33 வது தலமட்டக்குழு கூட்டம் 01/04/2015
முடிவுகள்
புதுவை தல மட்டக்குழு கூட்டம் 01/04/2015 அன்று நடைபெற்றது. தலைமை
ஏற்ற சீனியர் பொது மேலாளர் நமது மாவட்டத்தில் இந்த ஆண்டு EB மற்றும் பிராட்பேண்டு பகுதிகளில் குறியீடு
எட்டப்பட்டது.தரை வழி தொலைபேசி,செல்சேவை குறியீடு எட்டப்படவில்லை. மொத்த வருமானம்
1/3 தரைவழி தொலைபேசி,1/3 செல் சேவை, 1/3 பிராட்பேண்டு மூலம் பெறப்பட்டுள்ளது. தரைவழி
தொலைபேசி வருமானம் உயர்த்தப்படவேண்டும்.
ஊழியர்தரப்பு
தலமட்டக்குழுகூட்டம் குறித்த காலத்தில் நடத்திட வேண்டும்.இந்த ஆண்டு புதுவை வருவாய் குறைவு என்பது அதிர்ச்சிசெய்தி எனவே ஊழியர் தரப்பு எல்லாவித ஒத்துழைப்பு தர உறுதியளித்தது.
1) ஆரோவில் தொலைபேசி நிலைய பேட்டரி
மாற்றப்பட்டது.
2) ஆரோவில் தொலைபேசி நிலைய போர் வெல்
பழுதுமற்றும் ,பைப் மாற்றப்பட்டது.
3) பாகூர் தொலைபேசி நிலைய என்ஜின் ரூம் கதவு
பழுது நீக்கப்பட்டது.
4) பில் கவுண்டர் விடுப்புக்கான விருப்பம்
கோரப்படும்.
5) உழந்தை பில் கவுண்டர் இன்வெர்ட்டர்
தொலைபேசி நிலையம் மூலம் வழங்கப்படும்.
6) சங்க அலுவலகத்திற்க்கு கம்பியூட்டர்
வழங்கப்படும்.பிரிண்டர் குறித்து மாநில கவுன்சிலுக்கு பிரச்சனை அனுப்பப்படும்.
7) செர்த்,குளுணி மருத்துவமனைகள் கட்டணம்
செலுத்தி மருத்துவம் பார்த்திட அனுமதி வழங்க ஏற்ப்பாடு செய்யப்படும்.
- பழைய பிரச்சனை தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. மூலகுளம் TD விஸ்தரிப்பை நிராகரிக்க, தலமட்டக்குழுவை அவமதிக்க நிர்வாகத்திற்க்கு உரிமை இல்லை என கடுமையாக சாடியபின் சீனியர் பொது மேலாளர் தானே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உறுதிகூறினார்.
- சீருடை ஏப்ரல் மாதம் நிதி பெற்று வழங்கப்படும்.
- CSC க்கு JAOபணி அமர்த்திட விதிகளில் இடம் இல்லை என கூறப்பட்டது.
- ஓய்யூதியபிரச்சனையை கவனித்திட தனி AO/JAO நியமிக்க கோரப்பட்டது.
- மேட்டுபாளையம் CSC க்கு 2 மின்விசிறி ஏற்பாடு செய்திடப்படும்..
- குரோன் டூல்ஸ் வழங்க ஏற்பாடு செய்திடப்படும்,
- ஊதிய பட்டியல் SDE மட்ட்த்தில் வழங்கிட ஏற்பாடு செய்திடப்படும்,ஊழியர்களுக்கு விடுப்பு, உட்பட அனைத்துக்கும் ஒரு வாரகாலத்திற்க்குள் பயிற்சி அளிக்கப்படும்.
- ஊழியர் தொலைபேசி,அலைபேசி எண்கள் –டைரி வழஙக பரிசீலிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக