மத்திய
செயற்குழு- 01/11/2015
to 03/11/2015
வாயிற்களின்
நகரம் அவுரஙபாத், இடதுசாரி தொழிற்சங்க தளமாக, இருக்கும் நகரம், மஹாராஸ்ட்ரா
மாநிலத்தில் உறுப்பினர் சரிபார்ப்பில் வெற்றிபெரும் நகரம் என பல பெருமைகளை பெற்ற
இடத்தில் நமது மத்திய செயற்குழு நடைபெற்றது. மத்திய சங்க தலைவர்,செயலர்
கொடியேற்றிட,மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ்திட, AITUC தோழர். பாலசந்திர காங்கோ தலைமை உரையில் ,நமது
சங்க போராட்டங்கள், அவுரஙபாத், நகரின் தனித்துவம் குறித்து உரையாற்றினார். மத்திய
சங்க செயலர் ஆய்படு பொருள் குறித்து முன்னுரை வழங்கி, மாநிலம் வாரியாக மதிப்பீடுகளை
முன் வைத்தார். தலைவர் பிரச்சனைகளை,பட்டியலிட்டு உரை
நிகழ்த்தினார்.
மாநிலசெயலர்கள்,தங்கள்
மாநில தல நிலைமைகள், உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல். போனஸ்,மாற்றல் கொள்கை, GPF பட்டுவாடா, டவர் கார்ப்பரேசன்.MTNL-BSNL இணைப்பு,கவுன்சில் செயல் பாடுகள்,78.2% HRA , பென்சன் 60:40 உத்திரவு மாற்றம், ஊதிய
மாற்றம்,அமைப்பு பிரச்சனைகள், வேலை நிறுத்தங்கள், ஊதிய தேக்க நிலை, கல்வி தகுதி தளர்த்துதல்,என பல்வேறு தலைப்புகளில் விவாதம்
நடை பெற்றது. தமிழகம் சார்பாக 28 தோழர்கள் பங்கேற்றனர். தமிழ மாநில சார்பாளர்கள்
முழுமையாக அவையில் இருந்து பங்கேற்றனர். மாநில செயலர். தோழர்.பட்டாபி, சம்மேளன
செயலர் தோழர் SSG தோழர்.காமராஜ் சிறப்பு அழைப்பாளர், விவாதத்தில் கலந்துகொண்டனர்.
தோழர்பட்டாபி
உரை:- 3 ம் நாள் மாநில செயலர் உரை நம்பிக்கை அளிக்கும் உரை.மத்திய சங்க செயல்பாட்டை
பாராட்டி, பிரச்சனை தீர்வுகளை பட்டியலிட்டார்.23 தேர்தல் வாக்குறுதிகளில் 9 தீர்வு,4 தீர்வு
பெறும் நிலை,7 பரிசீலனை,3 நிராகரிப்பு.
1)
அதிகாரிக்கு வழங்கியது போல ரூ200 மாதம் தோறும் சேவைக்கு பேசிட,வருடம்
தோரும் சுமார் ரூ50 கோடி சலுகை.
2)
பயிற்சிக்கான ஊதியம் 70 % புதியஊதியத்தில்
01/10/2007 முதல் 8000 ஊழியர்கள் பலன்.
3)
ஒரு இன்கிரிமெண்ட் பலன் ஊதிய இழப்பை தடுத்திட TTA கேடருக்கு பெற்றது. மற்ற கேடர்களுக்கு பரிசீலனை.
4)
TM/TTA/JTO/JAO-- RR மாற்றம்.சேவைகாலம் 5 ஆண்டாக குறைப்பு
5)
தற்காலிக JTO நீதிமன்ற தீர்ப்பின்படி ஊதியம், RR மாற்றம்.மறுபயிற்சி குறித்து மத்தியசங்கம்
தீர்வுபெற்றுதரவேண்டும்.
6)
விடுப்பு ஊதியம் பணிஓய்வுக்கு மறுதினம் பட்டுவாடா.
7)
விடுப்பட்டவர்களுக்கு P.O வழங்குதல், 01/01/2000 முதல் நிலுவை.
8)
நகரஙகள் சீரமைப்பு.கூடுதல் HRA.
9)
அலவசுகள் மாற்றிட மறுத்தாலும் 78.2% அடிப்படயில் HRA
10)
தகவல் உரிமை சட்டப்படி தகவல் பெற்று மத்தியரசு முதன் முறையாக IDA ஊதிய ஓய்வூதியம் தனி கணக்கு, தனி நிதி
ஒதுக்கீடு.
11)
மகளீருக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு. 10 பொதுதுறையில் மட்டும்
அமுல்.நமது நிறுவனம் 2 வது ஆகும்.
12)
புதிய TTA/-
RR ல் உள்ள குறிபாடுகள் மாற்றம்.
13)
தவறான போனஸ் ஓப்பந்தம், PMS முறை போனஸ் ஊதியஒப்பந்தம் காரணமாக மறுக்கபட்ட போனஸ் பெற புதியஒப்பந்தம் காண போராட்டம்.
14)
பரிவு அடைப்படை பணி மீண்டும் மாநில நிர்வாகத்திற்க்கு மாற்றம்.
குறைகள் தீர்க்க வழிமுறைகள் விவாதம்.
15)
60:40 சத அமைச்சரவை உத்திரவை மாற்றிடவேண்டும்.எதிர்கால ஊதிய மாற்றத்தை
பாதிக்கும்.
16)
கட்டாய ஓய்வூதிய உத்திரவை முறியடிக்க வேண்டும்.
17)
JAO தேர்வு
மதிப்பெண்கள் பெற்று பதவிபெறாத தமிழக ஊழியர்களுக்கு வேறு மாநில பதவிகளுக்கு,
அல்ல்து தற்காலிக பதவிஉயர்வு பெற்றுதரவேண்டும்.
18)
MTNL-BSNL
இணைப்பில் நிர்வாக உறுப்பினர்களிடம் அனைத்து அம்சங்களையும் விவாதிக்கவேண்டும்.
டிலாயிட் பரிந்துரைகளில் அமுலாக்கம் செய்யப்பட்டு வருகிறத். மாற்றல் மாவட்ட
அளவில் என்றாளும் மற்ற அதிகாரங்கள் பிசினஸ் ஏரியா என்பது பாதகங்களை ஊருவாக்கும்.
19)
OFC/BB தனியார் மய ஆபத்துகள்.
20)
தேக்க நிலையில் 16000 பேர்.மேலும் ஊதிய இழப்பு நிரந்தம் .ஊதிய ஒப்பந்த
பாதக அம்ச உத்திரவு மாற்றப்படவேண்டும்.
21)
பாரத் நெட் பணி ரூ70000 கோடி திட்டம் ப்ச்ன்ல் நீக்கி தனியாருக்கு
தாரை வார்க்கமுயற்சி.
22)
PWA
திரும்ப பெற்றது,லைசன்ஸ் கட்டணம் கட்ட மறுப்பு.
23)
MTNL-BSNL
இணைப்பில் HR பிரச்சனகள் .
24)
வலுவான மாநிலஙகள் கூடுதல் வாக்குகள் பெற முயற்சி.உறுப்பினர்
சரிபார்ப்பில் நமது வழிமுறைகள், திட்டம் குறித்து உரை நிகழ்த்தினார்
.
தோழர்SSG உரை.:- ஃபோரம் குறித்தும்,பெரியண்ணன் செயல்பாடு
கருத்துகள் இருந்தாலும் ஃபோரமில் தொடர வேண்டும். அமைப்பு பிரச்சனைகள்
தீர்க்கப்படவேண்டும்.போனஸ்,உறுப்பினர் சரிபார்ப்பு, ஊழியர் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார்.
தோழர் காமராஜ் உரை:- புதிய அங்கீகார விதிகள், கவுன்சில் விதிகளில்
மாற்றம் தேவை. பிசினஸ் ஏரியா மாற்றம் ஊழியர் பிரச்சனைகள்,
TM/TTA/JTO/JAO பதவிஉயர்வு தேர்வுகளில் கல்விதகுதி
தள்ர்த்திட வேண்டும். பரிவு அடிப்படை பணி மறுக்கப்பட்டவர்களுக்கு பணமாக ஈடுவழங்குதல்,
மருத்துவ வசதிகளில் முழு கட்டணத்தை வழங்குதல்,
ரூ7100 ஊதிய நிலை ரூ6550 மாற்ற பாதிப்பு களைதல். பண்டிகை கால முன்பணம்
உயர்த்துதல். குறித்து உரையாற்றினார்.
பொது செயலர் கீழகண்டஒழுங்குவிதிகளை கடை பிடிக்க வழியுறுதினார்.
மாநில செயலர்கள், அ இ சங்க நிர்வாகிகள், வேறு மாநிலத்திற்க்கு. மாநிலசெயலர்
அழைப்பின்றி , அறியாமல் செல்லக்கூடாது.
தமிழகம் விவாகரங்களில் சென்னை மாநிலசெயலர் தலையிடக்கூடாது. அமைப்பு
பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடாது STR பிரச்சனயில் மத்திய சங்கம் தனது நிலையை ஏற்கனவே
தெளிவு படுத்தி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாற்றமில்லை.
பொது அரங்கம் ,புகைப்படம் அ இ பொதுசெயல்ர் உரை தொடரும்..........