேசும்
நிலை உருவாகிவிடும்.
மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டம்மிக
கடும் எதிர்ப்பை சந்த்திதுள்ளது. அரசு கார்ப்பரேட்,மதவாதிகளால் நடத்தப்பட்டு
வருகிறது.மக்கள் நல திட்டங்களுக்கு நிதி 16.5% குறைக்கப்பட்டுள்ளது.கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய நிர்பந்த அடிபடையில்
பொதுதுறை சீரழிக்கப்பட்டு விற்க திட்டமிடப்படுகிறது. அமெரிக்கா போல அரசு எந்த
தொழிலையும் செய்யக்கூடாது.குறைவான லேபர்.நிலம்
கொள்ளை அடிக்க மோடி அரசு செயல்படுகிறது.
அமைச்சர் 5 பொதுதுறை நிறுவனம் விற்கபடும்
என கூறி உள்ளார். நமது நிறுவனம் ரூ83000 கோடி சொத்து மதிப்புள்ளது.50% சொத்து
மதிப்பை தாண்டும் பொழுது நம்மை நலிவடைந்த நிறுவனமாக அறிவித்து விற்க
திட்டமிடப்ப்படுகிறது.உயர் அதிகாரிகள் நமது நிறுவனத்தின் பணத்தை பெற்றுக்கொண்டு
அரசு ஊழியராக தொடர்கின்றனர். நமது நிறுவனம் காத்திட முனைவது இல்லை. இப்படிப்பட்ட
சூழ்னிலையில் நமது ஒற்றுமையை கட்டி அரசு ஓய்வூதியம்,2017ல்-ஊதியகுழு மாற்றம்,ஊதியகுழுமாற்றத்துடன்
ஓய்வூதியமாற்றம் பெற்றிட போராடவேண்டும்.
நம்மை காத்திட, நிறுவனத்தை காத்திட,தேசத்தை
காத்திட வரும் ஏப்ரல்2 நாள் வேலைநிறுத்த்ம் செய்து காத்திட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக