வியாழன், அக்டோபர் 08, 2015

செய்திகள்

செய்திகள் 

தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில் ST காலியிடங்களில்  7 தோழர்கள் வெற்றி பெற்றதாக  தமிழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

09/10/2015 முதல்  GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

பதவி பெயர் மாற்றத்தில் அதன் குழுவின் பரிந்துரை  அமுல்படுத்தப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
திறந்த நிலைப்பல்கலைக் கழகங்கள் மூலம் பெறப்பட்ட +2 படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.


JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் சாதிச்சான்றிதழ் பிரச்சினையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்.அந்தோணிச்சாமி, SS அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த மத்திய சங்கமும் தமிழ் மாநில சங்கமும்  முயன்று வருகின்றன.

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி  TOWER CORPORATION அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவில் BSNL சார்பாக அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும்   DOT செயலரை நமது கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

TM பதவிகளில் ST  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடி மட்ட ஊழியர்களின் STAGNATION - ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை  பற்றி விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

BUSINESS AREA CONSOLIDATION

 நமது மாவட்ட நிர்வாக அமைப்பு  SSA விலிருந்து  Business area  ஆக மா றும் பொழுது  ஏற்படும்  மாறுதல்கள்  ,பிரச்சனைகளை  குறித்து  இந்த உத்திரவு  குறித்தும்  முழுமையாக  பரிசீலிக்கவேண்டும்